பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / பள்ளிக் கணிதம் ஒரு பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கணிதம் ஒரு பார்வை

பள்ளிக் கணிதம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஒரு கணித ஆசிரியர் தன்னிடம் கணிதம் கற்கும் குழந்தைகளுக்கு கணிதத்தின் மீது ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும் முறை, மாணவர் ஆசிரியர் இடையேயான நல்லுறவு இடைவினை, இவை மாணவர்களுக்கு கணிதம் கற்பதில் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. கணிதம் ஒரு சிக்கலான பாடமா? கணிதக் கருத்துக்களை மனப்பாடம் செய்ய முடியுமா? கணிதத்தை மாணவர்களுக்கு விருப்பமானதாகவும், புரிந்துகொள்ளுமாறு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் ஆகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை (1986)

கணிதம் என்பது ஒரு குழந்தையை பயிற்றுவிக்கும் அமைப்பாகவும், நினைப்பதற்கும், காரணங்கள் கண்டறியவும், பகுத்தறியவும் தர்க்கரீதியாக விவாதிக்கவும் பயன்படுகிறது. மற்ற அனைத்து பாடங்களுக்கம் பகுத்தறிதல், காரணம் கற்பித்தல் போன்றவற்றை ஈடுபாட்டுடன் செய்ய கணிதம் பயன்படுகிறது. கணிதக் கல்வியானது தேசிய வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஒரு கருவியாக அமைகிறது. எனவே கணிதக் கருத்துக்களை முதன்மையாகக் கொண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005 உருவாக்கப்பட்டுள்ளது. "கேட்டறிதல், வெளிப்படுத்துதல், வினா எழுப்புதல், விவாதித்தல், பயன்படுத்துதல், கருத்துக்களை பிரதிபலித்தல், புதிய கருத்துக்களைக் கட்டமைத்தல” போன்ற கருத்துக்களை NCF -2005 முதன்மையாகக் கொண்டு குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது.

மேற்கூறிய உயர்ந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு NCF -2005 குழந்தைகளின் பார்வையில் பள்ளிக் கணிதம் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்பதனை வரையறுத்துள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், ஊகித்தப் பின் சரியா எனப்பார்க்கும் பயிற்சிகள் முதலியன ஆகும்.

கணிதம் என்றால் குழந்தைகள் தாங்களே சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வழிமுறைகளுக்கு பழக்கப்படுத்துவதற்கான செயல்பாடுகள் என்பது ஒரு பொருள்.

கற்பிப்பதில் ஏற்படும் பிரச்சனைகள்

பயம் மற்றும் தோல்வி

பயம் மற்றும் தோல்விக்கு விழிப்புணர்வுயின்மையே மற்றொரு காரணியாக அமைகிறது. இலக்கங்களின் இடமதிப்பை பற்றி அறிய முடியாததால் நான்கு அடிப்படை செயல்களையும் கற்கத் தவறுகின்றனர்.

கலைத்திட்டத்தில் ஏமாற்றம்

கணித கலைத்திட்டம் சுமை மற்றும் கவர்ச்சியற்றதாக இருப்பதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அநேக கணித கலைத்திட்டத்தில் பலவழிமுறைகள், சூத்திரங்கள், தேற்றங்கள், கருத்துக்கள் ஆகியவை அழுத்தமாக கூறப்படுகின்றன. பாடத் திட்டங்கள் கடினமானவையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கணிதக் கலைத்திட்டம் வாழ்க்கைக்கு அப்பாற் பட்டுள்ளது

கற்பித்தல் பொருள் பற்றாக்குறை

அதிகபட்ச மாணவர்கள் தொடக்கப்பள்ளியில் பாடப்புத்தகத்தையே வளமாக ஏற்றுக் கற்றுக் கொள்கின்றனர். கணிதப் புத்தகங்கள் பாடச்சுமை மற்றும் விதிமுறைக்கு உட்பட்டே இருக்கின்றன. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் களிப்புடனும் கற்க இயலவில்லை. கிராமங்கள், குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் கணிதப் புத்தகத்தை தவிர வேறு ஏதேனும் கற்பித்தல் பொருள்களைக் கொண்டு கற்பித்தால் சிறப்பாக இருக்கும்.

