பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / கருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்

வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் செய்திகளை எளிய முறையில் எடுத்துரைப்பதற்கு பயன்படுத்தும் சாதனங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

அறிமுகம்

கருத்துப்பரிமாற்றம் என்பது செயற்பாங்கின் நடைமுறை மூலமாக செய்திகளை ஆரம்ப இடத்தில் இருந்து பெறுபவருக்கு இட மாற்றம் செய்வதே ஆகும். இம்முறையில் செய்திகளை பொருத்தமான வழி மூலமாக இரு வகை மக்களுக்கு இடையிலோ அல்லது குழுவினரிடையே அனுப்புவதும், பெறுவதும் ஆகும். கருத்துப்பரிமாற்றத்தை செலுத்தும் வழியானது, தகவல் அல்லது செய்திகளை அனுப்புவதற்கு ஊடகத்தை ஏற்படுத்தும்.

கருத்துப்பரிமாற்றத்தை எடுத்துச் செல்லும் வழி அல்லது பயிற்றுவிக்கும் முறைகள்

கற்றல் அல்லது கருத்துப்பரிமாற்ற நுட்பங்களை பல வகைகளிலும் அல்லது பல வழிகளிலும் விவாதிக்கலாம். இவை முறை கல்வி (formal) மற்றும் முறைசாரா கல்வி (informal) பயிற்றுவிக்கும் முறைகள் மற்றும் கேள்/காண் சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

மனையியலில் இரண்டு தனிப்பட்ட கற்றுக்கொடுக்கும் நிலைகள் உள்ளன. அதாவது, முறையான கல்வி மற்றும் முறைசாரா கல்வி ஆகும். முறைசாரா கல்வி கற்பவரிடம் இருந்து, முறையான கல்வி கற்பவர்கள், அவர்களின் பின்னணி, வளம், வாய்ப்புகள், மற்றும் ஊக்குவித்தல் முதலியவைகளில் மாறுபடுகின்றனர். பழங்காலத்தில், வகுப்பறையில் கற்பிக்கும் முறைகளாக முறையான கல்வி கற்பதற்கு குழுக்களில் பயன்படுத்தப்பட்ட முறை சமமான விளைவை முறைசாரா கல்வியில் ஏற்படுத்தாது. முறையான கல்வி கற்றலில் ஆசிரியரிடம் தொடர்புடைய முறைகளே பயன்படுகின்றது. ஆனாலும் முறைசாராக்கல்வி பயிற்றுவிக்கும் சூழ்நிலையில் கற்பவரிடம் தொடர்புடைய முறைகள், செயல்படுத்தப்படுகின்றன.

எது எப்படியாயினும், கற்பிக்கும் நிலை எதுவாயினும், அடிப்படை மதிப்புகள், கருத்துக்கள், மற்றும் வரையறை போன்றவை கற்பிக்கும் முறைகளில் சமமானதாக இருக்கும். தகவல் பரிமாறுபவர்கள் எந்த ஒரு முறையையும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அல்லது சற்று மேம்படுத்தி ஈடுபடுத்தும் திறமையோடு இருக்க வேண்டும். உதாரணம் : முறையான கல்வி கற்கும் நிலையில், தேவையான வகுப்பறையை அமைக்க வேண்டும். பின் சான்றுடன் விளக்க வேண்டும் அல்லது தொழில் ஆலை (workshop) முறைகளை பயன்படுத்தவேண்டும். ஆனால் பள்ளிசாரா நிலையில் மாணாக்கர், மரத்தடியிலோ, தாழ்வாரத்திலோ, பள்ளி அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களிலோ உட்கார்ந்து கொள்ளலாம்.

விரிவுரை (Lecture Method)

விரிவுரை என்பது அநேகமாக அனைத்து வகையான மேல் நிலை கல்விகளிலும் பயன்படுத்தப்படும் கற்றுக்கொடுக்கும் முறையாகும். இதில் மனையியலுக்குக் கற்றுக் கொடுத்தலும் உள் அடங்கி உள்ளது. அதிகமான அளவில் விரிவுரை முறையில் ஏற்படும் விளைவுகள் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டு குற்றம் குறை கண்டுபிடிக்கப்பட்டாலும், விரிவுரை முறையில் கற்பிக்கப்படுவதால் ஒரு சில குறிக்கோள்களை அடைவதற்கு அதிக ஆற்றலை, இம்முறை பெற்றுள்ளது. குறிப்பாக மாணவர்களை சென்று அடைய வேண்டிய அடிப்படை தகவல்கள். மனையியல் ஒரு உட்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையான பாடப்பிரிவு என்றாலும், சில புற உண்மைகள் (facts) மற்றும் பொதுக்கோட்பாடுகள் (theories) போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்தவைகளை உள்ளடக்கியுள்ளது.

விரிவுரையானது பல செயல்பாடுகளை உள்ளடக்கி உள்ளது. அவை தலைப்பை அறிமுகப்படுத்துதல், உதாரணங்களை எடுத்துரைத்தல், கரும்பலகையை பயன்படுத்துதல், கேள்விகளை எழுப்பி, உட்பொருளை விரிவாக எடுத்துக் கூறுதல் போன்றவை. இம்முறையின் வெற்றி, பெரிதும் வழங்கப்படுகின்ற விதத்தை சார்ந்துள்ளது.

விரிவுரையாற்றும் முறையின் மதிப்புகள் / பயன்கள்

ஒரு புதிய தலைப்பு அல்லது பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கு, இம் முறை மிகவும் சிறந்த முறையாகும். விரிவுறையாற்றலின் மூலம், ஒருவர் ஒரு பாடத்தை மேற்பார்வை செய்து, முடிக்கப்பட்ட பின் பாடத்திற்கு விரைந்து மீள் பார்வை செய்ய வேண்டும். விரிவுரையாற்றலுக்குத் தயாரிக்கும் போது விரிவுரையாளர், பல்வேறு புத்தகங்களை பரிசீலனை செய்து, எழுத்தாளரின் நோக்கங்களையும், மேற்கோள்களையும் கவனமாகப் பார்த்து, தயாரித்து, வகுப்பறையில் ஒரு பெரிய பகுதியை, மிக எளிய முறையில் சுருக்கமாக குறிப்பிட்ட நேரத்தில் கற்றுக் கொடுக்க முடிகிறது. இம்முறையில் கற்பிக்கப்படும் போது புதிய செய்திகளை வழங்க முடிகிறது. ஏனெனில், விரிவுரையாளர் கடைசி நிமிடத்திலும் செய்திகளை மாற்றி அமைத்து விரிவுரை செய்யலாம். இம்முறை மிகவும் விரிவுபடுத்தி விளக்க வேண்டிய ஒரு முறையாகும். ஏனெனில், கருத்தை பரிமாறுபவர் செய்திகளை கேட்பவருக்கு வேண்டிய அளவிற்கு விரிவாக கூற முடிகிறது. அது மட்டுமின்றி, உடனடியாக மாணவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பின் அனுபவத்தில் (feed back) இருந்து பாடத்தில் எப்பகுதி, மேலும் தெளிவாக விரிவாக விவரிக்கப்பட வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

