பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / நன்னெறி ஆய்வக முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நன்னெறி ஆய்வக முறைகள்

நன்னெறி ஆய்வக முறைகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

நன்னெறி ஆய்வக முறைகள் - விளக்கம்

நன்னெறி ஆய்வக முறைகள் என்பது ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பிற ஆய்வகங்களில் கடைபிடிக்கப்பட்ட வேண்டிய மேலாண்மை வரைமுறைகளை உள்ளடக்கிய செய்முறைகளின் கூட்டமைப்பு, இந்த செய்முறைகள் ஆய்வக முடிவுகளின் நம்பகத்தன்மையையும், உறுதித்தன்மையையும் வெளிப்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்டவை. இவைகள், தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டுறவு கட்டமைப்பு தத்துவங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்ட முறைகள்.

நன்னெறி ஆய்வக முறைகள் என்பது நன்னெறி வேளாண்மை முறைகளில் ஒன்றாகவே இருக்கக்கூடிய நன்னெறி முறைதான். நிறைய சந்தர்ப்பங்களில் நன்னெறி முறைகள் என்பது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நன்கு பல முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உபயோகத்தில் உள்ள முறைகளே. நன்னெறி ஆய்வகமுறைகளில் எதுவும் தனிப்பட்ட வழி முறைகளைக் கொண்டவை அல்ல, பொதுவாக கடைபிடிக்க வேண்டிய நல்ல ஆய்வக முறைகளின் தொகுப்புதான். மற்ற நன்னெறி முறைகளுக்கும், நன்னெறி ஆய்வக முறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் மருந்துப் பொருட்களை சோதனை செய்ய கையாளும்போதும். விற்பனைக்குரிய வேதிப்பொருட்களின் தரம் குறித்த விசாரனை ஆய்வின் போதும் நன்னெறி ஆய்வகமுறைகள் மிகமிக கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும். மருந்துப்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் ஆய்வகங்களில் இந்த நன்னெறி ஆய்வக முறைகளின் கட்டாயப்பயன்பாடு, முறைப்படுத்தும் அரசாங்க அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறது.

நன்னெறி ஆய்வக முறைகள் வரலாறு

நன்னெறி ஆய்வகமுறைகள் பற்றிய கருத்து முதன்முதலாக 1970-களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கண்டறியப்பட்டது. அமெரிக்க, உணவு மற்றும் மருந்து கட்டுப்பர்டடு வாரியம், புதிய மருந்துகள், உணவு சேர்பார்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதுவாக இருந்தாலும் அவைகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்பட்ட பின்னரே மனிதர்களின் தேவைக்கு பயன்பாட்டிற்கு வெளியிடப்பட வேண்டும். என பரிந்துரை செய்தது. இந்த ஆய்வகப்பரிசோதனைகள் நன்கு வரையறுக்கப்பட்ட விஞ்ஞான தத்துவங்களின் அடிப்படையில், தரமான ஆய்வகங்களில் நடத்தப்பட்டால் மட்டுமே, அதன் முடிவுகள் மனித குல பயன்பாட்டிற்கு எற்ற பல நல்ல தகவல்களை அடைய உதவும் என முடிவு செய்து வலியுறுத்தியது. ஆய்வக நடைமுறைகள் பல்வேறு நிறுவனங்களில் சோதனையிடப்பட்டபோது, அவைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் 25 ஆண்டு வெளியீட்டில், ஆய்வகங்கள் உறுதியாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பிற்கு உகந்தவையாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தவற்காகவே நிர்ணயம் செய்யப்பட்டன.

நன்னெறி ஆய்வக முறைகள் வரையறை

நன்னெறி ஆய்வகமுறைகள் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் ஆய்வுக்கு பயன்படும் சோதனைக் கூடங்களில் சோதனை முறைகள் திட்டமிட்டு செயல்படுத்தி, கண்காணிக்கபட்டு, பதிவு செய்யப்பட்டு அறிக்கையிடும் முன்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஆய்வக முறைகளே இந்த முறைகளை கடைபிடித்து சோதனையில் ஈடுபடும் ஆய்வகங்கள், ஆய்வுக்கு உட்படும் மருந்துப்பொருளோ, வேளாண் வேதிப்பொருளோ அலங்காரப் பொருளோ, உணவு சுவையூட்டியோ, தீவன உட்பொருளோ, புதுவகையான உணவுப்பொருளோ அது எதுவாக இருந்தாலும் உபயோகிப்பார்க்கும் நுகர்வோருக்கும், மூன்றாம் நபருக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்புகளை அது ஏற்படுத்தும் என்பதான முடிவு அறிக்கை தரும்போது, நன்னெறி ஆய்வகமுறைகளை மீது நம்பகத்தன்மை முழுமையாக இருக்கும்.