ஒழுங்கற்ற மதிப்பீடு

கணிதக் கலைத்திட்டம் சூத்திரங்களை மனப்பாடம் செய்வதையே வலியுறுத்துகின்றது. வகுப்பறைக் கற்றல் தேர்வை முன்னோக்கியே அமைந்துள்ளது. நம் பள்ளியில் பல விதமான தேர்வுகள் மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பீடு செய்ய உதவுகிறது. வினாத்தாள்கள் மாணவர்களின் அனுபவத்திற்காக அல்ல, மாணவர்களின் சரியான விடையை தேர்வு செய்வதற்கு ஆகும்

மேலும் இது மாதிரியான மதிப்பீடுகள் பகுத்தறி மற்றும் தொகுத்தறி முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான மதிப்பீட்டு முறை ஒழுங்கற்ற இயந்திரத்தனத்தை வலியுறுத்துகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை

ஆரம்பப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அவ்வாசிரியர் கற்பிக்கும் பாடத்தை சார்ந்தே உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, பிற ஆசிரியர்கள் கணிதம் கற்பிப்பதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் பாடப்புத்தகத்தை சார்ந்தே இருக்கின்றனர். அநேக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் அனைத்துக் கற்பித்தல் பொருள்களும் உள்ளன என நினைத்தக் கொள்கின்றனர். ஆதலால் ஆசிரியர் தயாரித்தலில் பற்றாக்குறை உள்ளது.

கற்றல், கற்பித்தல் முறை

தொடக்கக் கல்வியில் கற்றல், கற்பித்தல் கவர்ச்சியற்ற முறையில் உள்ளது. ஏனெனில்

 • புத்தக அறிவு போதுமானதாக இல்லை .
 • பள்ளி கணிதக் கற்றல் சோர்வுடனும், விருப்பமற்றதாகவும் அமைந்திருக்கிறது
 • குருட்டு மனப்பாடத்தை வலியுறுத்துகிறது.
 • கற்பித்தலை விட கற்றலை வலியுறுத்துகின்றன.
 • புரிந்து கொள்ளுதல், பயன்படுத்தல், திறன்கள் ஆகியவற்றை புறக்கணிக்கின்றன.

ஆர்வப் பற்றாக்குறை

பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் கணிதம் கற்றலை கடினம் என்று எண்ணி நம்பிக்கையை இழக்கின்றனர். கணித கற்றல் மற்றும் கற்பித்தல் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் அமைவது இல்லை. மாணவர்கள் கணிதம் கற்பதன் பயனை அறிவதில்லை. ஆகையால் கணிதம் கற்பதில் விருப்பமின்மையே காணப்படுகின்றது.

வகுப்பறைச் சூழலுக்கு அப்பால் கணிதம்

ஆரம்பப் பள்ளிகூடத்தில் பாடப்புத்தகங்கள் மட்டுமே கற்பதற்காக இருக்கின்றன. பல விதங்களில் மாணவர்கள் பாடப்புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை கருத்தில் கொள்வதற்கு வழியில்லை. ஏனெனில் தேர்வில் பாடப்புத்தகங்களில் உள்ள கேள்விகளை மட்டுமே கேட்கின்றனர். சில கேள்விகள் மனதில் எழுகின்றன. அவை, பாடப்புத்தகங்கள் மட்டுமே முழுஅறிவை தருவது இல்லை. குழந்தைகளின் அறிவைப் பற்றி எழுத்தாளர்களுக்கு முழுமையாக தெரிந்திருக்கின்றதா? குழந்தைகளின் சூழலை கருத்தில் கொள்கிறார்களா? நம்மிடம் இக்கேள்விக்கான ஏற்றுக்கொள்ள தக்க பதில்கள் இல்லை. ஆனால் பாடப் புத்தகம் மட்டுமே கற்பிப்பதற்காக போதுமானதாக இருக்கிறது.

குழந்தைகள் ஆசிரியர்களிடம் மட்டும் கற்றுக்கொள்வதில்லை தன்னுடன் உள்ள குழந்தைகளிடமும், சூற்றுச்சூழலிலிருந்தும் கற்றக்கொள்கின்றன. அவர்கள் உணர்வு மூலமாக நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் சுவைத்தல் மூலமும் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்கின்றனர். ஒரு குழந்தை எளிமையாக கற்றல் கற்பித்தல் திறனை ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் வளர்த்துக் கொள்கிறது. குழந்தைகளுடைய பங்களிப்பு, சிந்திக்கும் அளவு, இவைகளை சார்ந்து குழந்தைகளுக்கு கற்றல் சூழல் அமைகிறது. அதிகப்படியான குழந்தைகள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் கற்றுக் கொள்கின்றனர். அதாவது வீடு, விளையாட்டு மைதானம், சந்தை, மற்றும் பல. அதனால் நம்முடைய குறிக்கோளானது பள்ளிக் கல்வியை மகிழ்ச்சியான அனுபவமாகவும், வகுப்பறையில் கற்கும் கல்விக்கும் வகுப்பறைக்கு வெளியில் கற்கும் கல்விக்கும் தடைகளை தவிர்க்க வேண்டும் என்பதாகும்.

