பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / மாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்

மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய பல்வேறு தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தேசிய உதவித் தொகைகள்

கல்வி மேம்பாடு , தரத்தி்லும் அளவிலும் அதிகரிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் வேறுபாடுகளை நீக்கி. சமமான  கல்வி பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிறப்பு முயற்சிகளை கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (The National Council for Educational Research and Training NCERT) மேற்கொண்டுள்ளது. தேசிய அளவில் மாணவர்களிடையே  அறிவுக்கூர்மை கண்டறியும்  திட்டம் (National Talent Search Scheme) மூலமாக  என்சிஇஆர்டி, மாணவர்களின் கல்வித் திறனை அங்கீகரித்து ,ஊக்கப்படுத்துகிறது.
கலை மற்றும் புதுமையான திறன்களுக்கான சாச்சா நேரு உதவித்தொகை மூலமாக  தனித்திறன் வாய்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு பாராட்டுகிறது.

VIII – ஆம் வகுப்புக்கான தேசிய அளவிலான திறன் அறியும் தேர்வு.

என்.சி.இ.ஆர்.டி-யின்  தேசிய அளவிலான அறிவுக்கூர்மை கண்டறியும் திட்டம் முதன்மை நடவடிக்கையாக 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திறன் வாய்ந்த மாணவர்களைக் அடையாளம் கண்டு அவர்களின் திறமை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஆகையால் இந்தத் திட்டம், அறிவியல், சமூக அறிவியல், பொறியியல், மருத்துவம், மேலாண்மை மற்றும் சட்டம் முதலிய பிரிவுகளை உள்ளடக்குகிறது. திறமை வாய்ந்த மாணவர்களுக்கு மாதாமாதம் உதவித் தொகை அளிப்பதன் மூலம் அவர்களை கவுரவப்படுத்தி உதவியும் செய்கிறது.

உதவித் தொகைகள்:8–ஆம் வகுப்புக்கானத் தேர்வுகளில் பங்கு பெறும் ஒவ்வொரு க்ரூப்பிற்கும்  நடத்தப்பட்டத் தேர்வுகளின் அடிப்படையில் 1000 உதவித் தொகைகள் வழங்கப்படும்.

தகுதி: இந்தத் தேர்வில் அரசு அங்கீகாரம் பெற்றப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்குபெறலாம். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் தேர்வுகளை பள்ளிகள் இருக்கும் இடங்களில் நடத்தும்.  தேர்வு மையங்களைப் பற்றிய குறிப்பிட்ட வரையறைகள் எதுவும் இருக்காது.

தேர்வு: VIII –ஆம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு முறை பின்வருமாறு:

கட்டம்I மாநில/யூனியன் பிரதேச அளவிலான தேர்வுகள், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கணிதம் ஆகியப் பாடங்களில் நடத்தப்படும். அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை, (அ) மனத்திறன் தேர்வு (MAT) மற்றும் (ஆ) கல்வித் திறன் தேர்வு (SAT).

கட்டம்II தேசிய அளவிலான தேர்வுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.(அ) மனத் திறன் தேர்வு,(ஆ) கல்வித் திறன் தேர்வு , இது சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படும். (இ) நேர்க்காணல்.  தேசிய அளவிலான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

தேசிய அளவிலான அறிவுத் திறன் கண்டறியும் திட்டம் (X-ஆம் வகுப்பு முறைசார் பள்ளி மாணவர்கள்)

மாணவர்களின் திறன்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான  தேசிய கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் 1000 உதவித் தொகைகளை அளிக்கும். இதில் 150 உதவித் தொகைகள்  பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும்  75, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நோக்கம் பத்தாம் வகுப்பு  மாணவர்களின் அறிவுத் திறனை அடையாளம் கண்டு அந்த ஆண்டின் முடிவில் அவர்களுக்கு பண உதவி அளிப்பது. அதன் மூலம் அவர்கள் தங்கள்  திறனை மேலும் வளர்த்துக் கொண்டு அதன் மூலம் நாட்டிற்கும் சேவை செய்யலாம்.

தகுதி
அனைத்து வகையான அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் அதாவது, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் போன்றவைகளும் இவற்றில் அடங்கும்.  பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும்,. அந்தந்தப் பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாநில அளவில் நடைபெறும் இந்தத் தேர்வு எழுதும் தகுதியைப் பெறுகிறார்கள். தேர்வு மையங்கள் பற்றிய எந்தவிதமான வரையறைகளும் இதற்கு இல்லை.