நன்னெறி ஆய்வக முறைக்கான தேவை

வேளாண் வேதிப்பொருட்கள், கால்நடை மருந்துகள், வாசனை மற்றும் உணவுப் பொருள் வண்ணமூட்டிகள், மருத்துவ சாதனங்கள் மற்றம் உபபொருட்களை ஆய்வகங்களில் சோதனைக்கு உட்படுத்தும்போது, அவைகளின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிய நன்னெறி ஆய்வக முறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது

மருந்துப்பொருள் உற்பத்திக்கான ஆய்வக பரிசோதனைகள்

வேளாண் பூச்சிக்கொல்லிகள் உற்பத்திமேம்பாடு

நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களின் மேம்பாடு

வெடிபொருட்களின் தீங்கு பற்றி சோதனைகள்

உணவுபொருட்களின் தரக்கட்டுப்பாடு சோதனைகள்

மேற்காணும் சோதனைகளுக்கு நன்னெறி ஆய்வக முறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்

பாதுகாப்பு முறைகள்

அனைத்து ஆய்வுக்கூட பணியாளர்களும் ஆய்வுக் கூடத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் உள்ள அனைத்து கருவிகளும் நன்கு செயல்படுகின்றனதா என்பதை நன்கு அறிந்து பாதுகாக்க வேண்டும்.

இரசாயனப் பொருளை பயன்பாட்டிற்கு மேலாக ஆய்வுக்கூடத்தில் வைத்திருக்கக்கூடாது. பயன்படுத்த வேண்டிய இரசாயனப் பொருளைத் தவிர மீதமுள்ளதை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும்

பாதுகாப்பு காலனிகள், ஆய்வுக்கூட உடுப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை எப்பொழுதும் ஆய்வுக்கூடத்தினுள் செல்லும்போது அணியவும் ஆய்வுக்கூடத்தினுள் உண்ணுவது, குடிப்பது மற்றும் புகை பிடிப்பதை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது

பாதுகாப்பு சாதனம் மற்றும் முன்னெச்சரிக்கை நூலை சுலபமாக அறிந்து கொள்ளுமாறு வைக்க வேண்டும்

தீயணைக்கும் கருவி, புகைத் தொப்பி, இரசாயணம் சிந்தாமல் பாதுகாக்கம் உபகரணம், கண் துடைப்பான்கள் மற்றும் மற்ற பாதுகாப்பு சாதனங்களை பாதுகாத்து வைக்க வேண்டும

முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் ஆய்வுக்கூடத்தில் தயாராக வைக்கவும்

உபயோகப்படுத்திய திரவம் இரசாயனத்தை முறையான வழியில் அப்புறப்படுத்த வேண்டும். செயல்முறையை நிதானமாகக் கடைப்பிடிக்க வேண்டும்

ஆய்வுக்கூடத்தில் தனிமையாக வேலை செய்யக்கூடாது

அங்கக திரவத்தை பயன்படுத்தும் போது, தெளிவாக இல்லையென்றால் பகுப்பாய்வு செயல்முறைகளை பார்க்க வேண்டும். ஏன்என்றால் அங்கக திரவம் கேடு விளைவிக்கக் கூடியது.