பள்ளியில் பெறும் அறிவை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துதல்

அங்காடி

மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் அங்காடிக்குச் சென்று அங்கு பொருட்கள் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் அவர்களின் அணுகுமுறைகளையும், உற்றுநோக்கியிருப்பர். இலாபம், நட்டம் கணக்கிடுதல், விலைப்பட்டியல் தயாரித்தல், எடைகண்டறிதல், பணம் எண்ணுதல் போன்றவைகளில் மாணவர்கள் கணிதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தோட்டம்

சிறுவயது குழந்தைகள் ஒப்பார் குழுவுடன் விளையாடும் போது வீடு, தோட்டம் போன்ற அமைப்புகளை உருவாக்கி விளையாடும் போதும் கோணங்கள், வடிவங்கள், கோடுகள், பரப்புகள், சராசரி போன்ற கணிதக் கருத்துக்களை அவை கணித கருத்துக்கள்தான் என்பதை அறியாமலேயே பயன்படுத்துகின்றனர். இந்த அனுபவங்களை கணித கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் கணிதத் தொடர்பான முறையான அறிவினைப் பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நடைமுறை வாழ்க்கை

ஒரு தவளை ஒரு கம்பத்தில் பகலில் 30 மீ ஏறி நகர்ந்து இரவில் 20 மீ சறுக்குகிறது. அந்த கம்பத்தின் உயரம் 70 மீ என்றால் எத்தனை நாட்களில் தவளை கம்பத்தின் உச்சியை அடையும்? உயர் தொடக்கக்கல்வி பயிலும் அநேக மாணவர்கள் ஏழு நாட்களில் என்பதையே விடையாக கூறுவர். ஆனால் மிகச் சிலரே 5 நாட்களில் என்ற விடையை அளிப்பர். குழந்தைகள் இயற்கையுடன் இடைவினையாற்றும் போது (இயற்கை சூழலில்) புலன்காட்சி தொடர்பான அறிவினை பயன்படுத்துகின்றனர் எனவே குழந்தைகளின் நடைமுறை வாழ்க்கை அனுபவங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.

உருவங்கள் வடிவமைத்தல்

மாணவர்கள் தங்கள் புத்தகங்களுக்கு உறையிடுதல், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல், வீடுகளை அலங்கரித்தல், தோட்டங்களை பராமரித்தல், செடிகளை பாதுகாத்தல், விளையாட்டுப் பொருட்களை வடிவமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் கணிதத்தைப் பயன்படுத்துகின்றார்களா? உங்களது பெயரை வடிவமைக்க எத்தனை தீக்குச்சிகள் பயன்படுத்தப்பட்டன? இத்தகைய செயல் முறைகளை ஆசிரியர் உற்று நோக்கி வகுப்பறையில் பயன்படுத்தவேண்டும்.

விழாக்கள்

நம் வீடுகளில் மற்றும் பள்ளிகளில் நிறைய விழாக்களை கொண்டாடுகிறோம். மாணவர்கள் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, ஈகைத்திருநாள், கிறிஸ்துமஸ் போன்றவற்றை முழுமனதுடன் கொண்டாடுகிறார்கள். இத்தகைய நாட்கள் நினைவை விட்டு நீங்காமல் இருப்பதற்காக பல செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அங்காடிக்குச் சென்று பலவகைப் பொருட்களை வாங்குதல், பள்ளியை அலங்கரித்தல், தெருக்களை அலங்கரித்தல், இனிப்புகள் வழங்குதல் போன்ற சமயங்களில் கணிதத்தைக் கற்றுக் கொள்கின்றனர். (கணித அறிவினைப் பெறுகின்றனர்.)

