பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம்

இந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம்

இந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம்

இந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம்(Indian Institute of Company Secretaries of India) என்ற அமைப்பானது, 1980ம் ஆண்டின் கம்பெனி செக்ரடரீஸ் சட்டத்தின் கீழ் முறைப்படுத்தப்பட்டது. இந்திய அலுவலக செயலர்களின்(Office secretaries) பணிகளை முறைப்படுத்தவும், மேம்படுத்தவும் நாட்டில் இருக்கும், அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பாக(ICSI) திகழ்கிறது. இந்தக் கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக தகுதிபெறும் நபர்களுக்கு, அலுவலக செயலர் என்ற தகுதிக்கான சான்றிதழை இந்நிறுவனம் வழங்குகிறது.

கடந்த 1960ம் ஆண்டு, கம்பெனி சட்ட வாரியமானது, கம்பெனி செக்ரடரிஷிப் என்ற பெயரில், அரசு டிப்ளமோ தகுதியில் ஒரு படிப்பை தொடங்கியது. அதேசமயம், இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் அதிகரிக்கவே, அதற்கான தேர்வுகளை நடத்த, 1968ம் ஆண்டு, இந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் இந்நிறுவனம், 1980ம் ஆண்டு, கம்பெனி செக்ரடரி சட்டத்தின் கீழ் உச்ச அமைப்பாக மாற்றப்பட்டது.

பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பயிற்சி

மாணவர்கள் அலுவலக செயலர்களாக உருவாகும் பொருட்டு, அவர்களுக்கு, தொலைநிலைக் கல்வி முறையில் பயிற்சி அளிக்கிறது. இதற்கென ஒரு மாணவர் பதிவுசெய்தவுடன், அவருக்கான அனைத்துவித பாட உபகரணங்களும் வழங்கப்பட்டு விடுகிறது. இந்தப் படிப்பில் விருப்பமுறையிலான, வாய்வழி கற்பித்தல் முறைகளும் உண்டு. அலுவலக செயலர் பணி என்பது மதிப்புவாய்ந்த மற்றும் அதிக வருமானம் தரும் பணி மட்டும் அல்ல. அது ஒரு திருப்திகரமானப் பணியும்கூட.

பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், அலுவலக செயலகப் படிப்பில் சேர்வதற்கு, 3 நிலைகளைக் கடந்துசெல்ல வேண்டும். அவை,

எக்சிக்யூடிவ் ப்ரோகிராம்

எக்சிக்யூடிவ் ப்ரோகிராம் என்ற நிலையைக் கடந்த பிறகு, 15 மாதங்கள் கொண்ட நடைமுறை பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும். மேலும், பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள், 2 நிலைகளைக் கடக்க வேண்டும். அவை,

இவைத்தவிர, 15 மாதங்கள் நடைமுறைப் பயிற்சியிலும் கலந்துகொள்ள வேண்டும்.

கலை-அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் பள்ளிப் படிப்பை முடிப்பவர்கள், 8 மாதகாலம் கொண்ட பவுண்டேஷன் ப்ரோகிராமில் கலந்துகொள்ள வேண்டும். நுண்கலை(Fine arts) துறையைத் தவிர, மற்ற அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எக்சிக்யூடிவ் ப்ரோகிராமில் கலந்துகொள்ளலாம்.

இதைப்பற்றி விரிவான தகவல்களை மேலும் அறிந்துகொள்ள http://www.icsi.edu என்ற இணையதளம் செல்லவும்.

ஆப்டெக் வழங்கும் கணினி பயிற்சி

  • இந்திய அலுவலக செயலர்களுக்கான கல்வி நிறுவனத்தின் உறுப்பினர்களுக்காக ஆப்டெக்(APTECH) என்ற நிறுவனம், கணினிப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள http://www.icsi.edu என்ற இணையதளம் செல்லவும்.
  • அலுவலக செயலர் படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் பற்றி அறிந்துகொள்ள http://www.icsi.edu என்ற இணையதளம் செல்லவும்.

பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டமைப்பு

பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ், அலுவலக செயலக துறையில், வாய்வழி கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இவை குறித்து முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள http://www.icsi.edu என்ற இணையதளம் செல்லவும்.

பிரிவுவாரியான தகவல்கள்

அலுவலக செயலகத் துறையில் வழங்கப்படும் படிப்புகள், அதனுடைய தர நிலைகள், அவற்றுக்கான வேலை வாய்ப்பு, கட்டணங்கள் மற்றும் கால அளவுகள், இதர துணைப் பயிற்சிகள், பட்டங்கள் மற்றும் விருதுகள் போன்ற சகலவிதமான தகவல்களையும் பிரிவுவாரியாக தெரிந்துகொள்ள http://www.icsi.edu என்ற இணையதளம் செல்லவும். அந்த இணையதளம் சென்று, பிரிவுவாரியாக நமக்குத் தேவையான தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

3.10869565217
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top