பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி

வேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி நிறுவனம் பற்றிய தகவல்

வேளாண்மை சந்தைப்படுத்தல்

வேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி நிறுவனம், 1988ம் ஆண்டு, இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில், வேளாண் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் பயிற்சியளிக்க தொடங்கப்பட்டது. இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு சுயாட்சி அமைப்பாகும்.

வேளாண் சந்தைப்படுத்தலில், பயிற்சியளித்தல், விரிவாக்குதல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு தலைமை அமைப்பாக செயல்படுகிறது.

வேளாண்மை சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களுக்காக ஆலோசனை ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ளுதல் ஆகியவை, இந்நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கைகள்.

வேளாண் சந்தைப்படுத்தல் நடவடிக்கையில், அரசு மற்றும் தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கல், சர்வதேச அளவிலான கொள்கை முடிவுகளில் உதவி புரிதல் மற்றும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உதவுதல் உள்ளிட்டவை இந்நிறுவனத்தின் லட்சியங்கள்.

உள்கட்டமைப்பு வசதிகள்

  • இக்கல்வி நிறுவனத்தில், வயர்லெஸ் கிளாஸ்ரூம் கான்பரன்சிங் மற்றும் அதிவேக டேட்டா கம்யூனிகேஷன் நெட்வொர்க் போன்ற வசதிகள் உள்ளன. மல்டிமீடியா மற்றும் ஆடியோ விசுவல் வசதிகளும் உள்ளன.
  • பல்வேறான புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளுடன், நவீன வசதிகளைக் கொண்ட நூலகம் இங்குள்ளது. கான்பரன்ஸ் ஹால் மற்றும் ஆடிட்டோரியம் போன்றவை உள்ளன.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்பு

  • AICTE அங்கீகாரம் பெற்ற, 2 வருட வேளாண் வணிக மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ(PGDABM) படிப்பை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. வேளாண்மை மற்றும் அதுதொடர்புடைய அறிவியல் படிப்புகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு, இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு எம்.பி.ஏ., படிப்பின் சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி, வேளாண் வணிகத்திற்கு தேவையான அனைத்து திறன்களையும் வழங்குவதாக இப்படிப்பு அமைந்துள்ளது.
  • வேளாண் வணிகத்தின் பிரிவுகளான உணவு, சில்லறை வணிகம், வேளாண் சந்தைப்படுத்தல், பார்மசூடிகல்ஸ், பிளான்டேஷன், ஏற்றுமதி, பொருள் வணிகம், வங்கியியல், வேளாண் வணிக ஆலோசனை உள்ளிட்டவைகளுக்கான நிபுணர்களை உருவாக்கித் தருகிறது.
  • இப்படிப்பில் சேரும் மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இத்தேர்வானது, நேர்முகத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் கேஸ் ஸ்டடி போன்ற அம்சங்களையும் கொண்டது.
  • இத்தேர்வில், quantitative analysis, data interpretation, English, Agriculture & social awareness questions போன்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வின் அடிப்படையிலேயே, மாணவர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இந்த மாணவர்கள்தான், மேற்கூறிய அடுத்தடுத்த தேர்வு நலகளுக்கு செல்வார்கள்.

இக்கல்வி நிறுவனம் குறித்த விரிவான விபரங்களுக்கு http://www.ccsniam.gov.in/

2.95238095238
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top