விளையாட்டு மைதானம்

மாணவர்கள் கபடி, கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் பல உள்ளரங்க விளையாட்டுகளையும், விளையாடுகின்றனர். தங்களுக்குரிய விதிகளை தாங்களே உருவாக்குகின்றனர். அவர்களுக்குரிய விளையாடும் களத்தை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். மாணவர்கள் வட்டங்கள், சதுரங்கள் செவ்வகங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களை வரையும் விதிமுறைகளை அறியாமலேயே வரைகின்றனர். தனி மற்றும் குழுவிற்கான புள்ளிகளை (மதிப்பெண்களை) கணக்கிட அவர்களின் சொந்த வழிமுறைகளை கையாளுகின்றனர்.

கணிதம் கற்றலை இனிமையாக்குதல்

பள்ளிகளில் கணிதம் கற்பது அநேக நேரங்களில் கடினமானதாக, சோர்வளிப்பதாக, சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்தோசமற்ற அனுபவங்களே இதற்கான முக்கியமான காரணமாகும். நாம் கணிதம் கற்பிக்கும் போது கற்றுக்கொள்ள வேண்டியவை, மாணவர்களுக்கு கணிதத்தை விருப்பமாக கற்றுக் கொடுப்பது எப்படி? அவர்களுடைய தேவைகளையும் ஆர்வத்தையும் என்னவென்று அறிய வேண்டும்.

கணிதம் கற்றலின் சூழலை உருவாக்குதல்

ஆரம்பப் பள்ளிகளில் கணிதம் கற்பிக்கும் சூழ்நிலைகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைவது இல்லை. பல குழந்தைகளுக்கு கணிதத்தின் மீது உள்ள பயமும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இல்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்றவாறு கணிதத்தை கற்க வழிகாட்ட வேண்டும். ஆனால் ஆசிரியர்களே இவ்வாறான முறைகளில் தடுமாறுகின்றனர். பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் சூழ்நிலைகள் சரியாக அமைவது இல்லை. மாணவர்களுக்கு கணிதம் கற்பிப்பதில் மட்டும் முக்கியத்துவம் தராமல் மற்ற பாடங்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறியவேண்டியவை

 • வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
 • கணித கணக்கு போடும் போது மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் .
 • எந்த ஒரு குழந்தையின் திறனை அறியும் முன்பு ஆசிரியர்கள் அவர்களைப்பற்றி எவ்வித முடிவிற்கும் வரக்கூடாது.
 • கணிதத்தில் ஒரு கணக்கை முயற்சி செய்யும் போது குழந்தையின் திறனின் நிறை, குறைகளை அறிதல் வேண்டும்.
 • கணித கணக்கை முயற்சி செய்யும் போது அவர்களுக்கு போதுமான நேரத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

கணித ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை

பல மாணவர்கள் கணிதத்தை சுமையான பாடமாக கருதுகின்றனர் ஆசிரியர் நல்ல நடத்தையின் மூலம் மாணவர்களுக்கு கணிதத்தை கற்பிக்கலாம்.

 • நாள்தோறும் குழந்தைகள் கணித சம்பந்தமான நகைச்சுவை, கதைகள், புதிர்கள் போன்றவற்றை கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
 • கணிதப் பாடங்களுக்கு அப்பால் மற்ற விஷயங்களையும் கற்பிக்கவேண்டும்.
 • ஒரு மாணவர் பயிற்சியை முடிப்பதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.

கற்றல் கற்பித்தல் கருவிகள்

கணிதக் கருத்துக்களை மின் அட்டை, படங்கள், வரைபடங்கள், பொருள்கள் மற்றும் பிற பொருட்களின் மூலமாக மாணவர்கள் அறிந்துகொள்ள பயன்படுத்தலாம். கணிதப்பாடப்புத்தகம், கணிதமேற்கோள் புத்தகம், கதைபுத்தகம், கணித தந்திரக் கதைகள், புதிர்கள் புத்தகம், திட்ட புத்தகம், கணித வரலாற்று புத்தகம் இவற்றையெல்லாம் கணித ஆசிரியர் சேகரிக்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் உரையாடுவதன் மூலமாக கணித கருவிகளை சேகரித்துக் கொள்ளலாம்.

பள்ளிச் சூழ்நிலை

கணிதம் கற்பதற்கு பள்ளிசூழ்நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மாணவர் கணிதம் கற்பதற்கு உறுதுணையாக அமைவது சூழ்நிலையே ஆகும். வகுப்பறைச் சுவரும் பள்ளிகளும் கணிதத்தின் மூலம் வரையறுக்கப்பட்டது. கணிதத்தின் துல்லியமான கருத்தை சுவற்றில் அமைக்க வேண்டும். வகுப்பறையில் வழிபாட்டு நேரத்தில் சில கணித மேதைகளின் வரலாற்றை படித்தல் வேண்டும். சிறந்த வகுப்பறையில் கண்டிப்பாக மாணவர்களுடைய செயலும் பொருட்களும் இருத்தல் அவசியம்.

