பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்

ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் பற்றிய தகவல்

ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்

ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அகில இந்திய கல்வி நிறுவனம், 1932ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த துறையில், இதுதான் இந்தியாவின் முதல் நிறுவனம். பொது சுகாதாரம் மற்றும் பொது அறிவியல் ஆகியவை தொடர்பான பல்வேறு துறைகளில், படிப்புகளை வழங்குதல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் முன்னோடி நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின், இத்தனையாண்டு கால அனுபவத்தில், இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும், பல சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளது இந்நிறுவனம்.

உள்கட்டமைப்பு வசதி

இந்நிறுவனத்தின் முக்கிய வளாகம், கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து இது 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம், கல்வித் துறைகள், விரிவுரையாற்றும் அறைகள் மற்றும் ஆய்வகங்கள் போன்றவை தனித்தனியே அமைந்துள்ளன. விடுதிகளும், அருகிலேயே அமைந்துள்ளன.

நூலக வசதி

மருத்துவ அறிவியல் துறையில் அமைந்துள்ள மிகச்சில (0 நூலகங்களில், இந்நிறுவன நூலகமும் ஒன்று. 24000 அறிக்கைகள், 24000 ஜர்னல்கள், 400 எலக்ட்ரானிக் ஜர்னல்கள் போன்றவை, இந்நூலகத்தின் பிரமாண்டத்திற்கு சில எடுத்துக்காட்டுகள். இந்நூலகத்தை, மேலும் பிரமாண்டப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில், MCI அங்கீகாரம் பெற்ற பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.எஸ்சி, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் என்ற பல நிலைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://aiihph.gov.in/?page_id=26 என்ற வலைத்தளம் செல்க.

துறைகள்

Bio - Chemistry and Nutrition

Epidemiology

Health education

Maternal and Child health

Microbiology

Occupational health

Public health administration

Public health Nursing

Environmental sanitation and sanitary engineering

Preventive and social medicine

Statistics

போன்ற பலவிதமான துறைகள் உள்ளன. இங்கே, சிறப்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த ஆராய்ச்சி நிறுவனத்தைப் பற்றி பலவிதமான தகவல்களை அறிந்துகொள்ள http://www.aiihph.gov.in/

2.97916666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top