விரிவுரையாற்றும் முறையை பயன்படுத்தல்

விரிவுரையாற்றுதல் என்பது ஒரு கலையாகும். இதற்கு ஒரு குறிப்பிட்ட நடைமுறை பாங்கு கிடையாது. நடைமுறை பாங்கானது விரிவுரையாற்றுபவர்களுக்கிடையே வேறுபடும். விரிவுரையாளரின் தனிப்பட்ட பேச்சுத்திறனை பொருத்தே விரிவுரையின் செயல் விளைவு ஏற்படும். எதுவாயினும், கீழ்வரும் வழிகாட்டுதல்களை பயன்படுத்தும் ஒருவர் தனது விரிவுரையை மிகச்சிறப்பு வாய்ந்ததாக செய்து கொள்ளலாம்.

திட்டமிடும் நிலை

அ. குழுவை/கூடியிருக்கும் கூட்டத்தை ஆராய்தல்

ஒரு விரிவுரையாளர், தான் வழங்கப் போகும் விரிவுரையை, எப்படிப்பட்ட பின்னணியில் உள்ள குழுவிற்கு வழங்கப்போகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, வேறுபாடுகள் நிறைந்த குழுவாக, (heterogenous) இருந்தால், விரிவுரையாற்ற வேண்டிய இடம், மற்றும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் வேறுபடும். அறிவுத்திறன் மற்றும் முதிர்வான (homogenous) மக்கள் கொண்ட குழுவாக இருப்பின், விரிவுரையாளர் திறமையை சோதிக்கும் கருத்துப் பொருளை குழுவிற்கு வழங்க, தூண்டுதலாக அமையும். விரிவுரையாற்ற ஒதுக்கப்பட்ட நேரத்தை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப விரிவுரையை அமைக்க வேண்டும்.

ஆ. உட்பொருளை ஒழுங்காக அமைக்க வேண்டும்

பாடத்தின் குறிக்கோளை பொருத்து, உட்பொருளை தேர்வு செய்து, அதனுடன் தொடர்பு உள்ள செய்திகளை பல்வேறு குறிப்புகளிலிருந்து சேகரித்து, பின் ஒழுங்குப்படுத்தி எவ்வாறு வழங்க போகிறோம் என்று தீர்மானிக்க வேண்டும். விரிவுரைக்கென்ற முக்கிய குறிப்புகளை தயாரித்து குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விரிவுரையை வழங்கும் நிலை

திறன் வாய்ந்த வழங்குதலுக்கு, ஒரு சில குணங்களை விரிவுரையாளர் பெற்று இருக்க வேண்டியது அவசியம். அதாவது குரலில் ஏற்ற இறக்கங்கள், உடல் அசைவுகள் (body language) அல்லது சைகைகள் (signs), நகைச்சுவைத் தன்மை (humour) நிறுத்திப் பேசுதல் (pause), மொழியின் மீதுள்ள நல்ல ஆதிக்கம் (good command over language), மற்றும் தன்னம்பிக்கை (self confidence) விரிவுரையாளர் குழுவினரோடு நேய உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வகுப்பறையின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கமாக கண்ணோட்டம் விட்டு, குழுவினரை கேள்வி கேட்டு, வகுப்பறை விவாதத்தில் குழுவினரை பங்கு பெற வைப்பதன் மூலமாகவும், குழுவினரோடு நேய உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கற்பிக்கும் சாதனங்கள், வடிவமைக்கப்பட்ட குறிப்புகள் அல்லது கைப்பிரதிகளைப் பயன்படுத்தி விரிவுரையை வழங்க முடியும். விரிவுரையின் இறுதியில், விரிவுரையை சுருக்கமாக்கி, தகவல் தேட்டக் (References) குறிப்புகளையும் மாணவர்களுக்கு படிப்பதற்காக கொடுக்க வேண்டும்.

விரிவுரை வழங்கப்பட்ட பின் உள்ள நிலை

இந்நிலையில் வழங்கப்பட்ட விரிவுரையின் அடிப்படையில், மாணவர்களுக்கு வகுத்து ஒதுக்குதல் (Assignment) வேலையை கொடுக்க வேண்டும். வகுத்து ஒதுக்குதல் என்பது பழகக் கூடியதாகவோ, எழுதக் கூடிய தாகவோ, சில தகவல்களை சேகரிப்பதாகவோ, ஒரு ஆடை அல்லது அறையை வடிவமைக்கச் செய்தல் போன்ற பிற வகையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம்.

விரிவுரை முறையின் எதிரான நிலை (Disadvantage)

 1. ஒரு வழி கருத்துப் பரிமாற்றத்தை (one-way communication) விளைவிக்கலாம். பல்வேறு நிலைகளில் விரிவுரையில் மாணவர்கள் பங்கேற்காவிட்டால், மாணவர்களது கற்கும் திறன் மந்தமாகிவிடும். இவ்வாறாக கலந்து செயல்படும் வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது.
 2. ஒரு குறிப்பிட்ட பாடம்/ தலைப்பு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான விருப்பத்தை தராது.
 3. செவித்திறன் குறைந்தவர்களுக்கு இம்முறையால் மிகுந்த பயன் விளையாது.
 4. கோட்பாடு தலைப்புகளுக்கு (Theoretical topics) மட்டுமே விரிவுரை முறையில் கவனம் செலுத்தப்படுகிறது.

சுருக்கமாக கூற வேண்டுமெனில், விரிவுரை முறையை ஒழுங்காக திட்டமிட்டு, ஆற்றல் வாய்ந்த முறையில் வழங்கப்படும் போது வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. முறை சார்ந்த தன்மையினால் விரிவுரை முறையானது, முறை சாராத கல்விக் குழுக்களில் பயன் அற்றுப் போய் விடுகிறது.

சான்றுடன் விளக்கும் முறை (Demonstration Method)

சான்றுடன் விளக்கும் முறையானது அதிக ஆற்றல் வாய்ந்த முறையாகும். இம்முறை ஒரு குறிப்பிட்ட பொருள் எவ்வாறு வேலை செய்கிறது, எதைக் கொண்டு உருவாக்கப் பெற்றது, மற்றும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்பதை திறம்பட விளக்குகிறது. மாணவர்கள், இப்பாடத்துடன் ஒன்றி தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விடுவர். ஏனெனில், அவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய குறிப்பிட்ட தன்மை வாய்ந்தவற்றை மட்டுமே நோக்குவர்.

