பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / தேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்

தேசிய தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகை திட்டம் (National Means-cum-Merit Scholarship Scheme) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம் 2008 மே மாதம் தொடங்கப்பட்டது. பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

உதவித்தொகை

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவர்களுக்கு மாதம் ரூ.500/- என்ற கணக்கில் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.  மாநில அரசுப்பள்ளி அல்லது அரசின் உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க இந்த உதவித் தொகை கிடைக்கும்.

தகுதிகள்

  • பெற்றோரிண் ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கும் மிகாத மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெறலாம். மாநில அரசின் ஒதுக்கீட்டு விதிகளின்படி இந்த உதவித்தொகையிலும் ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்பபடும்.
  • ஏழாம் வகுப்பில் 55 சதவீதத்திற்குக் குறையாமல் (அதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களுக்கு 50 சதவீதம்) மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்கள்.
  • அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடத்தும் பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் படிக்கின்றவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.  கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவகர் நவோதயா வித்யாலயா ஆகியவற்றில் படிப்பவர்கள் இத்திட்டத்தில் உதவி பெற முடியாது. அதே போல மாநில அரசுகள் நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் படிப்பவர்களும், தனியார் பள்ளிகளில் படிப்பவர்களும் இந்தக் கல்வி உதவித் தொகை பெற இயலாது.
  • கல்வி உதவித் தொகை வழங்கப்படும் சமயத்தில், எட்டாம் வகுப்புத் தேர்வில் 55 சதவீதத்திற்கும் குறையாமல் (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு 50ரூ) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்தாம் வகுப்பு முதல் +2 வரை (பன்னிரண்டாம் வகுப்பு) அதிகபட்சமாக நான்காண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை

இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான மாணவர்களைத் தெரிவு செய்ய மாநில அரசு ஒரு தேர்வு நடத்தும். அதில் தெரிவு பெற்றவர்களுக்கு தேசிய அளவிலான (இரண்டாவது கட்டம்) தேர்வினை தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் கவுன்சில் நடத்தும். இதனடிப்படையில் மாநிலங்களிலும் யூனியன் பிதேசங்களிலும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஆதாரம் : http://mhrd.gov.in/nmms

2.775
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top