பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை (Pre-Matric Scholarship for Students with Disabilities) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

குறிக்கோள்

1) மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடக்கப் பள்ளிக்குப் பிறகு உயர்நிலைப் பள்ளிகளிலும் தொடர்ந்து படிக்க உதவுவதும், அவர்கள் படிப்பை நிறுத்திவிடாமல் தடுப்பதும்.

2) மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒன்பது/பத்து வகுப்புகளில், சோர்ந்துபோகாமல் சிறப்பாகப் படிக்கத் தூண்டுவது.

3) மாற்றுத்திறனாளிகள் கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொள்வதற்காக எதிர்கொள்ளும் பல உடலியல், நிதியியல், உளவியல், மனநிலைத் தடைகளைத் தகர்த்து, தமக்குரிய கண்ணியமான இடத்தைச் சமூகத்தில் பெறுவதற்கும், தமது வாழ்க்கைக்கான ஆதாரங்களைத் தாமே பெற்றுக் கொள்வதற்கும் படிப்பு மூலம் தயார்படுத்துவது.

நோக்கம்

பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்த பின்னர் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு அங்கீகரித்துள்ள அனைத்துப் பட்ட வகுப்புகள் மற்றும் பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்கும் பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறாளிகள் (சமவாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, முழு கங்கேற்பு) சட்டம் 1995 மற்றும் ஆட்டிஸம், மூளைப் பக்கவாதம், மனநலப் பாதிப்பு, பல்வித ஊனம் கொண்டவர்களுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1999, மற்றும் வழக்கத்தில் உள்ள ஏனைய சட்டங்களின்படியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும், 9,10,11,12 வகுப்புகளில் படிப்பதற்கும் பின்னர் டிப்ளமோ (பட்டயம்), பட்டம், முதுநிலைப் பட்டம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்திய குடிமக்களான மாணவர்கள் மட்டுமே இதற்குத் தகுதி உடையவர்கள். மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதிகளும் நிபந்தனைகளும்

பொதுவான நிபந்தனைகள்

  • இந்தியக் குடிமக்களான மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.
  • 40 சதவீதத்திற்கும் குறைவான ஊனம் உள்ளவர்கள் (மாநில அரசு/யூனியன் பிரதேச அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குழுவால் சான்றளிக்கப்பட வேண்டும்) தகுதி அற்றவர்கள்,
  • ஒரு குடும்பத்தில் மாற்றுத்திறனாளியான இரண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்தத் திட்டத்தில் உதவித் தொகை வழங்கப்படும். இரண்டாவது பிள்ளை, இரட்டைப் பிள்ளையாக இருந்தால், இரட்டைகள் இருவருக்கும் (ஊனமிருந்தால்) கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
  • எந்த வகுப்பில் படித்தாலும், அந்த வகுப்பில் படிக்க ஓராண்டுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். அதாவது உதவித் தொகை பெறும்போது ஒரு வகுப்பில் தேர்ச்சி அடையாவிட்டால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பில் படிக்கும்போது உதவித் தொகை கிடைக்காது. பின்னர் தேர்ச்சி பெற்று அடுத்த உயர்வகுப்புக்குச் சென்ற பிறகு உதவித் தொகை கிடைக்கும்.
  • இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் மாணவர்கள், மற்ற எந்தத்திட்டத்தின் கீழும் உதவித் தொகை பெறுவபராக இருக்கக் கூடாது. வேறு உதவித்தொகையும் கிடைத்தால், அவற்றில் தனக்கு மிகவும் பயனுள்ள ஒன்றை மட்டும் தேர்வு செய்து தான்படிக்கும் கல்வி நிறுவனத் தலைவர் மூலமாகத் தெரிவித்துவிட வேண்டும்.  எனினும், மாநில அரசு வழங்கும் இலவச விடுதி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது, புத்தகங்கள் வாங்கவும், கல்வி உபகரணங்களை வாங்கவும், உண்டுறை வசதிக்காகவும் மாநில அரசிடம் இருந்து நிதி உதவியையும் பெறலாம்.
  • மத்திய/மாநில அரசுகளின் நிதி உதவியுடன், தேர்வுக்கான முன்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, அந்தப் பயிற்சி வகுப்புகளில் படிக்கின்றவரைக்கும் இந்த உதவித் தொகை கிடைக்காது.

பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய உதவித்தொகை பெற

  • ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை அரசுப்பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி அல்லது மத்திய/மாநிலக் கல்வி வாரியம் அங்கீகரித்துள்ள பள்ளிகளில் முழுநேர வகுப்பில் படிக்க வேண்டும்.

கல்வி உதவித் தொகையின் மதிப்பு

பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வித் உதவித் தொகை திட்டத்தில், படிப்புக்காலம் முழுவதற்கும் கீழ்கண்டவாறு உதவித் தொகை வழங்கப்படும்.

கல்வி உதவித் தொகை விகிதங்கள்

விபரங்கள்

வீட்டில் இருந்து வருவோர்

விடுதியில் தங்கிப் பயில்வோர்

மாதாந்திர கல்வி உதவித் தொகை (ஓராண்டில் பத்து மாதங்களுக்கு வழங்கப்படும்)

ரூ. 350

ரூ. 600

பாட நூல்கள் மற்றும் குறிப்பேடுகள் வாங்க (ஆண்டு ஒன்றுக்கு)

ரூ. 750

ரூ.1600

சலுகைகள்

சலுகைகள்

ரூபாய் (அளவு)

பார்வையற்ற மாணவர்களுக்கு படித்துக் காட்டுபவருக்கான மாதாந்திரப்படி

160

கல்விக்கூட வளாகத்திற்குள்ளேயே இருக்கின்ற விடுதியில் தங்கிப் பயிலாத மாணவருக்கு மாதாந்திர போக்குவரத்துப்படி

160

கடுமையான ஊனம் உள்ள (80% க்கும் மேல்) மாணவர்களை வீட்டில் இருந்து கல்வி நிலையத்திற்கு அழைத்து வருகின்றவர்க்கு மாதாந்திரப்படி

160

விடுதியில் தங்கிப்பயிலும் மிகவும் கடுமையான ஊனம் உள்ள மாற்றுத் திறளனாளி மாணவருக்கு, உதவியாளர் ஒருவர் அவசியத் தேவை என்கிற நிலையில், அவருக்கு உதவுகின்ற விடுதிப்பணியாளர் ஒருவருக்கு மாதாந்திர உதவிப்படி

160

மனநலம் குன்றிய மாணவர்களுக்கு மாதாந்திர பயிற்றுவிப்புப்படி

240

ஆதாரம் : http://scholarships.gov.in

2.72972972973
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top