சான்றுடன் விளக்குதல் முறை, பொதுவாக உண்மையான தொட்டுணரத்தக்கவையை சார்ந்து இருக்கும். அதாவது, உணவை தயாரித்தல், மனை அலங்காரம் முதலானவை என்றாலும், ஒரு சில உண்மையான காரியங்களை தெளிவுபடுத்தவும், பயன்படுத்தப் படுகிறது. உடல் தோற்ற அமைவு, பிறரிடம் நடந்து கொள்ளும் முறையான பண்புகள், ஒரு நபரை அறிமுகப்படுத்தும் விதம், நேர்காணலுக்குச் செல்ல ஆயத்தப்படுத்தி கொள்வது, மற்றும் சிலவற்றிற்குப் பயன்படுகிறது.

சான்றுடன் விளக்கும் முறையானது ஆசிரியர்கள், மற்ற பிற வல்லுனர்கள் அல்லது மாணவர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு, சான்றுடன் விளக்குவது என்பது மதிப்பு மிகுந்த செயல்பாடாகும். ஏனெனில், இம்முறை மாணவர்களை கருத்துப் பரிமாற்ற தொடர்புடைய செயல்பாட்டில் பங்குபெற வைக்கிறது. இச்செயல்பாடு மிகுந்த பொறுப்புகளிலும், செயல்களிலும் மாணவர்களை ஈடுபட வைக்கிறது. மாணவர்கள் வாய்மொழியாக விளக்கம் அளித்தலும், பல வேறு கற்பிக்கும் சாதனங்களை பயன்படுத்தி சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் வேண்டியிருக்கும். இத்தொடர்புடைய செயல்பாட்டினால், மாணவர்கள், கருத்துப் பரிமாற்றத்தை ஆற்றல் மிகுந்ததாக செய்வதற்கான நுட்பங்களைப் பற்றி கற்றுக் கொள்வர்.

சான்றுடன் விளக்கும் முறையின் மதிப்பு/ பயன்கள்

 1. விரிவுரையால் புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றை கண்களால் கண்டு, சான்றுடன் விளக்கும் இச்செயல் பாங்கை நடைமுறையில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, ஒரு ஆடையை உருவடிவம் அமைக்கும் முறைபற்றி, சான்றுடன் விளக்கி கற்றுக் கொடுக்க முடியும்.
 2. மேம்படுத்தப்பட்ட செயல்முறைகளின் பயன்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  உதாரணம்:- சமூகத்தில் , சமைக்கும் முறைகள் மிக மோசமான நிலையில் இருக்கும் பொழுது, சான்றுடன் விளக்கும் முறையைக் கொண்டு, நல்ல சமையல் முறைகள் மற்றும் நன்மைகளை மக்களுக்கு கற்றுத் தரலாம்.
 3. இம்முறை புதிய நுட்பங்களை புகுத்தி, ஆர்வத்தை தூண்டி புதிய உத்திகளை கையாளச் செய்கிறது. அது தவிர, சான்றுடன் விளக்கும் போது மக்கள் புதிய சமையல் முறைகளை கையாளவும், சமையல் பழக்க வழக்கங்களில் மற்றும் சுவையில் ஒரு மேன்மைபடுத்தப்பட்ட தரமுடைய உணவை தயாரிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.

இம் முறை கற்பதை எளிதாக்கி, நேரத்தை விரயம் செய்வதில்லை. விரிவுரையாளர் சான்றுடன் படிப்படியாக விளக்குவதை, மாணவர்கள் கவனிப்பதால், அந்த செயல்முறை யானது மாணவர்களின் மனதில் மிக எளிதில் பதிந்து, நினைவில் நிற்கிறது. இப்படியாக, விரிவுரையாளரை செய்முறை களை மீண்டும், மீண்டும் விளக்கிக் கூறுவதில் இருந்து தவிர்த்து, நேரத்தையும் குறைக்கிறது.

அதிக விலை கொடுத்து அநேக மாணவர்களால் வாங்க முடியாத பொருட்களைக் கொண்டு செய்யப்படும் சோதனைகள் சான்றுடன் விளக்கும் முறையில் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. உதாரணமாக, துணி சலவை செய்யும் இயந்திரம்/ நுண் அலை அடுப்பு இயங்கும் முறையினை அனைத்து மாணவர்களுக்கும் சான்றுடன் விளக்கும் முறையில் விளக்கிக் காண்பிக்கலாம். ஏனெனில், இக்கருவிகள் அனைவரிடமும் இருக்கக் கூடிய பொருள் அல்ல.

வகுக்கப்பட்ட தரமான நுட்பங்கள் அல்லது நிறைவு பெற்ற பொருட்கள் பற்றி விரிவுரை செய்து கற்பிப்பதற்கு சான்றுடன் விளக்கும் முறை பயன்படுகிறது. உதாரணமாக:- கேக்குகள் மீது செய்யப்படும் ஐசிங்கை சான்றுடன் விளக்கும் போது, மாணவர்கள் தேவையான பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்துவதற்கும், பேஸ்ட்டின் (paste) நிலைப்புத் தன்மை மற்றும் ஐசிங் செய்வதில் உள்ள நுட்பங்கள் போன்றவைகளை கற்றுக் கொள்ள முடிகிறது.

சான்றுடன் விளக்கும் முறையில் இரண்டு வகைகள் உள்ளன.

செய்முறையை சான்றுடன் விளக்குவது (Method Demonstration)

இது புதிய நுட்பங்கள் அல்லது பழக்கங்களை சான்றுடன் விளக்குவது ஆகும். அதாவது, 'இந்தப் பொருள் எவ்வாறு செய்யப்பட்டது' என்பதை விளக்குவது ஆகும். ஒரு மனையியல் ஆசிரியர் அல்லது மாணவர், ஒரு கேக் தயாரித்தலை செய்து காண்பித்தல் ஆகும். உதாரணமாக அவன் அவள் முட்டையை எவ்வாறு அடித்துக் கலப்பது, பொருட்களை எப்படி ஒன்றாகக் கலப்பது, ஓவனில் எவ்வாறு கலந்து பொருட்களை வைப்பது, கலந்த பொருட்கள் போதுமான அளவு வெந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது போன்றவைகளை மாணவர் தெரிந்து கொள்வர். செய்முறையை சான்றுடன் விளக்கும் முறையில், கற்பவர் முழு செயல்பாட்டையும் நன்கு கவனிக்க முடிகிறது.

