பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருளாதார வளர்ச்சிக்கான கல்வி

பொருளாதார வளர்ச்சிக்கான கல்வி பற்றிய தகவல்.

பொருளாதார வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம்

மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான ஒரு சுயாட்சி நிறுவனம்தான், பொருளாதார வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம். இந்திய அளவில், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான, முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

கடந்த 1958ம் ஆண்டில் இக்கல்வி வனம் துவக்கப்பட்டது. இங்கே பணிபுரியும் பல ஆசிரியர்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்றும் விருதுவென்ற விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சித் துறைகள்

 • வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு
 • சுற்றுச்சூழல் மற்றும் வள பொருளாதாரம்
 • உலகமயம் மற்றும் வர்த்தகம்
 • தொழில்துறை
 • பணியாளர் நலம்
 • பேரளவு-பொருளாதாரக் கொள்கை மற்றும் மாடலிங்
 • மக்கள்தொகை மற்றும் மேம்பாடு
 • சுகாதார கொள்கை
 • சமூக மாற்றம் மற்றும் சமூக கட்டமைப்பு.

நிறுவனத்தின் பயிற்சிகள்

 • இந்தியன் எகானாமிக்ஸ் சர்வீஸ் நிலையிலான பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு, ரெகுலர் பயிற்சி திட்டங்களை இந்நிறுவனம் வழங்குகிறது. மேலும், Indian Economic Service நிலையிலான அதிகாரிகள் மற்றும் நபார்டு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு விடுமுறைகால பயிற்சிகளை வழங்குகிறது.
 • இந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலம் முதல், கற்பித்தல் மற்றும் சிறப்பு பயிற்சிகளுக்கான மையமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 1968ம் ஆண்டு முதல் இந்நிறுவனமானது, பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அடிப்படையிலான பயிற்சி

 • அரசாங்கம் அல்லது பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் வேண்டுகோள்களின்படி, குறுகியகால ஓரியண்டேஷன் மற்றும் Refresher படிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இவை பெரும்பாலும், பாடங்கள் சம்பந்தப்பட்டவை. தொழில்துறை, வேளாண் கொள்கை, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு போன்ற தலைப்புகளில், பெரும்பாலும் இந்த படிப்புகள் அமையும்.
 • சமீபத்திய சில ஆண்டுகளில், நபார்டு வங்கியின் மூத்த அதிகாரிகள், ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பொருளாதார துறையின் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்திய புள்ளியியல் துறை அதிகாரிகள் மற்றும் தணிக்கை மற்றும் கணக்கியல் துறை அதிகாரிகள் போன்றோர், மேற்கூறிய படிப்புகளில் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.

பிஎச்.டி., ஆய்வு

இக்கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவமும், புகழும் வாய்ந்த ஆசிரியர்கள், இந்நிறுவனத்தில் பிஎச்.டி, ஆய்வை மேற்கொள்வோருக்கு கைடுகளாக இருக்கின்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலபேர், இங்கு பிஎச்.டி., ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

இக்கல்வி நிறுவனத்தில், அமர்தியாசென், எலினார் ஆஸ்ட்ராம் போன்ற நோபல் அறிஞர்கள் உள்ளிட்ட, பல புகழ்பெற்ற உலகளாவிய அறிஞர்கள் வருகை புரிந்துள்ளனர்.

உதவித்தொகை திட்டங்கள்

சர் ரத்தன் டாடா டிரஸ்ட் போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப்

ICSSR பிஎச்.டி., உதவித்தொகை

இக்கல்வி நிறுவனத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும், 6 கல்வி நிறுவன டாக்டோரல் உதவித்தொகைகளை, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் வழங்குகிறது. இந்த உதவித்தொகைகளை, பொருளாதார வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம், பொருளாதாரத்திற்கும், சமூகவியலுக்கும் வழங்குகிறது.

இக்கல்வி நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://iegindia.org/.

3.08
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top