மின் ஆற்றல், எரிவாயு கலன் மற்றும் சூடாக்கும் கருவிகளை நிதானமாக செயல்படுத்தவும்

வேலை செய்யும் போது புகை மூடியை பயன்படுத்தவும் மற்றும் தண்ணீரில் அமிலத்தை காரத்தையும் சேர்க்கவும்

உடைந்த கண்ணாடிக் கருவியை கையால் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. உடைந்த கண்ணாடிக் கருவிகளை எடுத்து அகற்றவும்

புதிதாக சேர்ந்த ஆய்வுக்கூட பணியாளர்களுக்கு விவரமாக அறிவுரையை எடுத்துரைக்க வேண்டும்

ஆய்வுக்கூட பணியாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிச்சையை மேற்கொள்ள வேண்டும்

பாதுகாப்பு செயல்முறையை ஆய்வுக்கூடத்தினுள் சுவற்றிள் ஒட்ட வேண்டும்

அவசர தேவையை கையாளுவதற்கு ஆய்வுக் கூட பணியாளர்களுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது

ஆய்வுக்கூட இடையூறுகள்

இரசாயனங்களின் மூலம் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் ஏற்படலாம். வெளிப்புற காயங்கள் என்றால் அது தோலில் சொறி அரிப்பு போன்ற பாதிப்பை இந்த இரசாயணங்கள் ஏற்படுத்தும் (அமிலம் காரம் எதிர்வினை உப்பு).

கவனக்குறைவாக உள்ள ஊற்று மற்றும் தண்ணீர் மற்றும் கருவியின் அரிப்பை முடிந்தவரை பாதுகாக்க வேண்டும்

உட்புற காயங்கள் என்பது இரசாயனங்கள் தெரியாமல் மேலே பட்டால் அதனை உடல் உறிஞ்சிக் கொள்ளும் பின் நச்சுப்பண்பு அல்லது அரிப்புத் தன்மையை ஏற்படுத்தும்

கரிமமற்ற அமிலங்கள் மற்றம் காரங்களில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு எல்லை உள்ளது. புகையினால் கண் எரிச்சல் அல்லது சேதம் ஏற்படும், தோல் சேதாரம் மற்றம் மூச்சுத் தினறல் பிரச்சனையும் உண்டாக்கும்.

சூடான அமிலங்கள் தோலின் மேல் உடனடியாக செயல்படத்துவங்கும். அமிலங்களையும், காரங்களையும் தனியாக நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஆவியாகக்கூடிய கரிமம் மற்றும் ஆக்சிஜனேற்றம் அடையக்கூடிய பொருள்களிடம் இருந்து தள்ளி வைத்து சேமிக்க வேண்டும்

தெளிப்பை கட்டுப்படுத்த மெதுவாக திடமான அமிலத்தையும், காரத்தையும் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தோலில் பட்டிருந்தால் உடனடியாக மாசுபட்ட இடத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவவும். கழுவிய பின் மருந்துகளை போடவும்.

உசோகங்கள் (உள்ளியம், நிக்கல், பாதரசம்) அதிகமான நச்சுப் பண்பு உடையது மற்றும் புற்றுநோய்யையும் உண்டாக்கும் தன்மை உடையது. உள்வாங்குவது, உண்ணுதல் மற்றும் தோலின் தொடர்பை தவிர்க்கவும்.

அனைத்துக் கரிம கரைப்பான்களும் இடையூருகள் ஏற்படுத்தக்கூடியவை. இதில் ஒரு சில கரிம கரைப்பான்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. இதனை அதிக எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும்.

பிப்பட்டை வாயில் வைத்து உறிஞ்சுவதை தவிர்க்கவும். தானியங்களின் பிப்பட்டை உபயோகிப்பது நல்லது

மின் ஆற்றலுக்குரிய பொருள்களும், எரிவாயு கலன்களிடம் இருந்து பொருளியல்புசார் இடரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஹைட்ரோப்ளூரிக் அமிலத்தை கண்ணாடிக் கருவியில் பயன்படுத்தக்கூடாது

கண்ணாடிக் கருவியை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாகப் பயன்படுத்தவும், ஏன்னென்றால் சூடான கண்ணாடிக் கருவியும் பார்ப்பதற்கு குளிர்ந்த கண்ணாடிக் கருவி போல் தென்படும்

ஆய்வகம் தயார்படுத்துதல்

இரசாயனக் கலவைகள் கையாளும் முறைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆய்வகம் ஒரு கருவியாக திகழ்கிறது. இந்த இரசாயனங்களை சிறப்பான முறையில் கையாளுவதற்கு சில வழிமுறைகள்

ஆய்வுக்கூடத்தினுள் நுழையும் முன் ஆய்வுக்கூட சோதனை மற்றும் பல பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையையும் தெரிந்து கொண்டு ஆய்வுக் கூடத்தினுள் நுழையவும்