விளைவை சான்றுடன் விளக்கும் முறை (Result Demonstration)

இம் முறையில்,' சான்றுடன் விளக்கப்பட்ட முறையின் பழக்கங்களையும், தற்போது கையாளும் பழக்கங்களையும் ஒப்பிட்டு, அதன் விளைவுகளை பார்ப்பதே ஆகும்'. சான்றுடன் விளக்கும் முறையில் ஒலி - ஒளி துணைக்கருவியானது பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, பேக்கிங் சோடா சேர்க்கப்பட்ட உணவை, பேக்கிங் சோடா சேர்க்கப்படாத உணவுடன் ஒப்பிடுதல், பழங்கால மற்றும் தற்கால அறை அமைப்பு முறைகள் மற்றும் பல.

சான்றுடன் விளக்குவதற்கு தயாரித்தல்

 1. சான்றுடன் விளக்குவதில் இரண்டு மூலப்பொருட்கள் உள்ளடங்கியுள்ளது - சான்றுடன் விளக்குபவர் மற்றும் கவனிப்பவர். ஆகையால், விளக்கம் தருவதற்காக தயாரிப்பு செய்வதற்கு பாதுகாப்பான கவனம் இருவருக்கும் தேவைப்படுகிறது. இங்கு, செய்முறை சான்றுடன் விளக்குவதற்கு திட்டமிடுகையில் கவனத்தில் கொள்வதற்கென முக்கியமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 2. நீங்கள் செய்யப்போகும் சான்றுடன் விளக்கும் முறையின் நோக்கத்தை தீர்மானிக்கவும். அதாவது, அம்முறை ஒரு திறனை அல்லது ஒரு புதிய பழக்கம் அல்லது நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட, சான்றுடன் விளக்கப் போகிறதா என்று தீர்மானிக்க வேண்டும்.
 3. இம்முறையில் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, என்ன தீர்மானம் செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
 4. உண்மையான பொருட்கள், மாதிரிகள், பசை பூசப்பட்ட நிழற் படத்தகடுகள், படங்கள் மற்றும் நிழற்படங்கள் அல்லது வேறு துணைப் பொருட்களை சான்றுடன் விளக்குவதற்கு பயன்படுத்த தேர்ந்து எடுக்கவும்.
 5. தொடர் வரிசையில், படிப்படியாக சான்றுடன் விளக்கப்படுவதற்கான பொருளை அடுக்கி அமைக்கவும்.
 6. சான்றுடன் விளக்குவதற்கான மேஜை அல்லது ஒரு பகுதியில், பொருட்களை எவ்வாறு அமைப்பது என்றும், தேவையான பொருட்களை எவ்வாறு எளிதாக, வசதியாக தேவைப்படும் போது கையாள்வது என்பதையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
 7. அனைத்து பார்வையாளர்களும், சான்று விளக்கப்படுவதை பார்க்குமாறு அறையை எவ்வாறு அமைப்பது, என்பதை தீர்மானித்துக் கொள்ளவும்.
 8. பாடத்திட்டத்தின் வரம்பிற்கு ஏற்ப போதுமான நேரத்தை சான்றுடன் விளக்கவும், பின் கேள்விகளை எழுப்புவதற்கும் நேரத்தை ஒதுக்கீடு செய்யவும்.
 9. சான்றுடன் விளக்கம் தருவதற்கு நேரடியாக மற்றும் தெளிவாக முகவுரையை அளிக்க வேண்டும். அப்போது தான் சான்றுடன் விளக்குவதன் நோக்கம் பற்றியும் அதனால் பூர்த்தி செய்யப்படுவதை தெளிவாக தெரிந்து கொண்டு, அதன் மூலம் மாணவர்கள் என்ன கற்றுக் கொள்வர் முதலான பலவற்றையும் கற்பவர்கள் அறிவர்.
 10. நாம் பிறரிடமிருந்து சான்றுடன் விளக்குவதற்கு பெறக்கூடிய உதவிகள் இருப்பின், தேவை ஏற்பட்டால் பெறுவதற்கு திட்டமிடவும்.
 11. கற்பவர்களுக்கு கைப்பிரதிகள்) கைகளில் எடுத்துச் செல்லவும், அல்லது வேறு சில ''வீட்டுக்கு எடுத்துச் செல்ல'', பொருட் களை எப்போது கொடுக்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்து கொள்ளவும்.

செய்முறை சான்றுடன் விளக்குதலை நடத்துதல் (Method demonstration)

 • சான்றுடன் விளக்குவதில் ஆபத்துக்கள் இருந்தாலும், பின்வரும் யோசனைகளை மேற்கொண்டு நியாயமாக வெற்றி யடையலாம் என்பது உறுதியானது.
 • முன்னேற்பாடாக, சான்றுடன் விளக்குவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைக்கவும்.
 • அரைவட்டமாக பார்வையாளர் அமர்வதற்கு அமைப்பு ஏற்படுத்துவதால், கற்பவர்கள், விளக்கப்படுகிற செய்முறை விளக்கத்தை நன்றாக பார்க்க முடியும்.
 • அனைவருக்கும் கேட்கும் படியாக சத்தமாக குரல் உயர்த்தி பேச வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கற்பவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வப்போது கேள்விகளைக் கேட்கலாம். இவ்வாறு செய்வது, கற்றலுக்கு உதவுகிறது.
 • பார்வையாளர், அவர்களது குறிக்கோளை அடைவதற்கு தேவையானவற்றை மட்டுமே சொல்லலாம் அல்லது காண்பிக்கலாம். இன்றியமையாத கருத்துக்கள் குறித்து பேச்சு விரிவுரை செய்வதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். பொழுது போக்கிற்காக பேசக் கூடாது.
 • கற்பவர் மீது கண்ணோட்டம் செலுத்த வேண்டும். புரியாதது போன்ற தோற்றம் அல்லது குழப்பமாக உள்ளது போல் தோற்றத்தை கொண்டுள்ளனரா என கவனித்து தெளிவாக்கி முயலவும்.
 • ஒழுங்கு முறையான வேகத்தை சான்றுடன் விளக்குவதற்கு கையாளவும் கடினமான பகுதிகளை கடக்கும்போது நிதானமாகவும், தேவைப்படும் போது திரும்பவும் கூற வேண்டும்.
 • தங்கள் குடும்ப நபர்களையும் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைப்பார்கள்.
 • குழுக்களை செயல்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வைக்கிறது. உதாரணமாக:- பெண்களுக்கான வருமானத்தை பெருக்குவதற்கான செயல்பாடுகளின் பயன் பற்றி விவாதிப்பதால் பெண்களை அச்செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது.