விண்ணப்பிப்பதுஎப்படி?
மேற்கண்ட தேர்வுகளுக்காக, தத்தம் மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் மூலமாகப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் அல்லது சுற்றறிக்கைகள் வருகின்றனவா என்று பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கவனத்துடன் பார்த்து வரவேண்டும்.  மேலும் அந்த விளம்பரம்/சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல செயல்படவேண்டும்.

தேர்வு
மாநில அளவிலான தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது; பிரிவு-1 மனத் திறன் தேர்வு, பிரிவு II - கல்வித் திறன் தேர்வு. என்சிஇஆர்டி நடத்தும் பள்ளிகள் அளவிலான இரண்டாவது கட்டத் தேர்விற்குத் தேவையான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வு.

கலை மற்றும் புதுமையான திறன்களுக்கான சாச்சா நேரு உதவித் தொகை

தேசிய பால் பவன்: பால் ஸ்ரீ திட்டம்:

தேசிய பால் பவன் நாடு முழுவதிலுமான கலைத் திறனை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நாட்டில் 73 மாநில மற்றும் மாவட்ட பால் பவன்கள் உள்ளன. பால் ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக 1995 ல் பல்வேறு வயது அடிப்படையில் திறன் வாய்ந்த குழந்தைகளை கவுரவிக்க பால் பவன் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. கலை மற்றும் புதுமையானத் திறன்களுக்கான சாச்சா நேரு உதவித் தொகை ஒன்பது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு குழந்தைகள் அவர்களின் மேல் நிலை மற்றும் உயர் மேல் நிலைப் படிப்பைத் தொடர்வதற்காக வழங்கப்படுகிறது.

பால் ஸ்ரீ திட்டம் பின்வரும் விஷயங்களுக்கான திறன்களை அடையாளம் காண்கிறது:

1. ஆக்கபூர்வ செயல்திறன்
2. ஆக்கபூர்வ கலைத்திறன்
3. ஆக்கபூர்வ  புதுமையான விஞ்ஞானத் திறன்
4. ஆக்கபூர்வ  எழுத்துத் திறன்

ஆக்கத் திறன் வாய்ந்த குழந்தைகளை தேசிய பால் பவன் நடத்தும்  மூன்று நிலைகளிலான  செயல்பாடுகள் மூலம்  தேர்ந்தெடுக்கிறது. அவை:
1. உள்ளூர் அளவில்- 2-நாள் முகாம்கள்  ஏற்பாடு செய்து அதன் மூலம் 8 குழந்தைகள் (வயது அடிப்படையில் ஒவ்வொரு குழுக்களிலும் 2பேர் வீதம்) 
2. தொகுதி அளவில் 3 நாள் முகாம்கள் ஏற்பாடு செய்து அதில் உள்ளூர் நிபுணர்கள், ஆறு தொகுதிகளிலிருந்து சிறப்புத் திறன் பெற்றவர்கள், அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய ,தெற்கு-I மற்றும் தெற்கு-II குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க அதில் பங்கு பெறுவார்கள்.
3. தேசிய அளவில் 4-நாள் முகாம் நாட்டின் ஆறு தொகுதிகளிலிருந்து  குழந்தைகளுக்காக  ஏற்பாடு செய்யப்படும்.  நான்கு பிரிவுகளின் பிரதிநிதிகள்,குழந்தைகளின் ஆக்கத் திறன்களை கவனிக்கவும் மதிப்பிடவும் நிபுணர்களின் குழு மற்றும்  விசேஷத் திறன் வாய்ந்தவர்கள்அடை யாளம் காணப்பட்டு, நியமிக்கப்படுவார்கள்.

முழுமையான தகவல் அறிய இங்கே கிளிக் செய்யவும் (பால் ஸ்ரீ விருதுகள்)

ஒலிம்பியாட்ஸ்

ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.

