பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / மதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை

மதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இசுலாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த நல் மதிப்பெண் பெற்ற மாணவ/மாணவிகளுக்கு உதவி இத்திட்டம் 2007-2008 நிதியாண்டில் துவங்கப்பட்டது.

எந்தெந்த கல்விக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது ?

மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி (Technical and Professional courses) பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள (isted) 70 தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏதும் உள்ளதா ?

தமிழ்நாட்டில் உள்ள கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களாகும்.
அ)இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ/ப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), சென்னை
ஆ)நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.), திருச்சி
இ) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ/ப் இன்/பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்டு மேனு/பேகச்ரிங் (I.I.I.T.D&M)இ காஞ்சிபுரம்.
ஈ) நேஷனல் இன்ஸ்டியூட் ஆ/ப் /பேஷன் டெக்னாலஜி (என்.ஐ.எப்.டி)இ சென்னை.

யார் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ?

மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம்/ தொழிற்கல்வி பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ / மாணவியர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்நுட்ப / தொழிற் கல்விகளின் விபரப்பட்டியல் என்ற இணைய முகவரியில் உள்ளது.

கல்வி உதவித்தொகையின் அளவு எவ்வளவு ?

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட (listed) நிறுவனங்களில் பயிலும் மாணவ/ மாணவியருக்கு அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் 100 விழுக்காடும் திரும்ப வழங்கப்படும்.
பிற நிறுவனங்களில் விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு அதிகபட்சம் முப்பதாயிரம் ரூபாயும் , வீட்டிலிருந்து வந்து படிப்பவர்களுக்கு அதிகபட்சம் இருபதாயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

பிற மாநிலங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயன் பெற முடியுமா ?

முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ/மாணவியர் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் கல்வி கற்றாலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும் ?

விண்ணப்ப படிவங்களை கல்வி நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளலாம் (அல்லது) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

யாரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கல்வி நிறுவனத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இயலுமா ?

இயலு யல்(monoscholarship) என்ற இணைய தள முகவரியில் ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஏளிமையாக பூர்த்தி செய்வதற்காக கேள்விப்பட்டியல் (FAQ) மற்றும் கையேடு (manual) இத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் ?

அ) வருமானச் சான்றிதழ் (கடந்த நிதியாண்டிற்குரியது)
ஆ)சாதிச்சான்றிதழ்
இ) மதிப்பெண் பட்டியல்
வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் (அல்லது) ரூ.10/- மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் (ழேn-தரனiஉயைட ளவயஅp pயிநச)இ என்ற இணைய முகவரியில் உள்ள மாதிரிப் படிவத்தினை படியிறக்கி (னழறடெழயன) பூர்த்தி செய்து, பெற்றோர்/பாதுகாவலர் உறுதி ஆவண (யுககனையஎவை) கையொப்பமிட்டும் சமர்ப்பிக்கலாம்.

ஒரே குடும்பத்தை சார்ந்த எத்தனை மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் ?

ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

3.05714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top