விவாதத்தின் வகைகள்

பல்வேறு விவாத முறைகள், கற்பித்தலுக்கு பயன்படுகின்றன,

 1. வகுப்பறை விவாதம்
 2. விவாதக்குழு
 3. கருத்தரங்கு
 4. ஒரு குழுவின் விவாதம் (சம்பாஷனை)

இவற்றுள், முறைசாராத வகுப்பறை விவாதம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வகுப்பறை கற்பித்தல் முறையாகும்.

வகுப்பறை விவாதம் (Class Discussion)

இது பொது தலைப்பான 'மனையியல் கல்வியின் அவசியம்' அல்லது குறிப்பிட்ட தலைப்பான 'மனையியல் கற்பதால் ஏற்படும் வேலைவாய்ப்பு' போன்ற தலைப்பு சார்ந்ததாகவோ அமையலாம்.

வகுப்பறை விவாதத்தின் ஆற்றல் என்பது வயது நிலைகள் மற்றும் மாணவர்களின் திறமைகள், வகுப்பில் மாணவர் எண்ணிக்கை, கற்பிக்க வேண்டிய பாடக் கருப்பொருள் மற்றும் அனுபவம், ஆசிரியரின் விவாதம் நடத்துவதற்கான திறன் முதலானவைகளை சார்ந்து உள்ளது.

விவாதக் குழு (Panel Discussion)

விவாதக்குழு என்பது 'வட்ட மேஜை விவாதம்' என்றும் கூறப்படும். இக்குழுவில் 3 முதல் 6 நபர்கள் இருப்பார்கள். அவர்கள் விவாதிக்க கொடுக்கப்பட்ட பிரச்சனை சம்பந்தப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவர். விவாதக் குழுவினர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, ஒவ்வொரு நபரும் மீண்டும் செயல்புரிவதற்கு முன் விவாதத்தின் ஒவ்வொரு குறிப்பையும் மிக எளிதாகவும், கட்டுபாடின்றியும் வெளிப்படுத்தி விவாதம் உயிரோட்டம் மிக்கதாக செய்யப்படுகிறது. ஒரு வகுப்பறையில், விவாதக் குழுவானது மாணவர்களால் உருவாக்கப்பட்டிருந்தால், ஒரு ஆசிரியரோ அல்லது மாணவரோ, நடுநிலையானவராக, நடுவர் பங்கை வகிக்கலாம். நடுவர் குழுவின் ஒவ்வொரு நபரும் சிறந்த முறையில் பங்கேற்குமாறு செய்ய வேண்டும்.

விவாதக் குழுவின் முக்கிய பயன் என்னவென்றால், மாணவர்கள் விரைந்து, சுதந்திரமாக சிந்திக்கவும், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அனுபவத்தை கொடுக்கிறது.

சில சமயங்களில் இவ்வகை விவாதத்தில் ஒவ்வொரு தனிநபரும் வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதால் இறுதியில் விவாதக் குழு பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாத வகையில் மோசமான நிலைமையை அடைந்து விடுகிறது.

கருத்தரங்கு (Symposium)

இம்முறையில், பல பேச்சாளர்கள், ஒரு கொடுக்கப்பட்ட, பாடத்தைக் குறித்து தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பர். பேச்சாளர்களிடையே செயல் எதிர் செயலை (interaction) தோற்றுவிப்பது குறிக்கோள் அல்ல; ஆனால் பேச்சாளர்களின் எண்ணங்களை எடுத்து உரைப்பது முக்கியம் ஆகும். இப்படியாக, கருத்தரங்கு முறை, குறைந்த காலத்தில், வேறுபட்ட எண்ணங்கள் அல்லது பழக்கங்களை முன்னிலைப்படுத்தி வழங்குகிறது. மேலும், மாணவர்களுக்கு பொது பேச்சாற்றலுக்கு அனுபவத்தை அளிக்கிறது. முன்னிலைப்படுத்துதலை தொடர்ந்து அதே தலைப்பில் வகுப்பறை விவாதம் நடைபெறும்.

ஒரு குழுவின் விவாதம் (Colloquium)

இம்முறை இரு பிரிவுகளைக் கொண்டது. ஒரு குழுவில் வல்லுநர்களோ அல்லது சிறப்பான தன்மைகளை உடையவர்

தொழில் நுட்பங்கள் சார்ந்தவை

திட்டமிடுதலும் தயாரித்தலும் ஒரு குழுவை துரிதமான குழு மற்றும் பொருத்தமான சிறு குழுக்களை வல்லுநர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களைக் கொண்டு அமைக்க வேண்டும். கருத்தினை தீர்மானித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் தீர்மானிக்கவும். மாதிரி வரவு செலவு திட்டம் தயாரித்து மதிப்பீடு மற்றும் திட்டத்திற்கான பொருளை சேகரிக்கவும். இடம், நேரம், கால அளவு ஆகியவற்றை தீர்மானிக்கவும். நிகழ்ச்சியின் திட்டம் பற்றி எழுத்துவடிவத்தில் தயாரித்து தொடர்புடைய அனைவருக்கும் உரிய நேரத்தில் தகவல் கொடுக்கவும். சில கலை நிகழ்ச்சிகள் மற்றும் மனமகிழ்வுக்கான நிகழ்ச்சிகளும் மாலை நேரத்திற்கு ஏற்பாடு செய்யவும். குறிப்பிட்ட தேதியில் கண்காட்சி நடைபெறப் போகும் இடத்தை தயாராக்கவும். இன்றியமையாத வசதிகளுக்கு ஏற்பாடு செய்யவும். ஒரு ஸ்டாலை (stall) பல்வேறு துறைகள் காட்சிக்கு வைக்கும்போதும் பொருட்கள் பற்றி அறிவிப்பதற்கு தயார் செய்யவும்.

பொதுக்கூட்டம், பயிற்சி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பந்தலை அமைக்கவும். முக்கியமான இடங்களில் சுவரொட்டிகளை காட்சிக்கு அமைக்கவும். உரிய வழிமுறைகளில் பொதுமக்களுக்கு கண்காட்சிப் பற்றி அறிவிப்பு செய்யவும்.

