பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / தொடக்கக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொடக்கக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய முறைகள்

தொடக்கக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கணிதக் கல்வியை கற்பிக்க கணித ஆசிரியருக்கு ஏராளமான முறைகளும் நுணுக்களும் உள்ளன. மாணவர்களின் தேவை, பாடத்தின் தன்மை மற்றும் பாடத்தின் நோக்கங்களைப் பொறுத்து தேவையான கற்பித்தல் முறைகளை ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டும். சில முறைகள் குழு கற்பித்தலுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். சில முறைகள் தனி கற்பித்தலுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். கணிதம் புரிந்து கொள்வது மட்டும் கிடையாது, பல்வேறு முறைகளை பயன்படுத்தி கற்பிப்பது என்பது மட்டும் தான் கடினம். பள்ளிகளில் அனைத்து கணித பாடங்களும் கட்டமைப்புடன் நடைமுறைப் படுத்தப் படுகிறது. அன்றாட வாழ்க்கையில் பெறப்படும் அனுபவம், தொடக்கக்கல்வியில் கற்பிக்கப்படுகிறது. இப்பகுதியில் தொடக்கக்கல்வியில் கணிதம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.

கற்றலின் நோக்கம்

தொடக்கக்கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இருவருக்கும் பாட திட்டத்தை தயாரிக்கும் நிலையில் வகுப்பறைக்குச் செல்லும் போது தனக்குத் தானே இந்த வினாவை கேட்டுக் கொள்ள வேண்டும். “இப்பாடத்தின் மூலம் மாணவர்களிடம் நான் எவ்வகையான மாற்றத்தைக் கொண்டு வருவேன்? இவ்வகையான மாற்றங்கள் ஆசிரியரின் கல்வி நோக்கங்களாகும்!

கணிதத்தில் கற்றல் - கற்பித்தல் முறைகள்

மாணவர்களுக்கு பல்வேறு கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கற்பிக்கும் பொழுது, மாணவர்களின் கவனமானது ஆசிரியரின்பால் ஈர்க்கப்படுகிறது. ஆசிரியர் பல்வேறு நேரங்களில், பல்வேறு கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி கற்பிக்கும் பொழுது மாணவர்களுக்கு கற்பதில் சலிப்பு ஏற்படாது. மாணவர்களின் கவனம் ஆசிரியர்களிடம் இருக்கும்.

விதிவரு முறை - விதிவிளக்க முறை

கற்பித்தல் முறை மாறாத தன்மை கொண்டது. அது தோன்றிய காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளவரை காலத்தாலும், நபராலும், சூழ்நிலையாலும் மாறுவதில்லை. கற்பித்தல் முறையும், கற்பித்தல் உத்தியும் கல்விச் செயல்பாடுகளுடன் ஒன்றோடொன்று தொடர்புடையதாகும். பல்வேறு கற்பித்தல் முறைகளில் விதிவருமுறை விதிவிளக்க முறை அடிப்படையான முறையாகும்.

விதிவரு முறை - விளக்கம்

பல எடுத்துக்காட்டுகளையும், தெரிந்த உண்மைகளையும் மாணவர்களிடம் எடுத்துக்கூறி அவற்றிலிருந்து பொது விதியை வருவிக்கும் முறை விதிவரு முறையாகும்.

இம்முறையின் கோட்பாடுகள் :

  • தெரிந்ததிலிருந்து, தெரியாததற்குச் செல்லுதல்.
  • பருப்பொருளிலிருந்து கருப்பொருளுக்கு செல்லுதல்.
  • எளிமையிலிருந்து கடினத்திற்கு செல்லுதல்.

விதிவரு முறையின் ஐந்து படிநிலைகள்

  • ஆயத்தம் : புதிய அறிவை பெறுவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் சூழ்நிலையை உருவாக்குவது.
  • எடுத்துக்கூறல் : இங்கு தெளிவான எடுத்துக்காட்டுகள் மூலம் கற்பித்தல் முக்கிய இடத்தை பெறுகிறது.
  • ஒப்பிடுதலும் சுருக்குதலும் : இங்கு பிரச்சனையை தெளிவாக புரிந்து கொண்டு கொடுக்கப்பட்ட விவரங்களை ஒப்பிட்டு பிரச்சனையின் முடிவுக்கு தேவையான விவரங்கள் ஆராய்ந்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கற்ற அறிவுடன் புதிய அறிவு தொடர்புபடுத்தப்படுகிறது.
  • பொதுமைப்படுத்துதல் : மாணக்கர் புதிய சூத்திரம், விதி ஆகியவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகளிலிருந்து தாமே கண்டறிய முற்படுகிறார்கள்.
  • விதியை செயல்படுத்துதல் : பொது விதியை புதிய சூழ்நிலையில் பயன்படுத்தி சிக்கலை தீர்ப்பது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்.

3.17647058824
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top