ஆய்வுக்கூட செயல்முறைகளை திட்டமிட்டப்படி முன்கூட்டியே செய்ய வேண்டும் (ஏதாவது இருந்தால்). இவ்வாறு செய்தால் தேவையான கணக்கினையும், முக்கியமான குறிப்பையும் அறிய உதவும்

செயல்முறையைப் பற்றி கேள்விகளை பட்டியலிட்டு வைத்து அதனை தெளிவுபடுத்திக் கொள்ளவும். இது ஆய்வுக்கூடத்தில் நேரத்தை மிச்சப்படுத்தும்

அனைத்து குறிப்புகளையும் அட்டைப்போட்ட பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். தனித்தாளிளோ அல்லது வளைய சேர்ப்பிலோ பதிவு செய்யக் கூடாது ஏன் என்றால் சில சமங்களில் அந்த நாள்களில் துளைந்து போகக்கூடும்.

குறிப்புகள், நிறம் மாறுதல், வெப்பம் ஏற்கும் அல்லது வெப்பம் விடும் மாறுதல்கள், இயல்நிலை மாறுதல்கள், கொதிக்கும் நிலை, உருகு நிலை, உறையும் நிலை ஆகியவற்றை பதிவு செய்வது மிகவும் சிக்கலான ஒன்று

விவரக் குறிப்புகளை பார்த்து அந்த செய்முறையையும், எதிர்பார்த்தபடி முடிவுகளையும் எதிர்பார்க்கிறார்களா சந்தேகங்கள் இருந்தால் எந்த இடத்தில் சந்தேகம் இருக்கிறதோ அதனை மீண்டும் செய்து பார்க்க வேண்டும். சொந்த தவறுகளை அறிந்து கொள்வதை விட வேறு நல்ல பாடம் கிடையாது. தவறுகளை கண்டறிந்த பின்னரும் தெளிவில்லாமல் இருந்தால் ஆய்வக பயிற்றுனரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆய்வக பயிற்றுனர்கள் செய்முறைகளை சில சமயங்களில் மாணவர்களிடம் தனியாகவோ அல்லது சிறு குழுவாகவோ சேர்த்து சில முக்கியமான ஆய்வக விபரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைப்பார்.

கடைசியாக, ஆய்வுக்கூடத்தினுள் செய்யத்தக்கவையும், செய்யத்தகாதவையையும் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். இது சொந்த பாதுகாப்பு மட்டுமல்லாமல் உடன்படிக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக அமையும். மாணவர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்பட்டாலோ அல்லது நமக்கு ஏற்பட்டாலோ உடனடியாக ஆய்வகப் பணியாளர்களிடம் சாற வேண்டும். அவ்வாறு செய்தால் அது மிகப் பெரிய உதவியாகக் கருதப்படும்.

ஆய்வுக்கூடத் துணுக்குகள்

அங்கக ஆய்வுக்கூடத்தில் மட்டும் தண்ணீர் உபயோகிப்பது மிகவும் மோசமான செயல். நிறைய மாணவர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் செய்முறையை ஆரம்பிக்கும் பொழுது கண்ணாடிக் கருவியைக் கழுவி விடுகிறார்கள். இவ்வாறு செய்யும்பொழுது கண்ணாடிக் கருவி ஈராமாகி உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் இதனால் நேரம் வீணாகின்றது. ஆய்வு வகுப்பு முடியும் பொழுது கண்ணாடிக் கருவியை தண்ணீரில் கழுவி வைத்துவிட்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அடுத்த வகுப்பிற்கு வரும் முன் கண்ணாடிக் கருவி உலர்ந்துவிடும். ஒரு சமயம் தண்ணீரில் கழுவுவதை தவிர்க்க முடியாத சமயங்களில் அசிட்டோனை பயன்படுத்தலாம்.

