பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / தேசிய ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையம்(என்.சி.ஆர்.ஏ.)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையம்(என்.சி.ஆர்.ஏ.)

தேசிய ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையம்(என்.சி.ஆர்.ஏ.)

அறிமுகம்

அடிப்படை ஆராய்ச்சிக்கான டாட்டா நிறுவனத்தின், தேசிய ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையமானது, வான்வெளி மற்றும் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் முதன்மையான நிறுவனமாகும். அனலாக் & டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ், சிக்னல் ப்ராசசிங், ஆண்டெனா டிசைன், தகவல்தொடர்பு மற்றும் மென்பொருள் மேம்பாடு போன்ற ரேடியோ வான்வெளி தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களில் பணிபுரிவதற்கான சிறப்பான வாய்ப்புகளை இம்மையம் வழங்குகிறது.

புனே நகருக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில், என்.சி.ஆர்.ஏ., மிகப்பெரிய மீட்டர்வேவ் ரேடியோ டெலஸ்கோப்புகளை கட்டமைத்து, அவற்றை இயக்கியும் வருகிறது. தேசிய சொத்தாக இருந்தாலும், இந்த டெலஸ்கோப்புகளை உலகளவில் உள்ள வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பல கண்டுபிடிப்புகளுக்கு வழி ஏற்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உதகையிலுள்ள ரேடியோ டெலஸ்கோப்பையும் இந்த நிறுவனம்தான் கட்டமைத்து இயக்குகிறது.

மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள்:

இந்நிறுவனத்தில் மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளும், ஆய்வாளர்களுக்கான ஆராய்ச்சி வாய்ப்புகளும் ஏராளமாக நிறைந்துள்ளன. அவைப்பற்றிய விவரங்களை இங்கே தருகிறோம்.

மாணவர்களுக்கான குறுகியகால மற்றும் நீண்டகால பயிற்சி திட்டங்களை என்.சி.ஆர்.ஏ. வைத்துள்ளது. குறுகியகால பயிற்சி திட்டமானது, கோடைகாலத்தில், முக்கியமாக இறுதியாண்டு படிக்காத மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டது. நீண்டகால பயிற்சி திட்டமானது, இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், படிக்கும் காலத்தில் மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டது. பொதுவாக இந்த நீண்டகால பயிற்சி திட்டத்தில் சேர்த்துக்கொள்ள குறிப்பாக பூனாவை சேர்ந்த மாணவர்களே பரிசீலிக்கப்படுகிறார்கள்.

இந்த பயிற்சி திட்டங்களில், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிக்னல் ப்ராசசிங், டேட்டா அனலிசிஸ் மற்றும் இமேஜ் ப்ராசசிங் போன்ற துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஏதாவது ஒரு பிரிவில் பி.இ./பி.டெக். படிக்கும் மாணவர்கள் மற்றும் எம்.எஸ்சி. இயற்பியல்/வானவியல் படிக்கும் மாணவர்கள் இதற்கு தகுதிபெற்றவர்கள்.

பி.எச்டி. ஆய்விற்கு பிந்தைய உதவித்தொகை:

இந்தவகை உதவித்தொகைக்கு புனேவிலுள்ள என்.சி.ஆர்.ஏ. விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆராய்ச்சியானது குறைந்த அலைவரிசை ரேடியோ வான்வெளி ஆய்வு சம்பந்தமாகவே இருக்கும். மேலும் வான்வெளி இயற்பியல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் ஆய்வுசெய்ய சவாலான வாய்ப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

  • விசிடிங் மாணவர் ஆராய்ச்சி திட்டம்
  • ஐ.யு.சி.ஏ.ஏ. - என்.சி.ஆர்.ஏ. பட்டபடிப்பு பள்ளி
  • ரேடியோ வான்வெளி ஆய்வு பள்ளி
  • ரேடியோ வான்வெளி குளிர்கால பள்ளி
  • முதுகலை பட்டத்திற்கு பிந்தைய படிப்பின்போதான பயிற்சி திட்டம்

இந்த பயிற்சி திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.ncra.tifr.res.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

பணி வாய்ப்புகள்

இன்ஜினீயரிங் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் இங்கே பரவலான பணி வாய்ப்புகளும் உள்ளன.

வசதிகள்

நூலகம் - ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பலவிதமான ஜர்னல்களுடன், கணினிமயமாக்கப்பட்ட சிறந்த நூலகம் இங்கே உள்ளது. இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு ஒரு அறிவு களஞ்சியமாக இந்நூலகம் திகழ்கிறது.

இதைத்தவிர, சிறந்த வசதிகளைக் கொண்ட ரேடியோ பிசிக்ஸ் ஆய்வகம் மற்றும் கம்ப்யூடிங் வசதிகள் போன்றவை இந்நிறுவனத்தில் உள்ளன.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்களையும், செயல்பாட்டு தன்மைகளையும் அறிந்துகொள்ள www.ncra.tifr.res.in என்ற வலைதளத்தில் ஆராயவும்.

3.15
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top