பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / உள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை

மாணவர்கள் உள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான உதவித்தொகை

பணம் செலவழிக்க முடிபவர்களுக்கே தரமான கல்வி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், பொருளாதார வசதி மிகமுக்கியமான ஒன்றாகிவிட்டது. ‘ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி?’ எனப் பல பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். சிலர் சிலவித உதவித்தொகைகளை பெற்றும் இருப்பீர்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் படித்துவரும் (உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி படிப்புகள்) மொத்த மாணவர்களில் அதிக சதவீதத்தினர் தங்களுக்கு என இருக்கும் உதவித்தொகைகளை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

அதேபோல் இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுக்கு கல்வி (ஸ்காலர்ஷிப் பெற்றும்/பெறாமலும்) பயில மாணவர்கள் செல்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் மாணவர்கள் பல நாடுகளுக்குச் செல்கின்றனர். இம்மாணவர்களில் வெளிநாட்டு உதவித்தொகை பெறுவோர் பட்டியலில் 10% கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். காரணம், தமிழக பெற்றோர் பலருக்கு மாணவர்களுக்கான உதவித்தொகைகள் இத்தனை உள்ளனவா? எப்படி? எப்போது? விண்ணப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

ஒவ்வொரு பள்ளியிலும் 1ம் வகுப்பு முதல் +2 வரையிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் பிற்பட்டோருக்குப் பிற்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், சிறுபான்மையினருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் உதவித்தொகை வழங்குகின்றன. தனியார் பள்ளியில் படித்தாலும் இந்த உதவித்தொகைகள் வழங்கப்படும். இந்த உதவித்தொகையைப் பெற பள்ளி அலுவலகம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பள்ளி முதல்வர் மூலம் மாவட்ட உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலத்துறை) அவர்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவற்றுக்கு எந்த மதிப்பெண் அளவீடும் தேவை இல்லை. உதாரணமாக, ‘ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை’ பெற ‘ஆதிதிராவிடர்’ என ஜாதிச்சான்று இருந்தால் போதும்.

இதேபோல் தனியார் நிறுவனங்கள், அரசின் வாரியங்கள், மத்திய அரசு, அகில இந்திய அளவில் உள்ள N.G.O-க்கள் பெரிய அளவில் செயல்படும் N.G.O-க்கள், வெளிநாட்டுத் தூதர்கள், ஆசிய வங்கி, உலக வங்கி, காமன்வெல்த் நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, பல வெளிநாட்டு அரசுகள் உதவுகின்றன.

இந்த அனைத்து உதவித்தொகைகளையும் பெற விரும்பும் மாணவர்களும், பெற்றோர்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு கல்வி உதவித்தொகைகளைப் பெற்று பயனடையலாம்.

அனைத்து கல்வி உதவித்தொகைகளைப் பெற

 • www.scholarshipsinindia.com,
 • www.mhrd.gov.in

குறிப்பிட்ட பிரிவினருக்கான உதவி பெற

 • www.tahdco.tn.gov.in
 • www.tn.gov.in/adidravider welfare
 • www.nsfdc.nic.in
 • www.india.gov.in/citizen/study

பிற்பட்டோர் உதவி பெற

 • www.tn.gov.in/backward
 • www.tn.vog.in/schemes/bcmbcw

சிறுபான்மையினர் உதவி பெற

www.tn.gov.in/minorities

முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை

www.tn.gov.in/exservicemenwalfare

UGC (பல்கலைக்கழக மானியக் குழு)

www.ugc.ac.in

உலக வங்கி உதவி பெற

www.worldbank.org

காமன்வெல்த் நாடுகள் உதவி பெற

www.commonwealth.com

மேலும் கீழ்க்கண்ட வலைத்தளங்களிலும் பல பொதுவான உதவிகள்/கடன்கள் பற்றி அறியலாம். (வெளிநாட்டு உதவிகளுக்கு சென்னையில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை நேரில் அணுகியும் விவரம் பெறலாம்)

 • www.studyguideindia.com
 • www.national
 • www.scholarshipsexam.com
 • www.unicef.org.in
 • www.unesco.org

ஆதாரம் : குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

3.12727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top