தேசிய சைபர் ஒலிம்பியாட்

தேசிய தகவல் தொழில் நுட்ப ஒலிம்பியாட் என்பதுதான் நாட்டின் இப்படிப்பட்ட ஒலிம்பியாட் வகைகளில் முதலானது. இளைய சமுதாயத்தினரிடையே திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள தேசிய அளவில் நடத்தப்படும் திறன் தேடல் போட்டி இது. சவாலை எதிர்கொள்ளும் உணர்வையும், போட்டி உணர்வையும் இளைய சமுதாயத்தினரிடையே  கொண்டுவந்து, கம்ப்யூட்டரைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் கணினி  மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டப்பட்ட  பிரச்சினைகளை  புரிந்துகொள்ளவும் கணினியைத் தங்கள் வருங்கால வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தகுதி
சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பிலி்ருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இந்த தேசிய சைபர் ஒலிம்பியாட் தேர்வுகளில் கலந்துகொளளலாம்.9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு  மாணவர்கள் தங்கள் வருங்கால தொழிலாக கலை, வணிகவியல், விஞ்ஞானம் இவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பது அவசியம். ஏனெனில் இந்தப் போட்டிகளின் நோக்கமே  மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன்களை சோதிப்பது.

தேசிய அறிவியல் ஒலிம்பியாட்

தேசிய அறிவியல் ஒலிம்ப்பியாட் மூன்றாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் இதில் பங்கேற்று தேசிய அளவில் உயர அவர்களை வரவேற்கிறது. முதல் கட்டத் தேர்வு அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே பள்ளி வேலை நேரத்திலேயே நடைபெறும். குறைந்தது 50 மாணவர்களையாவது பதிவு செய்துகொள்ளும்  பள்ளிகளுக்கே ஒலிம்பியாடில் பங்குபெற அனுமதி கிடைக்கும்.

மாணவர்கள் பதிவு செய்துகொள்வது எப்படி? இந்தத் தேர்வில் 3ம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பங்கு பெறலாம். அந்தந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக அதற்காக வரையறுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளதுபோல பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.  பள்ளிகளுக்கு மற்றும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பப் படிவங்களுடன் தகவல்கள் அடங்கிய கையேடுகள் இணைக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அஞ்சல் செய்யப்படும்.

தேசிய கணித ஒலிம்பியாட்

தேசிய அளவிலான கணித ஒலிம்பியாட் என்னும் செயல்பாடு 1986 முதல் உயர்நிலைக் கணிதத்திற்கான தேசிய வாரியத்தின் (National Board for Higher Mathematics - NBHM's) முதன்மையான  செயல்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. உயர் நிலைப் பள்ளி மாணவர்களிடையே கணிதத் திறனை அடையாளம் காண்பதுதான் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. NBHM  அமைப்பு, சர்வ தேச ஒலிம்ப்பியாட்  தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய மாணவர்களின் குழுவைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யவும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.

ஒலிம்ப்பியாட் போட்டிகளைத் திறம்பட நிர்வகித்து நடத்த, நாடு முழுவதும் 16 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சர்வ தேச கணித ஒலிம்ப்பியாடில் (IMO) இந்தியாவின் பங்கேற்பு சம்பந்தப்பட்ட ஒலிம்ப்பியாட் திட்டம் பின்வரும் கட்டங்களை உள்ளடக்கியது:

கட்டம் 1 : பிராந்திய கணித ஒலிம்ப்பியாட் :
பிராந்திய கணித ஒலிம்ப்பியாட் பொதுவாக, நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்படுகின்றன. அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த XI ஆம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்எம்ஓ வில் பங்குபெறலாம். 6லிருந்து 7 கணக்குகள் வரை இதில் இடம் பெறும். இந்த எழுத்துத் தேர்வின்  கால அவகாசம் 3 மணி நேரம்.

கட்டம் 2 : இந்திய தேசிய கணித ஒலிம்ப்பியாட்:
ஐஎன்எம்ஓ  ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பிராந்தியங்களில் பல்வேறு மையங்களில் பிப்ரவரி முதல் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும். பல்வேறு பிராந்தியங்களில் ஆர்எம்ஓ வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே ஐஎன்எம்ஓவில் பங்குபெற முடியும். ஐஎன்எம்ஓ நான்கு மணி நேரம் நடைபெறும் எழுத்துத் தேர்வு; வினாத் தாள்கள் மத்தியில் தயார் செய்யப்படுவதால் நாடு முழுவதும் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஐஎன்எம்ஓவில்  முதல் 30-35 இடங்களைப் பெறும் மாணவர்கள்  சிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

