பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை

அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி என்பது ஓர் அடிப்படை உரிமை. ஓர் ஆசிரியராக நீங்கள் காகிதத்தில் உள்ள சட்டத்தினை செயல்படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறீர்கள். பள்ளியில் உள்ள கல்வியை பாதியில் விட்டுச் சென்ற மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினரின் (SC, ST) குழந்தைகள், சமுதாயத்தில் சிறுபான்மையினர் பிரிவில் உள்ள குழந்தைகள், இடம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்து கல்வி கற்க தற்போது அரசு அனைத்து முயற்சியையும் செய்து வருகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், அனைத்து நிலைகளிலும் உள்ள குழந்தைகள் கல்வி பெறச் செய்வதற்கும் அரசாங்கம் இத்திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. ஓர் ஆசிரியராக நீவிர் சட்டத்தையும் அரசாங்க நெறிமுறையையும் பயன்படுத்தி எவ்வாறு ஒரு குழந்தை எந்த சூழலில் இருப்பினும் தன் உரிமையான கல்வியைப் பெற உதவமுடியும் என்பதை இந்த அலகு விவரிக்கிறது. இதற்கு தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது உங்கள் பள்ளிகளுக்கு / நிறுவனத்துக்கு தேவையான வளங்களைப் பெற என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை அறிய உங்களுக்கு உதவும். சிறந்த முறையில் பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அளவில் பங்கேற்று முடிவெடுத்தலில் இந்த புரிதல் உங்களுக்கு உதவும்.

கற்றல் நோக்கங்கள்

இந்த அலகை கற்ற பின்பு நீங்கள் அறிய வேண்டியவை அனைவருக்கும் தொடக்கக் கல்வியின் பல்வேறு திட்டங்களை மதிப்பிட பல்வேறு வளங்களை அடையாளம் காணுதல், செயல்முறைகளை விவாதித்தல். உங்கள் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் சந்திக்கக்கூடிய இடர்ப்பாடுகளை பகுத்தாய்தல். உங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள சமூக வளங்கள் மற்றும் அப்பகுதியின் சிறப்புத்தன்மை குறித்து விவாதித்தல். தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆர்வமான, மகிழ்ச்சியான மற்றும் பொருத்தமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சிறப்பான செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தல். நீங்கள் கற்பித்தலின் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், ஊரட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள், கருத்தாளர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆகியோரின் பங்கு பற்றி விவரித்தல். அனைவருக்கும் தொடக்கக் கல்வி நடைமுறைப் படுத்துவதில் பயன்படுத்தப்பட்ட உத்திகள், அனைவருக்கும் தொடக்க கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை சார்ந்த கட்டமைப்பிற்கு, வழிவகை செய்கிறது. உத்திகள் என்பது இருக்கின்ற வளங்களை சிறப்பாக பயன்படுத்தி நோக்கங்களை அடைவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டமிடல்.

பரவலாக்கப்பட்ட தொடக்கக் கல்வி மேலாண்மை

மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட அமைப்பு மையப்படுத்தப்பட்ட கல்வி முறையில் பெரும்பாலான முடிவுகளை எடுத்தல், கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செயல்பாடுகள் போன்றவற்றை தேசிய அளவில் கல்வி அமைச்சகமும், மாநில அளவில் கல்வித் துறையும் கவனமுடன் மேற்கொள்கின்றன. மைய, மாநில அரசுகள் பள்ளி கல்வி முறையின் அனைத்து கூறுகளையும் முறைப்படுத்துகின்றன. இவை கொள்கைகளை வகுத்து, மேலாண்மை செயல்பாடுகளான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், பணி முன்பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சி வழங்குதல், கலைத்திட்டத்தை உருவாக்குதல், குறைந்தபட்ச கற்றல் அடைவு போன்ற பிற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை மேற்கொள்கின்றன. இருப்பினும், அன்றாட பள்ளிச் செயல்பாடுகளில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணும் அதிகாரம் அந்தந்த பள்ளி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடைய கல்வித் தேவைக்கு ஏற்ப பொறுப்புடன் ஆசிரியரோ அல்லது பள்ளியோ குறிப்பிட்ட அளவில் மட்டுமே பாடத்திட்டம் பாடப்புத்தகம், கற்பிக்கும் மொழியை மாற்றியமைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இயலும்.

மாறாக, பரவலாக்கப்பட்ட அமைப்பு மைய அல்லது மாநில அல்லது மாவட்ட அளவிலான அதிகாரிகளின் சில வரையறுக்கப் பட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, தொடக்கக் கல்வியின் பல கூறுகளில் உள்ளூர்/ மாவட்டம்/கிராமம்/பள்ளி அளவில் போதுமான (கணிசமான) அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நடைமுறையில் பெரும்பாலான தொடக்கக் கல்வி அமைப்புகள் மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட கூறுகளை கொண்டுள்ளன.