காட்சிக்கு உள்ள கடைகளை எளிமையாகவும், ரசிக்கும்படியாகவும் அலங்கரிக்கவும். போதுமான ஒளி அமைவிற்கு ஏற்பாடு செய்யவும், சிறப்பு வாய்ந்த விளைவை ஏற்படுத்தும் விளக்குகளை தேவையான இடங்களில் பயன்படுத்தவும். நல்ல தரம் மிகுந்த வண்ணமயமான காட்சிப் பொருட்களை தயாரித்து பார்வையாளர்களுக்கு தேவையான செய்திகளை அடையும்படி செய்யவும். உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தவும். பொருட்களில் பாமர மக்களுக்குப் புரியும்படியாக குறியீட்டு சீட்டில் எழுதவும். 50 முதல் 60 செ.மீ உயரத்திற்கு காட்சிப் பொருள்களை இரண்டு மீட்டர் நீளத்திற்கு தரையிலிருந்து உயர்த்தி அமைக்கலாம். வரிசைப்படி ஒழுங்காக அமைக்கவும். பொருள்களை நெருக்கமாக வைப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளை செயல் மற்றும் உயிரோட்டம் உள்ளதாக அமைக்கவும். பணியாளர்க்குப் பயிற்சியும், குறிப்பிட்ட பணியையும் ஒதுக்கீடு செய்யவும். நீண்ட கால கண்காட்சிக்கு பணியாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைத்து செயல்படுவதற்கு வசதி செய்யவும். கண்காட்சியில் காட்சி அமைவுகள், சுவரொட்டிகள், மாதிரிகள், படங்கள், நிழல் படங்கள், நிலப்படங்கள் முதலியவை அடங்கியுள்ளன.

செயல்படுத்துதல் (Implementation)

 • முறையான திறப்பிற்கு உள்ளூர் தலைவர் அல்லது புகழ்மிக்க பெருமை வாய்ந்த நபரை அழைத்து திறப்பு விழா நடத்தலாம்.
 • விரிவுரைகள், மாணவர்களின் கவனத்தை மற்றும் விருப்பத்தை அதிகரிக்கும்.
 • நல்ல திடமான அடித்தளம் அமைத்து, அடிப்படை கருத்துக்களை சிந்தித்து, நிற ஒத்திசைவை, நிறச்சக்கரம் மூலம் பெற அடிப்படை கருத்தை உருவாக்குகிறது.
 • ஒரு ஆசிரியர் விளக்க செயல்பாட்டில் தெளிவான விவரிப்புகளை அளிக்க, ஆசிரியருக்கு உபகரணங்கள் கொடுத்து உதவுகிறது.
 • இனப்பெருக்க செயல்பாட்டை விளக்க வரைபடங்கள் மற்றும் மாதிரிகள் தேவைப்படும்.
 • கற்றலை ஆழமானதாக, விரிவாக செய்வதற்கு மிக எளிதாக பெற முடியாத அனுபவங்களை மாணவர்களுக்கு அளிக்கிறது.
 • பிற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைப் பற்றி ஒளி நாடாவில் பதிவு செய்வது.
 • அர்த்த முள்ள சொல் தொகுதிகளை (meaningful vocabulary) அதிகரிக்க உதவும்.
 • இந்திய சித்திர வேலைப்பாடு பின்னல் களின் (embroidery) சரியான பெயரை மாதிரிகளைக் கொண்டு கற்றுக் கொள்ளவும்.
 • தொடர்ச்சியான சிந்தனைகளை உருவாக்கும் திடமான ஆரோக்கியம் மற்றும் மக்கள் தொகை கல்வியின் அவசியம் போன்றவை.
 • சுய செயல்பாட்டை அறிமுகப்படுத்தி, சுவரொட்டி தயாரித்தல், உலக நாடுகளின் வரைப்படம் வாசித்தல்,
 • வீணாகும் பொருட்களை உபயோகித்து பூக்கள் செய்வது.
 • தொலை தொடர்புக்கு பெரு உதவியாக உள்ளது. மென்பசை பூசப்பட்ட மென் தகடு, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு கைப்பிரதிகள் (pamphlets).
 • எப்படியாயினும், கற்பிக்கும் சாதனங்கள் ஒன்றை மட்டும் செய்ய இயலாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
 • அதாவது ஆசிரியரை மாற்றி அமைப்பது. பொதுவாக இவையனைத்தும் வயது குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், முதிர்ந்தவர்.
 • அனுபவங்கள் - ஏழை, பணக்காரர், நகரம், கிராமம், ஆண், Q1160 அறிவு திறன் - மெதுவாக, சராசரி, மேம்படுத்தப்பட்ட ஆர்வம் - ஆர்வம் இன்மை ,குறைந்த ஆர்வம், அதிக ஆர்வம் இவை உண்மையாக, சரியாக இன்றுவரை நிகழ்ந்துள்ள அனைத்து செய்திகளையும் விளக்குகிறதா? உதாரணமாக.
 • உணவின் அளவை - பகுதி அடையாள விளக்கக் குறி வரைவு (Area Graph) பயன்படுத்தி வீட்டின் அளவு - மாதிரி வீட்டைக் கொண்டு ஆடைகளின் நிறம் - பொருட்களைக் கொண்டு வளர்ச்சி விகிதம் - அளவைக் கோடுகளில் அளவையடுக்கு களை குறித்துக் காட்டும் உருவகைக் கட்டம் (Bar graph) உபயோகிக்கவும்.
 • ஆசிரியர்களை அதிக சக்தி உள்ளவராக்கி, கற்கும் அனுபவங்களை மேம்படுத்தி, கருத்துப் பரிமாற்றத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
 • ஒரு ஆசிரியர் அவர்களது வகுப்பில் கற்பிக்க உதவும் சாதனங்களையே அதிகமாக நம்புவதில்லை. வகுப்பறை அப்படியிருப்பின் கற்பிக்காமல் பிற வேலையில் கவனம் செலுத்த ஆசிரியர் சென்றுவிடலாம்.

கற்பித்தலுக்கு உதவும் சாதனங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் அறிவு செறிந்தவை (Academic)

தொடர்புள்ள தலைப்புக்கு ஏற்ப இவை பொருளடக்கத்திற்கு மற்றும் தெளிவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனவா? 9161, உணவை வகைப்படுத்துதல். (ஸ்டென்சில்) உள் வெட்டுத் தகடு கொண்ட நகலை எடுக்கும் முறை அல்லது பத்திக் அச்சிடுதல். அவை மாணவர்களுக்கு உதவி, தங்களுக்கென சிந்தித்து செயல்படச் செய்கிறதா? உதாரணம் :- ஒருவரின் செயல் பாட்டுக்கும், ஆடையின் பாங்கு மற்றும் அவ்வாடைக்கான உரு வடிவம் அமைப்பதை ஒரு மாணவர் எடுத்து செய்வதற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல். இவை இல்லாமல் அந்த தலைப்பை கற்பிக்க முடியுமா? கற்பிக்கும் சாதனமின்றி கற்கக் கூடிய சமையல் முறைகளின் பெயர்கள் உடல் சார்ந்தவை.

நிறுவனத்தால் அவற்றை வாங்க முடியுமா? தொலைகாட்சி மற்றும் படங்கள், முதலில் வாங்கும்போதும், சீர் செய்யும்போதும் அதிக செலவை ஏற்படுத்தும். அவை சுலபமாக பராமரிக்க ஏற்றதா?

