பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்

இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்

செலவு கணக்காளர் துறை

இரண்டாம் உலகப்போர் துவங்கிய ஆரம்ப வருடங்களில், உலக தொழில்துறை வட்டங்களில், செலவு கணக்காளர் துறை தொடர்பான ஒரு தனித்துவமான கருத்தாக்கம் தோன்றியது. அச்சமயத்தில், போரில் ஈடுபட்டிருந்த நாடுகளால், போர் தளவாடங்களுக்கான செலவை தீர்மானிக்க முடியவில்லை. போரின் முடிவில், போரினால் சேதமடைந்த தங்கள் நாட்டு உள்கட்டமைப்பை சீர்செய்ய வேண்டியிருந்தது. இதன்பொருட்டு, தங்கள் நாட்டு பொருளாதாரத்தை தொழில்மயமாக்கவும் வேண்டியிருந்தது. இதேபோன்று, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளிலும் தொழில்துறை வளர்ச்சிகள் வேகம் பிடித்தன. 1940 மற்றும் 50ம் ஆண்டுகள், தொழில்மயமாக்கலின் பொற்காலம் எனப்படுகிறது. செலவு கணக்கிடுதல் என்பது, அரசு கொள்கை வகுக்கும் செயல்பாட்டின் மைய அம்சமாக மாறிப்போனது.

இந்தியாவில் இத்துறைக்கான கல்வி நிறுவனம்

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்(ICWAI) ஏற்படுத்தப்பட்டது. இந்நிறுவனமானது, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செலவு மற்றும் மேலாண்மை கணக்கிடுதல் துறையில், இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் வழங்கக்கூடிய ஒரு உச்சபட்ச தொழில்முறை அமைப்பாகும்.

ஒரு செலவுக் கணக்காளர் என்பவர், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சேவைகளை மதிப்பிடுதல் அல்லது செலவு கணக்கிடுதல் மற்றும் அதன் தொடர்புடைய அறிக்கைகளை தயாரித்தல், சரிபார்த்தல் மற்றும் சான்றழித்தல் போன்ற பணிகளை செய்கிறார்.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் உள்ளது.

செலவு கணக்காளர்(COST ACCOUNTANT) என்பவர் யார் மற்றும் அவரது பணிகள் என்ன?

மிக முக்கியமான மேலாண்மை பணிகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டில் உருவான புதிய துறைகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு நிறுவனத்தின் அனைத்து துறைகள் தொடர்புடைய நிதி தகவல்களை சேகரித்தல், திரட்டுதல், வரிசைப்படுத்தல் மற்றும் பகுத்தாய்தல் போன்றவை செலவு கணக்காளரின் பணிகளாகும். நிதி தொடர்பான விவரங்களை நிர்வாகத்திற்கு முழுமையாக வழங்கி, நிர்வாகத்தின் முடிவுகள் நிறுவன நிதி நிலைக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்வது இவரின் பிரதானப் பணி. எனவே, நிறுவன செயல்பாட்டில் இவர் முக்கிய இடத்தைப் பெறுகிறார். கடந்தகால மற்றும் நிகழ்கால நிதி செயல்பாடுகளின் அடிப்படையில், திட்டங்களுக்கான ஒரு தொலைநோக்கு வரையறையை வழங்குவதும் இவரின் பணி. இதன்பொருட்டு, கச்சாப் பொருட்கள், பணியாளர்கள், போக்குவரத்து மற்றும் இதர நடவடிக்கைகளின் செலவுகள் குறித்து தெளிவான விவரங்களை வைத்திருக்க வேண்டும். இதன் மூலமே, நிறுவனத்தில் தயாரிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கையை சிறப்பாக தயாரிக்க முடியும்.

ICWAI என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் நிறுவனம், நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்றுகிறது. இன்றைய உலகச் சூழலில், பாரம்பரிய முறையிலான அக்கவுண்டிங் மற்றும் ஆடிட்டிங் முறைகளின் முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டு, கணக்காளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி ஆதாரம், நிலம் மற்றும் வியூக முடிவுகள் போன்ற விஷயங்களில் அதிகமான பங்களிப்பை மேற்கொள்கிறார்கள். இதன்மூலம், செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்களாக, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய பரிமாணத்துடன் திகழ்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் நோக்கங்கள்

  • செலவு மற்றும் மேலாண்மை கணக்கிடுதல் செயல்பாட்டை, அனைத்துவித பொருளாதார நடவடிக்கைகளிலும் ஒரு சக்திவாய்ந்த நிர்வாக நிர்வாக அம்சமாக மாற்றுவது.
  • செலவு மற்றும் மேலாண்மை கணக்கிடுதல் செயல்பாட்டில் சேர்க்க வேண்டிய அறிவியல் அம்சங்களை மேம்படுத்துவது.
  • இத்துறையில் புதிதாக நுழைந்திருப்பவர்களை மேற்பார்வையிடுவது மற்றும் இத்துறையின் ஒழுங்கு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல் உள்ளிட்ட இன்னும் பலவிதமான நோக்கங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
  • இந்த கல்வி நிறுவனத்திலிருந்து உரிமம் பெற்ற ஒரு செலவு கணக்காளர், அத்துறையில் பணியை மேற்கொள்வதற்கு தகுதி உடையவராக ஆகிறார். தனியாகவோ அல்லது கல்வி நிறுவனத்தின் வேறு சில உறுப்பினர்களுடன் சேர்ந்தோ தனது பணியை செய்யலாம். இவரின் பணி நிலைகள் பலவகைப்படும்.

