பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பவியல் நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பவியல் நிறுவனம்

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ICT ACADEMY OF TAMIL NADU) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஐசிடி அகாடமி மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தொழில் துறையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஐசிடி அகாடமி ஒரு சுயாட்சி உரிமையுள்ள, இலாபத்தைக் கருதிச் செயல்படாத நிறுவனமாகும். இது பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை உயர்கல்வி ஆசியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அதன் மூலம் மாணவர்களைத் தொழில் துறைக்கான தகுதி பெறச் செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னோடி நிறுவனமாகும்.

இந்நிறுவனம் கீழ்க்கண்ட தமிழக அரசு பிரதிநிதிகளைக் கொண்ட நிர்வாக குழு மற்றும் ஆலோசனை வாரியத்தில் ஒரு அங்கமாக அமைந்து செயல்பட்டு வருகிறது.

நிர்வாகக்குழுமம்

 • செயலாளர் - தகவல் தொழில்நுட்பவியல் துறை, தமிழ்நாடு அரசு.
 • நிர்வாக இயக்குநர், எல்காட் நிறுவனம்
 • ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்,
 • தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை.

ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்கள்:

 • கூடுதல் தலைமை செயலாளர் - தொழில் துறை, தமிழ்நாடு அரசு.
 • முதன்மை செயலாளர் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு.
 • முதன்மை செயலாளர் - உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு.

செயல்பாடுகள்

தமிழ்நாடு ஐசிடி அகாடமி பின்வரும் 7 முக்கிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

 • இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்
 • தொழில்முனைவு மேம்பாட்டுத் திட்டம்
 • ஆய்விதழ்கள் மற்றும் பிரசுரங்கள்
 • திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்
 • டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டம்
 • உயர்கல்வி ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்
 • தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனத் தொடர்புத் திட்டம்

ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்

ஐசிடி அகாடமி பல்வேறு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களை வடிவமைத்து, மாநிலமெங்கும் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகிறது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்

இந்திய மாணவர்களின் தொழில்நுட்ப ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில் இளைஞர்களின் தொழில்நுட்ப திறனை வளர்த்திட ஐசிடி அகாடமி இளைஞர் திறன் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

தொழில் முனைவோர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். வெற்றிகரமான தொழில் முனைவோர் நூதன முறையில் புதிய பொருட்கள் மற்றும் கருத்துகளைச் சந்தைப்படுத்தி, சந்தைத் திறனை கூட்டி, வளங்களை அதிகரித்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பர். மேலும் உலகமயமாகும் பொருளாதாரச் சூழலில் தொழில் முனைவோர் சந்தைப் போட்டிக்கு ஈடுகொடுக்க தேவையான கருத்துக்களை நூதன முறையில் உருவாக்குகின்றனர்.

 • தொழில் முனைவோர் விழிப்புணர்வுத் திட்டம்
 • தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி திட்டம்
 • இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்

இளைஞர்களின் தொழில்சார் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்துதல் என்பது அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து ஐசிடி அகாடமி இளைஞர் மேம்பாட்டை தனது ஒரு செயல்திட்டமாக செயல்படுத்தி வருகிறது.

ஆய்வுகள் மற்றும் பிரசுரங்கள்

அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் டிஜிட்டல் ஆப்ஜெக்ட் ஐடண்டிபையர் (Digital Objective Identifier) என்ற தனிப்பட்ட குறியீட்டை பெறுகிறது, DOI எண்ணெழுத்துச் சரம் சர்வதேச டிஓஜ பவுண்டேஷன் என்னும் பதிவு முகவர் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை வழங்குவதன் மூலம் அக்கட்டுரைகளுக்கான நிரந்தர இணைய இணைப்பு முகவரியைக் கொண்டு வாசகர்கள் இலகுவாக கட்டுரைகளைத் தேடி எடுக்க டிஜிட்டல் ஆப்ஜெக்ட் ஐடண்டிபையர் வகை செய்கிறது.

இன்டெக்ஸ் காப்பர்நிக்கஸ்

ஐசிடி அகாடமி சஞ்சிகைகள் இன்டெக்ஸ் காப்பர்நிக்கஸ் நிறுவனத்தால் குறியீடு செய்யப்பட்டுள்ளது, இன்டெக்ஸ் காப்பர் நிக்கஸ் என்பது இணைய வழி பயணர் பங்களிப்பின் தரவுகளை உள்ளடக்கியதாகும் இது அறிவியல் சமூகவியல் உறுப்பினர்கள், ஐரோப்பிய பிராந்தியத்திலுள்ள போலந்து நாட்டில் அமைந்துள்ளது. இது போலந்தில் அமையப்பெற்றுள்ள இன்டெக்ஸ் காப்பர்நிக்கஸ் நிறுவனம் அறிவியல் ரீதியான வெளியீடுகள் மற்றும் ஆய்வுச் சாத்தியங்கள் பரிசோதிக்க பல் அளவுரு ஆய்வை மேற்கொள்கிறது. இத்தரவுத்தளமானது இன்டெக்ஸ் காப்பாநிக்கஸால் இயக்கப்படுகிறது.

டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டம்

மாணவர்கள் டிஜிட்டல் சமுதாயத்தில் கற்கவும், பணிபுரியவும் இச்சூழலுக்கேற்ப வாழும் வகையில் டிஜிட்டல் கல்வி அறிவு திட்டத்தில் ஐசிடி அகாடமி கவனம் செலுத்தி வருகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை

3.07142857143
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top