கட்டம் 3 : சர்வதேச கணித ஒலிம்ப்பியாட் பயிற்சி முகாம் :
ஐஎன்எம்ஓ சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே/ஜுன் மாதங்களில்  ஒருமாத காலத்திற்கான முகாம்பளில் பங்கு பெற அழைக்கப்படுவார்கள். தவிர, முந்தைய ஆண்டு ஐஎன்எம்ஓவில் சிறப்பு சான்றிதழ் பெற்று, ஆண்டு முழுவதும் திருப்திகரமாக அஞ்சல் வழி போதனை முறையை முடித்தவர்களும்கூட இரண்டாவது சுற்று பயிற்சிக்காக அழைக்கப்படுவார்கள்.  முகாம்களில் நடத்தப்படும் பல்வேறு செலக்ஷன் தேர்வுகள் மூலமாக ஜுனியர், சீனியர் என்ற  இரண்டு குழுக்களிலிருந்தும் மொத்தம் மிகச் சிறந்த ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  இந்த் ஆறு பேர் சர்வ தேச கணித ஒலிம்ப்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்குபெறுவார்கள்.

கட்டம் 4: சர்வதேச கணித ஒலிம்ப்பியாட்முகாமின் முடிவில் ஆறு-உறுப்பினர்கள், ஒரு தலைவர் மற்றும் உப தலைவர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்படும். பொதுவாக வேறு ஒரு நாட்டில் ஜூலை மாதத்தில்  நடைபெறும் சர்வதேச கணித ஒலிம்ப்பியாட்(ஐஎம்ஓ)  தேர்வில் இந்தக் குழு இந்தியாவின் சார்பில் பங்குபெறும். ஐஎம்ஓ தேர்வுகள் இரண்டு நான்கரை மணிநேர எழுத்துத் தேர்வுகளைக் கொண்டது. இவை இரண்டு நாட்கள் நடைபெறும். ஒரு தேர்வு முடிந்தவுடன் குறைந்தது ஒருநாள் இடைவெளி இருக்கும். ஐஎம்ஓ தேர்வு நடைபெற உள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர சுமார் இரண்டு வாரங்கள் பிடிக்கும். தங்கம், வெள்ளி மற்றும் தாமிரப் பதக்கங்களை ஐஎம்ஓவில் பெறும் மாணவர்கள், அதைத் தொடர்ந்து வரும் ஆண்டில் நடைபெறும் பயிற்சி முகாமின் இறுதியில் நடைபெறும் விழாவில் என்பிஹெச்எம் –இடமிருந்து ரொக்கப் பரிசாக  முறையே ரூ.5000/-, ரூ,4000/- ,மற்றும் ரூ.3000/- பெறுவார்கள். மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) இந்த 8-உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு அவர்களின் பயணத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும். என்பிஹெச்எம் நாடு முழுவதும் நடைபெறும் தேர்வுகளுக்கான செலவுகள் மற்றும் சர்வதேச அளவில் பங்குபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்படும் செலவுகளையும் மேற்கொள்கிறது.

கணித ஒலிம்ப்பியாடுக்கான பாடத்திட்டம் : பட்டப் படிப்புக்கு முந்தைய கணிதம், பிராந்திய, தேசிய மற்றும் சர்தேச அளவிலான கணித ஒலிம்ப்பியாட் தேர்வுகளுக்கான பாடத்திட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பியாட் பாடத்திற்கு பின்வரும் இரண்டு புத்தகங்களை பயன்படுத்தலாம்:

Mathematics Olympiad Primer, by V. Krishnamurthy, C.R. Pranesachar, K.N. Ranganathan and B.J. Venkatachala (Interline Publishing Pvt. Ltd., Bangalore).

Challenge and Thrill of Pre-College Mathematics, by V. Krishnamurthy, C.R. Pranesachar, K.N. Ranganathan and B.J. Venkatachala (New Age International Publishers, New Delhi)

முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள : http://www.math.iisc.ac.in/

தேசிய தகுதிக்கான உதவித்தொகைத் திட்டம்

திட்ட அமலாக்கம்

1961 - 62 முதல், தேசிய உதவித் தொகைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வுதவித் தொகைத் திட்டத்தின் நோக்க பள்ளிக் கல்விக்குப் பிறகு சிறந்த அறிவாற்றல் பெற்ற மாணவர்கள் வறுமையின் காரணமாகத் தங்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமல் போவதிலிருந்து மீண்டு கல்வியைத் தொடர வேண்டும் என்பதாகும். கிராமப்புறத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கான திட்டம் 1971 -72 முதல் 6 - 12ஆம் வகுப்பு முதல் தொடர்ந்து கிடைக்க வழிசெய்கிறது. கல்வியில் சமவாய்ப்புப் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டங்கள் மத்திய அரசின் உதவியோடு நடைபெறும் திட்டமாக ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் வரை தொடரும் படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசுத் துறையானது இத்தகைய திட்டங்களை இணைத்து நடைமுறைப்படுத்துவதற்காகத் தேசியத் தகுதிக்கான உதவித்தொகைத் திட்டதை (National Scholarship Scheme) உருவாக்கியுள்ளது. இத்திருத்தியமைக்கப்பட்ட திட்டம் உதவித்தொகையின் அளவு, அதைப் பெறுவதற்கான தகுதி ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துரைக்கிறது.