எப்பொழுதும் வினைபொருளுக்கும், குடுவையில் உள்ள உட்பொருள்களுக்கும் குறியிடுதல் வேண்டும். நிறைய அங்கக திரவங்கள் அதாவது அமிலங்கள் மற்றும் காரங்கள் சுத்தமாகவும், நிறம் இல்லாமலும் தண்ணீர் போன்று இருக்கும். அதனால் குடுவையிலும் விளை பொருளுக்கும் குறியிடுதல் வேண்டும்

அங்கக திரவ விளைபொருளை கொள்ளளவு கொண்டு அளக்கலாம். பொதுவாக அங்க திரவங்களின் அளவை ஒன்று அல்லது நிறைய மேற்கோள் சுவடியில் குறிப்பிட்டுள்ளார்கள்.(பொருண்மை கொள்ளவு = அடர்த்தி)

திரவத்தைப் பற்றி பேசும்பொழுது - சில துணிகள் நைலான், செயற்கைப்பட்டு ஆகியவை அசிட்டோன் மற்றும் எத்தில் அசிடேட் கரைப்பானுடன் சேர்த்தால் அது கரைந்துவிடும். சல்ஃப்யூரிக் அமிலம் (இதே அமிலத்தை கார் பேட்ரிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது) வீரியங்குறைந்த பிறகும் காட்டன் துணிகளில் துளையை ஏற்படுத்தும். ஆதலால் ஆய்வுக்கூடத்தில் இருக்கும்பொழுது உங்கள் உடைகளுக்கு மேல் ஆய்வு உடுப்புகளை அணிந்து கொண்டு செய்முறையை துவங்க வேண்டும்.

பொதுவாக அங்கக இரசாயணங்களை பற்றி இளநிலை ஆய்வுக் கூடங்களில் இதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அறிந்து கொள்ள சில புத்தகங்கள் உள்ளன. அவை பின்வருமாறு

வேதியியல் மற்றும் இயற்பியல் கைப்புத்தகங்கள்

ஆல்டிரிச் இரசாயண நிறுவண அட்டவணை

தி மெர்க் இண்டக்ஸ்

குளிர்ந்த நீர் எப்பொழுதுமே குளிர்வியில் அடியில் புகுந்து குளிர்வியின் மேலே வெளியே வந்து விடும். நீரை ஊதவோ அல்லது முக்கவோ அவசியம் இல்லை. சூடாகும் முன் தண்ணீர் ஒடுகிறதா என்பதை மட்டும் தெளிவு படுத்திக் கொள்ளவும்

காய்ச்சி வடிப்பதற்கு முன் மற்றும் சாதனங்கள் பின் வாங்கும் முன் கண்ணாடியின் மேலே வெப்பநிலையை கண்டறியவும்

நிறைய அங்ககங்கள் தண்ணீரில் கலக்காமலும், கரையாமலும் இருக்கும். அதற்காக உபயோகமற்ற கொள்கலம் தேவைப்படுகின்றது. அங்ககத்தை கண்ணாடியினுள் ஊற்றக் கூடாது

அங்ககப் பொருள் மற்றும் நீரைப் பிரித்தெடுக்கும் போது ஆய்வின் கருப்பொருள் எதில் உள்ளது என்று உறுதிபடத் தெரியும். வரை அதை வீணாக்கிவிடாமல் சேமித்து வைக்க வேண்டும்

கொதிக்கும் குவளை உலர்வதற்கு முன் வடித்து விடுதல் வேண்டும்.

போதுமான அளவு மசகையை கண்ணாடி ஒட்டுகளில் போடவும். எதற்காக என்றால் உரைவைக் கட்டுப்படுத்த (அதிகமாக மசகையை போடக்கூடாது ஏன்னென்றால் ஒட்டுகளில் சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்துவிடும்) மற்றும் டெஃளான் நெகிழ்வுக்குழாயை தவிர அனைத்து ஒட்டுகளிலும் போடவும். கண்ணாடி ஒட்டுகள் “திடமான காரம்” (பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியன) இவைகளுக்கு மசகையை ஒட்டுதல் மிகவும் அவசியம். செய்முறை முடித்த பிறகு சுத்தம் செய்யத் தவறினால் கண்ணாடியின் மேற்புறத்தில் என்றும் நிரந்தரமான முத்திரை படிந்துவிடும்.

எப்பொழுதும் எதிர்விளைவை பாதியிலே விட்டுவிட்டு செல்லக்கூடாது. தற்பொழுது ஆய்வுக்கூடத்தை விட்டு சிறிது நிமிடம் வெளியே செல்ல வேண்டும் என்றால் (ஓய்வு அறை இடைவெளியில்) உங்களில் ஒருவரை அல்லது பயிற்றுனரிடம் எதிர்விளைவையைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்ல வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

3.0875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top