பாகங்கள் கிடைப்பது, சரிபார்க்கும் வசதிகள், சிறப்பு வாய்ந்த சேமிப்பு வசதிகள், குளிர்ச்சியூட்டப்பட்ட அறைகள் மற்றும் ஸ்டீல்கேபினெட்கள். இவை அங்கு இருக்காது.

ஒளி எறிவுக் கருவி அமைவு (projector) மற்றும் திரைகள் மொத்தமாக, எடைக் கூடியனவாகவும், மற்றும் திடமான போக்குவரத்துக்கு தேவையான வண்டி மற்றும் உதவிக்கு ஆட்களும் தேவைப்படலாம்.

மூன்று உருவௗவை சாதனங்கள் (Three Dimenstional Aids)

நேரடியான நோக்கம் நிறைந்த அனுபவங்கள் எப்போதும், கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும், எப்போதும் பயன்படுத்தக் கூடியதாகவோ அல்லது அதனை பயன்படுத்தி கற்பித்தலை ஆற்றல் மிக்கதாகச் செய்வதும் முடியாமல் உள்ளது. வனவிலங்கு பற்றிய ஒரு கருத்தையும், அதனை பாதுகாப்பதை பற்றியும் கற்பிக்க, அனைத்து விலங்குகளின் சரணாலயங்களுக்கோ, அவை இருக்கும் இடங்களுக்கோ சென்று மாணவர்கள் பார்வையிட முடியாது. சில அனுபவங்கள் மிகவும் பழமையானதாகவோ அல்லது வருங்காலத்திற்கு ஏற்றதாக இருப்பதால், உண்மையில் நடைமுறையில் இவ்வனுபவத்தை பெறுவது கடினமான ஒன்றாகி விடுகிறது. ஒரு மனிதனின் கண் அல்லது வேறு ஒரு உறுப்பு கிடைக்கக் கூடிய ஒன்று தான். ஆனால் விவரமாக கற்றலுக்கு, பயன்படாத ஒன்றாக கருதப்பட்டாலும், கைகளால் கையாள்வது அருவருப்பு உண்டாக்கும். இப்படியாக, உண்மைப் பொருட்கள் சில நேரங்களில் கையாள மிகப் பெரிதாகவும் அல்லது மிகச் சிறியதாகவும் இருக்கிறது.

இது போன்ற சூழ்நிலைகளில் கேட்டு அறிந்த அனுபவங்களின் உதவியால், உண்மை நிலைகளை நீக்கிவிட்டு, சுருக்கமாக்கி கற்பிக்கலாம். சில சிக்கலான அல்லது சிதறவைக்கும் விவரங்கள் நீக்கப்பட்டும், சில புதியன சேர்க்கப்பட்டு, மற்றும் உண்மையான வற்றை சிறப்பாக புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அளவுகளில் மாற்றம் செய்யலாம். கேட்டு அறிந்த அனுபவங்களை சில பொருட்கள் (objects), உருமாதிரிகள் (Specimens), மாதிரிகள் (models), இயந்திரப்பகுதியின் மாதிரி (mock-ups), நிலையாக பொருத்தப்படாதவைகள் (mobiles), கூத்தாட்டு பொம்மைகள் (puppets) போன்றவைகள் மூலமாக வழங்கலாம்.

பொருட்கள் (Objects)

இவை உண்மையான மரப்பொருட்கள், பொம்மைகள், குளிர் சாதனப்பெட்டிகள், அழுத்தக் கொதிகலன்கள், பழங்கள், பூக்கள், புத்தகங்கள் முதலானவைகள். பல பொருட்கள் மிக எளிதாக வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ, பக்கத்து அங்காடியிலோ, கல்வி நிறுவனங்களிலோ அல்லது அருங்காட்சியகத்திலோ உள்ளன. பொருட்களை வகுப்பறையில் கற்பிக்க உபயோகப்படுத்துதலை ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் அவைகளுக்கு • தயாரிப்பு தேவைப்படாது - உதாரணம் - தரைக்கான உண்மையான தரை விரிப்புகள். விரிவுரைமுறையினை மாற்றி அமைத்து, கற்பித்தலை ஆர்வமிக்கதாக செய்யலாம். உதாரணம் - காய்கறிகள், பழங்கள் முதலியன பற்றி சத்துணவியலில் பேசலாம். கருத்துக்களை கண்களால் பார்க்க அறிய உதவ வேண்டும். உதாரணமாக:- நேரத்தை மிச்சப்படுத்தி வேலையை எளிதாக்கும் அழுத்தக் கொதிகலன் மற்றும் மிக்ஸி போன்ற இயந்திர பொருட்களைக் கொண்டு நேரத்தை மிச்சப்படுத்தும் கருத்தை அறியச் செய்தல். கற்பித்தலை ஆற்றல் மிக்கதாக செய்ய விவரித்தலை மிகத் தெளிவாக செய்தல் மூலம் பெறலாம் - உதாரணமாக, குழந்தைகள் தங்கள் சுய உதவியால், தங்கள் ஆடைகளை தாங்களே அணிவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு வகுப்பறையில் தொடுவதற்கு, அனுபவப் படுவதற்கு, கண்டு ஆராய மற்றும் படிப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கொடுத்தனுப்பி பார்க்கச் சொல்லலாம். நேரம் கிடைக்கும் போது வரும் காலத்திற்கு, நேரம் மற்றும் சக்தியை மிச்சப்படுத்துவதற்கு, கற்பித்தலுக்கு பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அட்டைப் பெட்டி டப்பாக்களில் பொருட்களை சேகரித்து, சேமிக்கலாம் அல்லது சொல்லோஃபேன் (Cellophane) பைகளில் அல்லது, கண்ணாடியால் மூடப்பட்ட ஷோகேஸ் அலமாரிகளில் அலங்காரமாக நிரந்தரமாக வைத்து, அருங்காட்சி யகத்தைப் போன்று பராமரித்து வைக்கலாம்.

கீழ்வரும் காரணங்களால், சில நேரங்களில், பொருட்களை வகுப்பறையில் பயன்படுத்த முடியாமல் போகிறது.

