பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

கல்வி உதவித் தொகை

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு):

  1. இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு ரூ.2400
  2. இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பு ரூ.2400
  3. இளங்கலை சட்டப் பட்டப் படிப்பு ரூ.2400
  4. இளங்கலை விவசாயப் பட்டப் படிப்பு ரூ.2400
  5. தொழிற் பயிற்சி கல்வி ரூ.1000
  6. மேல்நிலைக் கல்வி ரூ.1200
  7. பொறியியல் பட்டயக் கல்வி ரூ.1440
  8. மருத்துவ பட்டயக் கல்வி ரூ.1440

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாயும், இரண்டாம் மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஐநூறு ரூபாயும் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

புத்தக உதவித்தொகை

தொழிலாளர் நல வாரியம் 154 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 360 புத்தக உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இது தவிர, 17 தொழிலாளர்களின் குழந்தைகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற ஐந்தாயிரத்து 355 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி

தொழிலாளர்களும், அவர்களைச் சார்ந்தோறும் அடிப்படைக் கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

2.95
LAKSHMANAN Jan 09, 2020 10:52 PM

தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவித்தொகை வாங்குவது எப்படி

சி சுரேஷ் Oct 05, 2019 12:55 PM

மிகவும் உதவியாக உள்ள திட்டம்.நன்று

ARULMOZHI R Aug 28, 2016 03:32 PM

இத்தி்ட்டம் மிக சிறந்த தி்ட்டமாக கருதுகிறேன் தொடர்ந்து செய்தால் நாடு முன்னேறும் என நம்புகிறேன்

அருள் மொழி ஆர்
94*****89

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top