மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் இயங்கும் ஒரு சுயாட்சி நிறுவனம்தான், மொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம். யோகா கல்வி, பயிற்சி, தெரபி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை திட்டமிடல், பயிற்சியளித்தல், உயர்த்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை செய்யும் ஒரு மைய நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனம் டெல்லியில் அமைந்துள்ளது.
கிளாசிக்கல் யோகா அடிப்படையில், யோக தத்துவம் மற்றும் பயிற்சி முறைகளைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வை உருவாக்குவதே இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம்.
மேலும், இதன் லட்சியம் என்னவெனில், யோகா மூலமாக, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அடைவதாகும்.
சிறப்பு யோகா மையங்கள்
பெங்களூர், புதுச்சேரி, டெல்லி, ஜாம்நகர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில், யோகாவிற்கான சிறப்பு மையங்களை ஏற்படுத்தி, யோகா மேம்பாட்டிற்கான சிறப்பு ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
துறைகள்
யோகா கல்வி, யோகா தெரவி மற்றும் பயிற்சி, யோகா ஆராய்ச்சி, தகவல்தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துதல் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகள் இங்குள்ளன.
போன்றவை இத்துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. விரிவான விபரங்களுக்கு: http://www.yogamdniy.nic.in
யோகா ஆராய்ச்சி
தகவல்தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துதல்
விரிவான விபரங்களுக்கு: http://www.yogamdniy.nic.in
திட்டங்கள்
போன்றவை. விரிவான விபரங்களுக்கு http://www.yogamdniy.nic.in
இவைத்தவிர, இங்குள்ள, மொழிகளுக்கான துறையில், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
மேலும், யோகா அறிவியல் பிரிவில், பி.எஸ்சி., படிப்பும் வழங்கப்படுகிறது.
குறிப்பு
யோகா துறைக்கான இந்த மொரார்ஜி தேசாய் கல்வி நிறுவனமானது, யோகா தொடர்பான பல நிலைகளிலான படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. எனவே, யோகா ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்நிறுவனம் ஒரு பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. அவர்கள், தங்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கேற்ற படிப்புகளை, இந்நிறுவனத்தில், தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
இந்நிறுவனம் பற்றிய முழு விபரங்களுக்கு www.yogamdniy.nic.in