பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்

வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் பற்றிய தகவல்

வெளிநாட்டு வணிகம்

கடந்த 1963ம் ஆண்டு இந்திய அரசால் ஒரு சுயாட்சி கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டதுதான் வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம். வெளிநாட்டு வர்த்தக மேலாண்மை தொடர்பாக நிபுணர்களுக்கு உதவுதல், மனித வளத்தை செம்மைப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரித்தல், தரவுகளை உருவாக்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை இதன் முக்கியப் பணிகள்.

அம்சங்கள்

 • இந்திய வர்த்தகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான புதிய கருத்தாக்கங்கள் மற்றும் திறன்களை தூண்டுதல்
 • கார்பரேட் நிறுவனங்கள், அரசு மற்றும் மாணவர் சமூகங்களுக்கு, ஆராய்ச்சி அடிப்படையிலான கலந்துரையாடல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்
 • அரசு, வணிகம் மற்றும் தொழில்துறையின் தேவைகளை ஈடுசெய்ய, உதவியளிக்கப்பட்ட மற்றும் உதவியளிக்கப்படாத ஆராய்ச்சிகள் மற்றும் ஆலோசனைகளின் மூலம் செயல்படுதல்.

உள்கட்டமைப்பு வசதிகள்

அமைவிடம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதிக்கு மிக அருகில், குதூப் இன்ஸ்டிட்யூஷனல் பகுதியில், 6 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனமானது, தனது சேவையில் சிறப்பாக செயல்படத்தக்கதான இடவமைப்பினைக் கொண்டுள்ளது.

நவீன வசதிகளைக் கொண்ட வகுப்பறைகள், அரங்கம், கணினி மையங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு மையங்கள் போன்றவை உள்ளன.

விடுதிகள்

ஆண் - பெண்களுக்கான தனித்தனி விடுதிக வசதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதி அறைக்கும், இன்டர்நெட் இணைப்புடன், கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்நிறுவனத்தில் நடத்தப்படும் மேலாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சிகளில்() பங்கேற்போருக்கும் தேவையான தங்குமிட வசதிகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

நூலகம்

நவீன வசதிகளைக் கொண்ட சிறப்பான நூலகம் இங்குள்ளது. சுமார் 84,000 புத்தகங்களைக் கொண்ட இந்நூலகத்தில், 800 ஜர்னல்களும் கிடைக்கின்றன.

இவைத்தவிர, மிகச் சிறப்பான வசதிகளைக் கொண்ட கணினி மையமும் உள்ளது.

இந்நிறுவனத்திற்கு, டெல்லித் தவிர, கொல்கத்தாவிலும் வளாகம் உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

மத்திய மனிதவள அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், கடந்த 2009ம் ஆண்டு, இந்நிறுவனம், ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமான தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிறுவனத்தின் டெல்லி மற்றும் கொல்கத்தா வளாகங்களுக்குள் வழங்கப்படும் படிப்புகள்

வளாக படிப்புகள்

 • எம்.பி.ஏ படிப்புகள்
 • MBA (IB) : Full-Time ( 2 Years)
 • MBA (IB) : Part-Time ( 3 Years
 • எக்ஸிகியூடிவ் படிப்புகள்
 • Executive Post Graduate Diploma in International Business (EPGDIB)
 • Executive Post Graduate Diploma in Industrial Marketing (EPGDIM)
 • Executive Post Graduate Diploma in Capital And Financial Markets ( EPGDCFM )

சான்றிதழ் படிப்புகள்

 • Certificate Programme in Export Management (CPEM)
 • Certificate Programme in International Business Language (CCIBL)
 • Certificate Programme In Global Trade Logistics And Operations ( CPGTLO )

முனைவர் பட்டப் படிப்புகள்

 • Ph.D (Full-Time)
 • Ph.D (Part-Time)

வளாகத்திற்கு வெளியே வழங்கப்படும் படிப்புகள்

 • MBA in International Business (Tanzania)
 • Executive Post Graduate Diploma In International Business (through VSAT)
 • Executive Post Graduate Diploma in International Business Strategy (through VSAT)
 • Post Graduate Diploma in International Business for Young Managers ( PGDIBYM ) (through VSAT)
 • EMBA Bridge Programme (through VSAT)
 • Online Certificate Programme in Export Management

மாணவர் சேர்க்கை நடைமுறைகள் உள்ளிட்ட படிப்பு தொடர்பான பல விபரங்களை அறிய http://www.iift.edu/new/ என்ற வலைத்தளம் செல்லவும்.

ஆய்வுப் பணிகள் மற்றும் பயிற்சிகள்

WTO, உலக வங்கி, UNCTAD மற்றும் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றோடு இணைந்து, பல ஆய்வுப் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச வர்த்தகம் தொடர்பான பலவித நிலைகளில், 30 நாடுகளைச் சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட வர்த்தக பிரமுகர்களுக்கு பயிற்சியளித்து மேம்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் பற்றிய இன்னும் மேலதிக விபரங்களுக்கு http://tedu.iift.ac.in/iift/index.php

3.0487804878
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top