பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / மத்திய எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

மத்திய எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

அறிமுகம்

சி.இ.இ.ஆர்.ஐ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 1953, செப்டம்பர் 21 -இல் ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் ஏற்படுத்தப்பட்டது. இதுவும் சி.எஸ்.ஆர்.ஐ. அமைப்பின்கீழ் வருகிறது. இதன் தலைமையகம் பிலானியில் இருந்தாலும், மண்டல அலுவலகம் சென்னையிலும் இருக்கிறது. இந்நிறுவனம்,

  • மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பம்
  • ப்ராசஸ் கண்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் & ஆட்டோமேஷன்
  • மெஷின் விஷன் தொழில்நுட்பங்கள்

போன்ற முக்கிய துறைகளில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளது.

வளங்கள்

எலக்ட்ரோ ஆப்டிகல் சிஸ்டத்தின் மேம்பாட்டிற்காக, சிறந்த வசதியுள்ள ஆப்டிக்ஸ் ஆய்வகம் உள்ளது. மேலும் டி.எஸ்.பி. மற்றும் எப்.பி.ஜி.ஏ. ஆய்வகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் ஹார்டுவேர் & பர்ம்வேர் மேம்பாட்டிற்காக விரைவான ப்ரோடோடைபிங் சூழல் போன்றவை இருக்கின்றன. மேலும் உயர்தர சி.சி.டி. கேமராக்கள் & வேலைநிலையங்கள் போன்றவை உள்ளன. இதைத்தவிர, ஆராய்ச்சி & மேம்பாட்டு பணிகளின் தேவைக்காக சிறந்த வொர்க்ஷாப், சி.ஏ.டி. & டிராப்டிங் வசதிகள் போன்றவை உள்ளன.

சேவைகள்

பலதரப்பட்ட தொழிற்சாலைகள்(காகிதம், உணவு பதப்படுத்தல், பிளாஸ்டிக், தோல், சர்க்கரை, ரசாயனம் உள்ளிட்ட) மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சி.இ.இ.ஆர்.ஐ., பலவிதமான சேவைகளை செய்கிறது. அவற்றுள் முக்கியமானவை,

  • ஒப்பந்த ஆராய்ச்சி & மேம்பாடு
  • ஆலோசனை
  • தொழில்நுட்ப சேவைகள்
  • பயிற்சி

போன்றவைகளாகும்.

மேலும் மேற்கண்ட வகையிலான தொழிற்சாலைகளுக்கு, தொழில்நுட்பங்களை வழங்குவதோடு, அந்த குறிப்பிட்ட துறைகளில் ஆழமான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறது.

சி.இ.இ.ஆர்.ஐ. - சென்னை மையம்

இந்திய ப்ராசஸ் தொழிற்சாலைகளின் ஆட்டோமேஷனுக்காக, உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியில் சென்னை மையம் ஒரு முன்னோடி கேந்திரமாக திகழ்கிறது. இந்த மையம் 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது மற்றும் 1979 -இல் முழுஅளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாறியது. சமூகப் பயன்பாட்டிற்காக மெஷின் விஷன் சிஸ்டம் மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

மாணவர்களுக்கான பயிற்சி

இளநிலை பொறியியல், முதுநிலை படிப்பு மற்றும் பி.எச்டி. ஆய்வு செய்யும் பல கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களுக்காக , குறுகியகால பிராஜெக்டுகள், ஆய்வு கட்டுரைகள் போன்றவைகளை செய்யும் வாய்ப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

இதைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு, http://www.ceerichennai.org/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையிலுள்ள சி.இ.இ.ஆர்.ஐ. மண்டல மையத்தின் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கும்(சென்னை தொழில்நுட்பக் கழகம்), பிலானியிலுள்ள தலைமை நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2008 -இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் ஒத்துழைப்பில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்.

3.11428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top