கற்றல் மையம் - அடிப்படைத் தேவைகள்

மின்னட்டை, கற்கள், கோல்கள், பொருள்கள், படங்கள், வரைபடங்கள், காலண்டர் விளையாட்டு அட்டைகள் மற்றும் பல இவை அனைத்தும் வகுப்பறையில் இருத்தல் அவசியம். ஆசிரியர் கற்றலின் மையத்திற்குச் செல்லும் போது, கணித செயல்பாட்டு துணைக்கருவிகளையும் கொண்டு செல்லுதல் வேண்டும். ஆசிரியர் கட்டாயமாக கற்றலின் மையத்தை தேவைக்கு ஏற்றபோது பயன்படுத்த வேண்டும்.

பொழுதுபோக்குச் சார்ந்த செயல்முறைகள்

இன்றைய பள்ளிக்கூடங்களில் பொழுது போக்கு சார்ந்த செயல்முறைகளை தவிர்க்கப்படுவதால் நல்ல நேர்மறை எண்ணங்கள் உருவாவதில்லை. மாணவர்களிடையே உள்ள நல்ல குணாதிசயங்கள் மேம்படுத்தபடுகிறது. அதனால் பொழுதுபோக்கு சார்ந்த செயல்முறைகள் இருத்தல் அவசியம்

மதிப்பீடு

கற்றுக்கொள்பவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது தன் குறிக்கோள்களை தீர்மானித்துக் கொள்கின்றனர் ஒரு குழந்தை தவறாக பதில் அளித்தால் அக்குழந்தையை அவமானப் படுத்தக்கூடாது. ஒருவருடைய தகுதியை அறிந்து செயல்படவேண்டும். செயல்பாட்டு கல்விப்பிரிவு ஒருவரின் கற்கும் திறனை தடுப்பதில்லை கணிதத்தை செயல்பாட்டு பிரிவு மூலம் விருப்பத்துடன் கற்பதே ஒருவருடைய நற்பண்பை வளர்க்கிறது பள்ளிகளில் உடலை வருத்தும் தண்டனையை தவிர்க்க வேண்டும். மற்றும் பள்ளி என்பது "தண்டனை இல்லாத இடமாக இருக்க வேண்டும்”.

தொகுத்தல்

 • கணிதக் கோட்பாடு என்பது பரந்த, விரிந்த குறிக்கோள்களாகும். கணித கோட்பாடுகளின் வளர்ச்சிகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், கண்டறிதலின் பயன்பாடுகள், தோராயமாக மதிப்பீடுகள், தேர்வு முறைகள், உருவமைப்பு, காட்சிப்படுத்துதல், வடிவங்களின் பயன்பாடுகள், காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் தொடர்புகளை உருவாக்குதல் மற்றும் கணிதம் சார்ந்த தகவல்கள் போன்றவைகளை கொண்ட கோட்பாடுகள் அடங்கியுள்ளன.
 • ஒரு குழந்தை கணிதத்தை கற்கும் போது உயரிய நோக்கம் வலுவடைகிறது. அதன் மூலம் தர்க்க முறையிலான முடிவும் கருத்தியல் சிந்தனை திறனும் வளர்கின்றது. ஒருவர் செய்யும் செயல் திறன்கள் பிரச்சனையை தீர்க்கும் மானப்பான்மை போன்றவற்றை உள்ளடக்கியது.
 • பள்ளிக் கணிதம் ஒரு சிறப்பு நோக்கத்துடன் வளர்ந்து வருகிறது. அவை எண்கள், எண் செயல்பாடுகள், அளவீடு, சம் மற்றும் சதவீதம் ஆகும். கணிதக் கல்வியானது அறிதல், புரிதல், உணர்தல், புலம், உடல், உள் இயக்கம், போன்றவைகளின் உதவியோடு பாடத்திட்டம், கலைத்திட்டம் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளை உருவாக்குவதற்கு வழிகாட்டல், மதிப்பாய்வு கேள்விகள் போன்றவற்றை உறுதிப்படுத்தி கூற பயன்படுகிறது.
 • NCF -2005 என்பது ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தினை விருப்பத்துடனும் அடிப்படை தன்மைகள் மூலமும் தொடர்புறவுடனும் கற்றுகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்.

2.78571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top