பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / ‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’
பகிருங்கள்

‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’

‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’ பற்றிய குறிப்புகள்

முதுநிலை கல்வியை அமெரிக்காவில் தொடர விரும்பும் மாணவர்களுக்கு, பொருளாதாரம் ஒரு தடைக்கல்லாய் இருக்கக்கூடாது என்பதற்காக, கொண்டுவரப்பட்டது தான் ‘புல்பிரைட் நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’

கல்வியில் சிறந்த இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்க - இந்திய கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) இணைந்து, இந்த கல்வி உதவித்தொகையை வழங்குகிறது.

தகுதிகள்

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகள்

  • சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் ஆய்வு,
  • உயர் கல்வி நிர்வாகம்,
  • சர்வதேச சட்டக் கல்வி,
  • பொது சுகாதாரம்,
  • பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு,
  • நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல்,
  • கலை மற்றும் கலாசார மேலாண்மை,
  • பாரம்பரிய பாதுகாப்பு
  • அருங்காட்சியக படிப்புகள்

போன்ற ஏதேனும் ஒரு துறையில், மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம்.

குறிப்பு

வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.,), பொது நிர்வாகம் (எம்.ஏ., அல்லது எம்.எஸ்), இரட்டை பட்டப்படிப்பான எம்.ஏ.,/எம்.பி.ஏ., எம்.ஏ.,/எம்.எஸ்., மற்றும் எம்.ஏ.,/எம்.பி.பி., போன்றவற்றை தேர்வு செய்யும் இந்திய மாணவர்களும் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை

ஜெ-1 விசா, கல்விக் கட்டணம், இதர வசிப்பிட செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் பிற விவரங்களுக்கு http://www.usief.org.in என்ற இணைப்பைக் காணவும்.

ஆதாரம் : தினமலர்

3.11627906977
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top