பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)

மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)

அறிமுகம்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின்(சி.எஸ்.ஐ.ஆர்) கீழ், அமைக்க திட்டமிடப்பட்ட முதல் 4 ஆய்வகங்களுள் இந்த நிறுவனமும் ஒன்று. இது அடிப்படையில் 1944 -இல் செயல்படத் தொடங்கினாலும், அதிகாரப்பூர்வமாக 1950, ஆகஸ்ட் 26 -லேயே திறக்கப்பட்டது. ஆரம்ப நிலையில், நாட்டிலுள்ள பொருத்தமான தாது வளங்களை கண்டுபிடித்து, குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு அவை பயன்படுமா என்பதை கண்டுபிடிப்பதே இதன் பிரதான பணி. கண்ணாடி மற்றும் மண்பாண்டங்களில் தரக் கட்டுப்பாட்டு அம்சங்கள் மற்றும் கண்ணாடி தயாரிக்கும் இயந்திரங்கள், கண்ணாடி வடிவமைப்பு திறன் போன்ற பணிகள் அதிக கவனத்தைப் பெறுகின்றன. பல ஆண்டுகாலமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது. இதன் தயாரிப்புகள் சர்வதேச அளவில் கவனத்தையும், பாராட்டுகளையும் பெறுகின்றன. இதன் இரண்டு துணை ஆய்வு நிலையங்கள், உத்திரபிரதேச மாநிலம் குர்ஜா மற்றும் குஜராத்திலுள்ள நரோடா ஆகிய இடங்களில் உள்ளன.

நோக்கம்

இந்திய மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை வழங்கும் வகையில், அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை கண்ணாடி, மண்பாண்ட மற்றும் அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்குவது. கண்ணாடி & மண்பாண்ட பொருட்களின் கலைநயம் மற்றும் தரம் ஆகியவற்றில் நாட்டை சிறந்து விளங்க செய்வது. இத்துறையில் ஆராய்ச்சி & மேம்பாட்டு திட்டங்களை சர்வதேச அளவில் போட்டிபோடும் அளவில் உருவாக்குவது மற்றும் பொது-தனியார் பங்களிப்பை ஏற்படுத்துவது.

மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் படிப்புகள்

பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகளை சி.ஜி.சி.ஆர்.ஐ. நடத்துகிறது. பயிற்சி மற்றும் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள், மாதம் ரூ.2000௦௦௦ அல்லது ரூ.5000௦௦௦ என்ற முறையில் தங்களின் ஆய்வுக்கேற்ப ஒதுக்கப்பட்ட அளவில் பெறுவார்கள்.

இந்த கோடைகால பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டுமே பெறப்படும். மார்ச் மாதத்திற்கு பிறகு கண்டிப்பாக சேர்க்கை சம்பந்தமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படாது.

மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை இணையத்தளம் மூலம் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் இணையதளத்திலேயே அறிவிக்கப்படும்.

மேலும் இந்நிறுவனம் குறுகிய கால படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் அதுபற்றிய அறிவிப்புகள் பின்னர் வெளியாகும்.

கோடைகால பயிற்சி வகுப்புகள், குறுகியகால பாடத்திட்டங்கள் மற்றும் இந்நிறுவனத்தின் அனைத்து செயல்பாட்டு அம்சங்களை பற்றியும் அறிந்துகொள்ள www.cgcri.res.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

பணி வாய்ப்புகள்

இந்நிறுவனத்தில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்களாக சேர்வதற்கு, தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விசாரணை மற்றும் விண்ணப்பங்களை இந்நிறுவனம் வரவேற்கிறது. எனவே விருப்பமுள்ளவர்கள், தகுதி சம்பந்தமான விவரங்களை தெரிந்துகொண்டு, முயற்சி செய்யலாம். மேலும் தனது பணி வாய்ப்புகள் பற்றிய விளம்பரங்களையும் இந்நிறுவனம் செய்கிறது.

நூலக சேவை

இந்நிறுவன நூலகத்தில் கண்ணாடி, மண்பாண்டம் மற்றும் அவை சம்பந்தப்பட்ட 46,309 புத்தகங்கள் இருக்கின்றன. இதைத்தவிர இங்குள்ள இணையதள வசதியின் மூலமாக, 16 வெளியீட்டாளர்களின் 4200௦௦ இ-வெளியீடுகளை அணுக முடியும். மேலும் இந்நிறுவன நூலகமானது,

வளப் பகிர்வு, புத்தக தேடல் சேவை, ஆவணப்படுத்தல் சேவை, நடப்பு விழிப்புணர்வு சேவை, செய்தி கிளிப்பிங் சேவை, பயனர் விழிப்புணர்வு சேவை உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது.

3.13888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top