பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தமிழக அளவில் ஆசிரியர் கல்வி, பள்ளிக் கல்வியின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்ட மறுசீரமைப்பு பணிகளையும் கல்விப் பயிற்சிகளையும் வடிவமைத்து செயல்படுத்தி வரும் தலைமை நிறுவனம் ஆகும். இம்மாநிலக் கல்வியியல் நிறுவனமானது தமிழகம் முழுவதும் கல்வி உரிமைச் சட்டத்தினை செயல்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கிடையே தொடர்புகளை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்த உதவும் பணியை இந்நிறுவனம் சிறப்புற செய்து வருகிறது. கல்வித்துறையின் பல்வேறு நிலை அலுவலர்களின் பணித்திறன் மேம்பட்டினை ஊக்குவித்தலும், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான கல்விப் பயிற்சிகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. ஆசிரியர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி தொடர்பான மதிப்பீட்டு நிகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பணிகள்

 • ஆசிரியர் கல்விக்கான விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை மாநில அளவில் உருவாக்குதல்
 • பணிமுன் பயிற்சி துறையின் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்
 • ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சித் துறையின் நிகழ்ச்சிகளை வடிவமைத்தல்
 • மாநில அளவிலான கல்வி ஆராய்ச்சி  நிகழ்வுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுதல்
 • ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான (D.El.Ed) மாணவர் சேர்க்கையை இணைய வழியில் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு முறையில் வருடந்தோறும் மேற்கொள்ளுதல்.
 • ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தினை வடிவமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்.
 • ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான வளநூல் உருவாக்குதல்
 • தரமான பணியிடைப்பயிற்சி மற்றும் பணிமுன் பயிற்சிக்கான நெறிமுறைகளைக் கட்டமைத்தல்
 • ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல்
 • கல்வித்துறையில் புதுமையான நுட்பங்கள் முறைகள் ஆகியவற்றை பணிமனைகள் மற்றும் வழக்கமான பிரசுரங்கள் மூலம் பரவச்செய்தல்
 • தமிழ்நாடு மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கல்விச்செயல்பாடுகளுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் மற்றும் வல்லுநர் குழுவினை உருவாக்குதல்.
 • ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான பயிற்சிகளை ஒருங்கிணைத்து வழிநடத்துதல்.
 • பிற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுடனான இணைப்பினை ஊக்குவித்தல்
 • வகுப்பு 1 முதல் 12 வரையிலான பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தினை வடிவமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்
 • வகுப்பு 1 முதல் 12 வரையிலான பாடப்புத்தகங்களை உருவாக்குதல்
 • ஆசிரியர்களின் பணித்திறன் வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதல்
 • பள்ளிக்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வித்துறையில் மதிப்பீட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழிநடத்துதல்
 • முறைசாராக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி நிறுவனங்களுக்கான கல்வி, ஆராய்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
 • பள்ளி மாணவருக்கான பதின்பருவக் கல்வி, மக்கள் தொகைக்கல்வி, பள்ளி முன்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடைவுத்தேர்வு, மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கான பணியிடைப் பயிற்சிகள் ஆகியவற்றை வடிவமைத்து வழங்குதல்
 • கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான மென்பொருட்கள் மற்றும் பாடப்பொருட்களை வடிவமைத்து வழங்குதல்
 • தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களான மண்டலக்கல்வியியல் நிறுவனம்(RIE), ஆங்கில மொழிக்கான மண்டலக் கல்வியியல் நிறுவனம் (RIEL) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்தல்
 • தேசிய அளவில் கல்விப்பணியில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு அனுபவப்பயணம் மேற்கொள்ள கல்வியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்
 • மாநிலக் கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SIEMAT) வாயிலாக கல்வித்துறை நிர்வாகிகளுக்குப் பயிற்சி வழங்குதல்

ஆதாரம் : மாநிலக்கல்வியியல்  ஆராய்ச்சி  பயிற்சி   நிறுவனம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top