பல மாநில அரசுகள் ஏற்கெனவே தொடக்கக் கல்வியை பரவலாக்கும் பணியைத் தொடங்கியுள்ளன. தொடக்கக் கல்வியை வழங்கவும் அதனை பொறுப்புடன் நடைமுறைப்படுத்தவும் ஏற்ற ஒரு மாற்று முறை பொறுப்பான அமைப்பை உருவாக்கும் வகையிலான புதிய சட்டத்தை மாநில அரசுகள் இயற்றின. சில மாநிலங்கள் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமுதாயத்தோடு இணைந்தும், பங்கேற்றும் மாவட்ட அளவிலான தொடக்கக் கல்வியினை வழங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக மையப்படுத்தப்பட்ட அமைப்பு முறையிலிருந்து பரவலாக்கப்பட்ட அமைப்பிற்கு மாறுவது ஒரு மெதுவான மாற்றம் ஆகும். ஒரு நாடு பரவலாக்கப்பட்ட தொடக்கக் கல்வி என்ற இலக்கை எட்ட முடிவெடுத்தலை படிப்படியாக மாநிலத்திலிருந்து மாவட்டத்திற்கும் உபமாவட்டத்திலிருந்து உள்ளூர் அளவிற்கும் மாற்ற பரவலாக்கலில் இந்தியாவின் அனுபவம் இந்திய கல்வி முறையானது சமுதாயத்திலிருந்து விலகி தனித்து இல்லாமல், ஒருங்கிணைந்த அமைப்பாக அமைவதை அனைவரும் ஏற்கிறோம்.

நமது சமூக அமைப்பானது வகுப்பு, ஜாதி, பாலினம், மதம் என பன்முகத் தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிடத்தக்க பின்தங்கிய சமூகமானது வீடு, குடிநீர், கழிப்பறை வசதி, மின் வசதி, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றார்கள். அவர்கள் அடிப்படைக் கல்வியின்றி, தங்கள் வாழ்வில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

73ஆவது மற்றும் 74 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தில் கல்வி கற்கும் சூழலில் உள்ளூர் அரசாங்கமானது முழுமையாக செயல்படுவதற்கான இணக்கமான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது. இத்தகைய மாற்றம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அனுபவங்கள்

ஒருங்கிணைந்த குழந்தை முன்னேற்றத் திட்டம் 0 முதல் 6 வரையிலான வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சாரந்து முன்னேற்றத்தில் உள்ளூர் மக்களின் முழுமையான பங்கேற்பு இன்றியமையாததாய் உள்ளதை அனுபவத்தின் வாயிலாக கண்டறிந்தது. தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்ட அளவிலான படிப்பறிவற்ற மக்களின் எழுத்தறிவினை முகாம் அமைத்தும் அவர்களது பங்கேற்பு மூலம் எழுத்தறிவை அதிகரித்ததோடு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் நம்மால் காணமுடிந்தது.

1994 நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, அரசு அனை வருக்கும் தொடக்கக் கல்வியினை நாடு முழுவதும் அமுல்படுத்த DPEP-யின் உத்திகளைப் பயன்படுத்த முடிவெடுத்தது. மாவட்ட அளவில் தொடக்கக் கல்வியின் வளர்ச்சிக்கு திட்டமிடும் முதன்மை பொறுப்பு ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இருப்பினும் தொடக்கக் கல்வியின் முன்னேற்ற செயல்பாடுகளை தொடர்ந்து கண் காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் அந்தந்த மாநில அரசுகளே பொறுப்பேற்கின்றன.

திட்டமிடல் மற்றும் மேலாண்மை

உத்திகளில் மாற்றம் ஏற்பட நகர்ப்புற உள்ளூர் அரசாங்கம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவன அளவில் பணிபுரியும் கல்வித்துறை வல்லுநர்கள், நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சியும் தொடர்ந்த ஆதரவும் தேவைப்படுகிறது. இறுதியாக, வெவ்வேறு குறிப்புகள் மாநிலங்களிலுள்ள உள்ளூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களையும் திட்டமிடல் மற்றும் மேலாண்மையின் மூலம் பலப்படுத்துவதாகும்.

முன் குழந்தை பருவ பாதுகாப்பு மற்றும் கல்வியானது (ECCE) மிக அவசியமானதாகும். ஏனெனில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதன் நோக்கத்தை கட்டமைப்பதின் அடிப்படையாக ECCE (ICDS) அமைகிறது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டமானது (ICDS), சமுதாயத்தின் முழுமையான ஆதரவை சார்ந்துள்ளது. சமுதாய ஒத்துழைப்பின் மூலமே பள்ளி முன்பருவக் கல்வியில் இடம்பெறும் குழந்தை களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த முடியும். மேலும் ICDS திட்டம் உலகளவில் வெற்றி பெற்ற திட்டமாக அமைந்ததற்கு காரணம் உள்ளூர் மக்களின் பங்கேற்பை உறுதி செய்ததே ஆகும்.

உள்ளூர் சமுதாயத்தின் முழுமையான பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பை பெற பின்வருபவை அவசியமாகின்றன.

  • பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்/ஊராட்சி ஒன்றிய நிறுவனங்கள்
  • பள்ளி மேலாண்மைக் குழு
  • கிராமம் மற்றும் நகர்ப்புற வார்டுகள்
  • உள்ளூர் கல்வி குழுக்கள்
  • பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புகள்
  • தாய் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்புகள்
  • பழங்குடி தன்னாட்சி மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் இன்னபிற பள்ளி சார்ந்தும், நிர்வாகம் சார்ந்தும் தொடக்கக் கல்வி மேலாண்மையில் பங்கேற்கும் அடிப்படையான அமைப்புகள்

ஆதாரம் : தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.92592592593
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top