நோக்கங்கள்

இத்திட்டத்தின் நோக்கம், கிராமப்புறங்களில் 9, 10ஆம் வகுப்புக்களில் படிக்கும் தகுதிமிக்க மாணவர்களுக்கு நிதி உதவித் தொகை அளிப்பதாகும். மேலும் தகுதிமிக்க மாணவர்களுக்கு மேனிலைப் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரை அரசுப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க உதவிசெய்வதாகும்.

வாய்ப்புகள்

கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9, 10ஆம் வகுப்புப் படிப்பதற்கான உதவித் தொகை அதற்கான மேம்பாட்டுப் பகுதிகளில் கிடைக்கும். மேனிலைப் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரையிலான படிப்புகளுக்கு மாநில அளவில் அந்தப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களில்/யூனியன் பிரதேசத்தில் கிடைக்கும். இவ்வுதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர் எந்த மாநிலத்தில்/ யூனியன் பிரதேசத்தில் வசிக்கிறாரோ அந்தந்த அரசினால், அவர் வெற்றி பெற்ற தேர்வு முடிவின் அடிப்படையில் அளிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மாநில அரசு/ யூனியன்பிரதேச நிருவாகத்தால் கண்டறியப்படும்.

உதவித்தொகை பெறுவதற்கு உரியோரும் தகுதியும்

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, 9, 10ஆம் வகுப்புகளுக்கு உரிய உதவித் தொகைகளைப் பெறுவதற்குக் உரியவர் ஆவார்.

அறிவியல் மற்றும் வணிகவியல் பாட முறையில் படித்த மாணவர்களில், 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், அறிவியல் சாரா பாட முறையில் படித்த மாணவர்கள் 55% மதிப்பெண் பெற்றவர்கள், கீழே குறிப்பிட்ட தேர்வுகளில் பெற்றிருக்க வேண்டும். அவ்வப்போது அறிவிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவு செய்பவர்களை மட்டுமே தேசிய தகுதிக்கான உதவித் தொகையை அதற்கான வகுப்பு/படிப்புக்குப் பெற பரிசீலிக்க முடியும்.

  • 10ஆம் வகுப்பு/மெட்ரிக்குளேஷன்/உயர்நிலைப் பள்ளி - +2 நிலை/புகுமுக வகுப்பு/முன் பட்டவகுப்புக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு
  • 10 + 2 முறையில் மேனிலைக் கல்வித் தேர்வு வாரியம்/ இடைநிலை/ புகுமுக வகுப்பு/ முன்பட்ட வகுப்பு - முதலாண்டு பி.ஏ/பி.எஸ்ஸி/பி.காம்/ பி.ஆர்கியாலஜி முதலிய பட்டப் படிப்புகள் முதலான கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு

தேசிய தகுதிக்கான உதவித் தொகையைப் பெறும் மாணவர் வேறு உதவித் தொகைகள்/ஊதிய உதவிகள் எதனையும் பெறக்கூடாது.

முழுநேர வேலையில் உள்ள மாணவர் எவரும் இவ்வுதவித் தொகையைப் பெறத் தகுதியற்றவர் ஆவார்.

இவ்வுதவித் தொகையைப் பெறும் திறமையான மாணவர் எவரும் தாம் படிக்கும் நிறுவனம் அளிக்கும் கட்டணச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

விண்ணப்பிக்கும் மாணவர் தகுதிக்கான தேர்வை உரிய ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றிருந்தால் இவ்வுதவித் தொகை பெறுவதற்கான பரிசீலினைக்கு உரியவர் ஆகமாட்டார்.

பெற்றோர் வருமான உச்சவரம்பு

ஆண்டு வருமானம் எல்லா வகையிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மிகாத பெற்றோர்/ காப்பாளரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வரும் எந்தவகையான உதவிதொகையும் அளிக்கப்பெறும்.

3.08860759494
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top