செலவின ஆணவங்களைப் பராமரித்தல், செலவின தணிக்கை போன்றவை அவற்றுல் சில.

இக்கல்வி நிறுவனத்தில் உள்ள படிப்புகளும், மாணவர் சேர்க்கை விபரங்களும்

படிப்பு

அடிப்படைப் படிப்பு

சேர்க்கைத் தகுதி - 17 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

விவரக் கையேட்டின் விலை ரூ.200

பாட உபகரணங்கள் உள்ளிட்ட போஸ்டல் டியூஷன் கட்டணம் ரூ.3500

வாய்வழி கற்பித்தல் கட்டணம் - ரூ.3500

இந்தப் படிப்பு பற்றிய இதர விரிவான விபரக்ஙளையும், விண்ணப்பிக்கும் விபரங்களையும், தேர்வு விபரங்களையும் தெரிந்துகொள்ள http://icmai.in/studentswebsite/Admission.php என்ற இணையதளம் செல்லவும்.

இடைநிலைப் படிப்பு

சேரும் தகுதி - 18 வயதிற்கு குறைந்தவராக இருக்கக்கூடாது. ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும், தற்காலிக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கட்டண விபரங்கள் மற்றும் இதர விபரங்களையும், விண்ணப்பிக்கும் விபரங்களையும், தேர்வு விபரங்களையும் அறிந்துகொள்ள http://icmai.in/studentswebsite/Admission.php என்ற இணையதளம் செல்லவும்.

கேட் நிலை சான்றிதழ்(Certificate in Accounting Technicians)

ஜுனியர் நிலையில், கணக்கிடுதல் துறையில் உள்ள தட்டுப்பாடுகளைப் போக்க, ICWAI, கணக்கிடுதல் வல்லுநர் படிப்பில்(CAT), ஒரு வருட சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளி மேற்படிப்பை முடித்த மாணவர்கள் இதில் சேரலாம். இந்தப் படிப்பை பற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள http://icmai.in/icmai/cat/ என்ற இணையதளம் செல்லவும்.

செலவின கணக்காளர்களுக்கான வேலை வாய்ப்புகள்

இன்றைய தொழில்முனைவோர் மத்தியில், இவர்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கூடியுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கான பணி வாய்ப்புகள் பொருளாதார மட்டங்களில் விரிவடைந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தின் பல உறுப்பினர்கள், நிர்வாக இயக்குநர், நிதி இயக்குநர், நிதிக் கட்டுப்பாட்டாளர், முதன்மை கணக்காளர், செலவு கட்டுப்பாட்டாளர், மார்க்கெடிங் மேலாளர், முதன்மை அலுவலக தணிக்கையாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

அரசு துறைகளில் பணி வாய்ப்புகள்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டில், செலவு கணக்காளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, IAS மற்றும் IFS சேவைகள் போல, இந்திய செலவு கணக்காளர்கள் சேவை(ICAS) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், விலை நிர்ணயித்தல், பொருத்தமான வருவாய் மற்றும் வரி கொள்கைகளை வகுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனைப் பெறப்படுகிறது.

கல்வித்துறை பணி வாய்ப்புகள்

இத்துறையில் பேராசிரியர் ஆக விரும்புபவர்கள், யுஜிசி வகுத்துள்ள விதிகளின்படி, NET/SLET போன்ற தேர்வுகளில் தேறியிருக்க வேண்டும்.

இத்துறைக்கான வேலை வாய்ப்புகள்

இத்துறையிலுள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள http://icmai.in/CPT/placement/index.php என்ற இணையதளம் செல்லவும்.

இத்துறை சார்ந்த பயிற்சித் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள http://icmai.in/studentswebsite/tnp.php என்ற இணையதளம் செல்லவும்.

இக்னோவுடன் ஒப்பந்தம்

ICWAI மாணவர்களுக்கு B.Com மற்றும் M.Com படிப்புகளை வழங்கும்பொருட்டு, கடந்த 2008ம் ஆண்டு, இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திற்கும், இதற்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ICWAI-ல் படித்துக்கொண்டே இந்த B.Com மற்றும் M.Com படிப்புகளை மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்கலாம். இதன்மூலம் மாணவர்கள், ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டங்களைப் பெறுவதற்கு வழியேற்படுகிறது. இதைப்பற்றி முழு விபரங்களை அறிந்துகொள்ள http://icmai.in/studentswebsite/ என்ற இணையதளம் செல்லவும்

இந்நிறுவனம் நடத்தும், அதன் உறுப்பினர்கள் மட்டுமே எழுதக்கூடிய  மேலாண்மை கணக்கிடுதல் தேர்வைப் பற்றி அறிந்துகொள்ள http://icmai.in/studentswebsite/exam.php என்ற இணையதளம் செல்லவும்.

இந்த நிறுவனம் பற்றிய அனைத்துவித பிரிவுவாரியான விபரங்கள் மற்றும் பாடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விதிமுறைகளைப் பற்றி அறிய http://icmai.in/

2.90243902439
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top