வகுப்பறைக்கு ஏற்ற பொருளாக இருக்காது உதாரணமாக, யானை அல்லது விமானத்தையும் போல மிகப் பெரிய அளவில் இருக்குமேயானால், வகுப்பறைக்கு எடுத்து வர முடியாது. வண்டுகள், வீட்டுப் பூச்சிகள் போல மிகச்சிறியனவாக இருந்தால், அவற்றைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்காது. மேலும், விரிவான விளக்கங்களுக்கும், ஆய்வுக்கும் வசதியற்றதாக இருக்கும். பாம்புகள் மற்றும் காட்டு விலங்குகள் போன்ற அபாயகரமானதாக இருந்தால், வகுப்பறைக்கு உள்ளே கொண்டு வருவது பாதுகாப்பானது அல்ல. மனிதக்கண் போன்ற உறுப்புகள், மிக மென்மையாக, கையிலிருந்து நழுவுவதாகவும், கையாள சிரமத்தை ஏற்படுத்துவதாலும் வகுப்பறைக்கு கொண்டு செல்ல முடியாது. கட்டடங்கள் மற்றும் தோட்டங்கள் நகராதவை. அதனால் அவற்றை வகுப்பறைக்கு கொண்டு செல்ல முடியாது.

வகுப்பறையில், பொருட்களை நீங்கள் வழங்கும் போது ஷோகேஸ்ஸில் வைக்கப்பட்டோ, சிறப்புத் தன்மையோடு கூடிய அபூர்வமான, விலை மிகுதியான, மிகவும் நுண்ணிய வேலைப் பாடுகளைக் கொண்டு செய்யப்பட்ட அல்லது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் பார்க்கும்படி மேஜை மீது வைத்துக் காண்பிக்கலாம். மிக அண்மையில் மாணவர்கள் பொருளை பார்த்து அறியும் பொருட்டு, மிகச்சிறியதாக, உடையாததாக, பாதுகாப் பானதாக இருப்பின் வகுப்பறையில் மாணவர்கள் அனைவருக்கும்

சிலவகைப் பொருட்கள் அதிகமாக அழுகக் கூடியவை. உதாரணம் - பச்சை இலைக்காய்கறிகள்.

நம்மை சுற்றி உள்ள சமூகத்தில் சில பொருட்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். உதாரணம் - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள் அல்லது உணவுப் பொருட்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை வெளிப்படுத்தும் பொருட்கள் கலை நயம் மிக்க சிற்பம் மற்றும் பழமையான கட்டட கலைகள் மற்றும் தற்போது உள்ளவைகள். ஒரு சில பொருட்களை அதிக விலை காரணமாக வாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. உதாரணம் - இயந்திரங்கள், உண்மையான அணிகலன்கள், நீலமான நிறத்தில் தோன்றும் மண்பாண்ட வேலைகள்.

உருமாதிரிகள் (Specimens)

ஸ்கல்லர், சார்லஸ், வால்டர் (1957) ஆகியோரின் கூற்றுப்படி ''உருமாதிரிகள் என்பது முழுமை பெறாத பொருளாகும் அல்லது, ஒரு குழு அல்லது தரம் வாய்ந்த ஒத்த பொருளுக்கு ஒரு மாதிரியாக அமைவது ஆகும். உதாரணம் முழுமை பெறாத பொருள் - பட்டுப் புடவையின் ஒரு பகுதி குழுவிற்கு மாதிரியாக இருப்பது - ஒரு இலை, ஒரு பசு, சுற்றறிக்கை மடிப்பு (folder) இவை பட்டாம் பூச்சி, பூக்கள் போல அழுகுவனவாக (perishables) இருக்கலாம் அல்லது ஓடுகள், துணிகள், கற்கள், தானியங்கள் போல அழுகாத நிலையான (non-perishables) பொருட்களாகவும் இருக்கவும்.

உருமாதிரிகள் விலை குறைந்தவை மற்றும் ஒரே ஆதாரத்தில் இருந்து பொருட்களாக எளிதாக பெற்று சேகரிக்கலாம். ஒரு சிலவற்றில் உண்மையான பொருட்களை உபயோகிக்க முடியாத நிலையில் உருமாதிரிகள் அந்த நோக்கத்தை பூர்த்தி செய்து விடும். உருமாதிரிகள் வகுப்பறையில் வழங்கப்படும் பொழுது உருமாதிரிகளின் அளவும், குழுவில் உள்ள மாணவர்களின் அளவினைப் (எண்ணிக்கையில் பொறுத்து அமையும்.

அவை மிகப் பெரிதாக இருந்தால், மேஜை மீது வைக்கவும். அப்போது மாணவர்கள் இருக்கையில் அமர்ந்தவாறு பார்க்க முடியும். உதாரணம் - அலங்கரிக்கப்பட்ட பெரிய மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்கள், கச் அல்லது ராஜஸ்தான். அவை மிகச் சிறியதாக, வசதியாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல கூடியதாக, மாணவர்களுக்கு இடையே வகுப்பு நடைபெறும் நேரத்தில் பார்க்குமாறு செய்ய வேண்டும். உதாரணம் - துணி துண்டுகள், காகித உருவ வடிவங்கள், நிற உருமாதிரிகள். சுற்றி வர அனுப்புவதற்கு முன் முகப்பு வரிச்சீட்டில் (label) குறிப்பிடவும். அவை மிகவும் சிறியதாக, வசதியற்றதாக, சுற்றி அனுப்ப பாதுகாப்பின்றி இருக்குமானால், மாணவர்களை ஒருவர் பின் ஒரு வராக தனித் தனி யே அல்லது சிறு குழுக்களில் முன்பக்கமாக வந்து, அவற்றை வகுப்பு நேரத்திலோ அல்லது பிறகோ படித்து அறியச் செய்யலாம். உதாரணமாக - வைரங்கள், வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள், நேர்த்தியான வெள்ளி அணிகலன், பொருட்கள் முதலியவை.

எப்போதும் உருமாதிரிகளை கவனமாக வருங்கால உபயோகத்திற்கு சேகரித்து வைக்க வேண்டும். அனைத்து உயிரியல் உருமாதிரியும் கண்ணாடி ஜாரில் அல்லது சிறுபுட்டிகளில் ஃபார்மலின், க்ளிசரின் போன்ற இரசாயனங்களைக் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. அழுகாதவை அல்லது உலர்ந்த உருமாதிரிகள் தெளிவாக, குறிப்பிடப்பட்ட மரத்தால் அல்லது ஸ்டீல் அலமாரிகளில் அல்லது குழிவான அட்டை பெட்டிகளில் சேகரித்து பாதுகாக்கப்படுகிறது. ஒரு உலர்ந்த உருமாதிரியை பசை, குண்டூசி, நாடா அல்லது நூலைக் கொண்டு விரைப்பான துண்டு அட்டையில் நன்கு பொருத்தி, பெட்டியின் குழிவான அடிப்பாகத்தில் வைக்கவும். குறிப்புச் சீட்டில் (label) ஒவ்வொரு உருமாதிரியின் பெயரையும் எழுதி ஒட்டவும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top