பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான முதல் திட்டம்)

தகுதி:

வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள்.

பிரிமியம்(கட்டணம்):

ஓர் ஆண்டுக்கு ரூ.12/-.

கட்டணம் செலுத்தும் முறை:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்.

காப்பீட்டுத்தொகை:

விபத்தினால் இறப்பு ஏற்பட்டாலும் முழுமையாக ஊனமைடைந்தாலும் இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும்.  பகுதி இயலாமையாக இருந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.

தகுதி :

ஆதார் எண்ணை இணைத்த வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் இத்திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீட்டுத்தொகைக்கான விதிமுறைகள்:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தவேண்டும். பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டால், வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிரிமியக் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

யார் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது?

அனைத்து பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனங்களும், இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிற மற்ற ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும், வங்கிகளுடன் இணைந்து இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும்.

அரசின் பங்களிப்பு:

  • பல்வேறு அமைச்சகங்களும், மக்களுக்குத் தமது நிதியில் இருந்து அல்லது, கோரப்படாமல் இருக்கும் பணத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நல நிதியத்தில் இருந்து பிரிமியக் கட்டணத்தைச் செலுத்தலாம்.   ஒவ்வொரு ஆண்டும் இதற்கான வழி தீர்மானிக்கப்படும்.
  • இந்தத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவினை மத்திய அரசு ஏற்கும்.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான இரண்டாவது திட்டம்)

தகுதி:

வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள். ஐம்பது வயது நிறைவடைவதற்குமுன் இதிட்டத்தில் சேருபவர்கள், தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் 55 வயதுவரை ஆயுள் காப்பீடு உண்டு.

பிரிமியம்(கட்டணம்):

ஓர் ஆண்டுக்கு ரூ.330/- வங்கக் கணக்கில் இருந்து ஒரே தவணையில் எடுத்துக் கொள்ளப்படும்.

கட்டணம் செலுத்தும் முறை:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்.

காப்பீட்டுத்தொகை:

எந்தக் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டாலும இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும்.

காப்பீட்டுத்தொகைக்கான விதிமுறைகள்:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தவேண்டும். பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டால், வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிரிமியக் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

யார் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும், இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிற மற்ற ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும், வங்கிகளுடன் இணைந்து இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும்.

அரசின் பங்களிப்பு:

  • பல்வேறு அமைச்சகங்களும், மக்களுக்குத் தமது நிதியில் இருந்து அல்லது, கோரப்படாமல் இருக்கும் பணத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நல நிதியத்தில் இருந்து பிரிமியக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான வழி தீர்மானிக்கப்படும்.
  • இந்தத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவினை மத்திய அரசு ஏற்கும்.

ஆதாரம் : PIB

3.11235955056
நெவிகடிஒன்
Back to top