பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)
பகிருங்கள்

பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)

பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஐனா (PMSSY)) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறைவான செலவில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கச்செய்வதும், குறிப்பாக போதிய வசதிகளற்ற மாநிலங்களில் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதுமே பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் நோக்கமாகும்.

அமலாக்கம்

முதல்கட்டம்

பிரதமரின் சுகாதாரப் காப்பிட்டுத்திட்டத்தின் முதல்கட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டது. அனைத்திந்திய மருத்துவ சேவை நிறுவனம் (AIMS- எய்ம்ஸ்) போன்ற ஆறு புதிய நிறுவனங்களை ஏற்படுத்துவதும், தற்போதுள்ள 13 அரசு மருத்துக் கல்லூரிகளை எய்ம்ஸ் தரத்திற்கு உயர்த்துவதும் ஆகும்.

எய்ம்ஸ் தரத்திலான ஆறு புதிய நிறுவனங்களை, பீகார் (பாட்னா), சத்தீஸ்கர் (ராய்ப்பூர்), மத்திய பிரதேசம் (போபால்), ஓடிசா (புவனேஸ்வரம்), இராஜஸ்தான் (ஜோத்பூர்), உத்தராஞ்சல் (ரிஷிகேஷ்) ஆகிய ஆறு மாநிலங்களில் தலா ஒன்று என்ற கணக்கில் ஏற்படுத்துவது முடிவாகியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் உத்தேசச் செலவு ரூ. 840 கோடி. இந்த மாநிலங்கள் யாவும், கல்வியறிவு, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை போன்ற சமூக - பொருளாதாரக் காரணிகள், மக்கள் தொகைக்கும் மருத்துவமனை படுக்கை வசதிகளுக்கும் இடையேயான விகிதம், தீவரமான தொற்று நோய்கள் பிடித்துள்ள அளவு, குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதாரக் குறியீடுகள் ஆகியவற்றைக்  கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் தலா 960 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் (மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 500, சிறப்பு - உயர்சிறப்பு மருத்துவத்திற்கு 300, தீவரக்கண்கானிப்பு – விபத்துத்தீவர சிகிச்சைக்கு 30, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு மருத்துவத்திற்கு 30, ஆயுஷ்க்கு 30 என்ற கணக்கில்) ஏற்படுத்தப்பட்டு, 42 விதமான சிறப்பு - உயர்சிறப்பு மருத்துவ வசதிகள் வழங்கப்படும். இவை ஒவ்வொன்றிலும் தலா நூறு இளநிலை மருத்துவ படிப்பு (MBBS) மாணவர்கள் சேர்க்கப்படுவதுடன், இந்திய மருத்துவக்கழகத்தின் பரிந்துரைப்படி முதுநிலை – ஆராய்ச்சி மருத்துவப்படிப்புகளும், செவிலியர் கல்லூரிகளும் தொடங்கப்படும்.

இதை தவிர தற்போது பத்து மாநிலங்களில் செயல்பட்டு வரும் 13 மருத்துவ நிறுவனங்கள் தலா ரூ. 120 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 100 கோடி, மாநில அரசின் பங்கு ரூ. 200 கோடி அவை:

 • அரசு மருத்துவகல்லூரி, ஜம்மு
 • அரசு மருத்துவக்கல்லூரி, ஶ்ரீநகர்
 • கெல்கத்தாமருத்துவ கல்லூரி, கொல்கத்தா
 • சஞ்சய்காந்திமுதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ
 • பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மருத்துவக்கல்லூரி, வாரணாசி
 • நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதரபாத்
 • ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம், திருப்பதி
 • அரசு மருத்துவக் கல்லூரி , சேலம்.
 • பி.ஜே. மருத்துவக்கல்லூரி, பெங்களுரு
 • அரசு மருத்துவகல்லூரி, திருவனந்தபுரம்
 • ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனம், ராஞ்சி
 • மானிய மருத்துவக்கல்லூரி மற்றும் ஶ்ரீ.ஜே.ஜே. குழும மருத்துவமனைகள், மும்பை.

இரண்டாம் கட்டம்

பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மேற்கு வங்கத்திலும், உத்திர பிரதேசத்திலும் மேலும் இரண்டு எய்ம்ஸ் தரத்திலான நிறுவனங்களை ஏற்படுத்த அரசு அனுமதித்துள்ளது. மேலும் கீழ்க்கண்ட ஆறு மருத்துவ கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.

 • அரசு மருத்துவகல்லூரி, அமிர்தசரஸ்
 • அரசு மருத்துவக்கல்லூரி, தாண்டா (இமாசலப்பிரதேசம்)
 • அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை
 • அரசு மருத்துவக்கல்லூரி, நாக்பூர்
 • அலிகர் முஸ்ஸீம் பல்கலைக்கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி
 • பண்டிட் பி.டி ஷர்மா மருத்து அறிவியல் பட்டமேற்படிப்பு நிறுவனம், ரோகத்

இந்த எய்ம்ஸ் தரத்திலான நிறுவனம் ஒவ்வொன்றுக்குமான மதிப்பீட்டு செலவு ரூ.823 கோடி. தரம் மேம்படுத்துவதற்காக இரண்டாம் கட்டத்தில் தெரிவாகியுள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய அரசின் பங்காக தலா ரூ. 125 கோடி வழங்கப்படும்.

மூன்றாம் கட்டம்

மூன்றாம் கட்டத்தில் கீழ்க்கண்ட மருத்துவக் கல்லூரிகளைத் தரம் உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 • அரசு மருத்துவக்கல்லூரி, ஜான்சி (உத்திர பிரதேசம்)
 • அரசு மருத்துவக் கல்லூரி, ரேவா (மத்திய பிரதேசம்)
 • அரசு மருத்துவக்கல்லூரி, கோரக்புர் (உத்திர பிரதேசம்)
 • அரசு மருத்துவகல்லூரி, தர்பங்கா (பீகார்)
 • அரசு மருத்துவ கல்லுரி, கோழிக்கோடு (கேரளா)
 • விஜய நகர மருத்துவ அறிவியல் நிறுவனம், பெல்லாரி (கர்நாடகா)
 • அரசு மருத்துவ கல்லூரி, முஸாபர்புர் (பீகார்)

தரம் மேம்படுத்துவதற்கான மதிப்பீட்டுச் செலவான ரூ.150 கோடியில், மத்திய அரசு ரூ. 125 கோடியை வழங்க, எஞ்சிய ரூ. 25 கோடியை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும்.

ஆதாரம் : http://pmssy-mohfw.nic.in/Default.aspx

2.94736842105
நெவிகடிஒன்
Back to top