பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள்

அனைவருக்கும் கல்வி அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தொடக்கப்பள்ளிகளின் வளர்ச்சி

1947இல் இந்தியாவில் 173 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளே இருந்தன. ஆனால் 1990-91 இல் இவை ஏறத்தாழ 500 ஆயிரம் பள்ளிகளாக உயர்ந்தன. இதே போல் நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மாணவர் சேர்க்கை

தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்ததைவிடப் பல லட்சங்கள் கூடியுள்ளது.

கலைத்திட்டம்

மாணவர்களின் தேவைகள், அவர்கள் வாழும் சூழல்கள், உலகின் கல்விப் புதுமைகளின் வளர்ச்சி இவற்றையொட்டி பயனுள்ள பொருள் பொதிந்த கற்றல் அனுபவங்கள் இன்று கலைத்திட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. சான்றாக, சுற்றுச்சூழல் கல்வி, மக்கள் தொகைக்கல்வி, வேலைத் திறனளிக்கும் கல்வி, மதிப்புணர்வுக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தாய் மொழி வழியே பாடங்களைக் கற்பிக்கும் முயற்சி கடைப்பிடிக்கப்படுகிறது.

நலிவடைந்த பிரிவுக் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை

இந்திய அரசியல் சாசனத்திலுள்ள 46 ஆவது பிரிவு, ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரின் கல்வி முன்னேற்றத்திலும், பொருளாதார முன்னேற்றத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இதன்படி இம்மக்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை, இலவசப் பாடநூல்கள், இலவசச் சீருடைகள், இலவச விடுதிகள் ஆகியன வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நிதி ஒதுக்கீடு

தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்காக, மத்திய மாநில அரசுகள் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. மொத்தக்கல்விச் செலவில் 48.5 விழுக்காடு தொடக்க நிலைக்கல்விக்காகச் செலவிடப்பட்டுவருகிறது. இதுதவிர தனியார் அமைப்புகளும் கல்விக்காகப் பெரும் தொகை செலவிட்டு வருகின்றன.

சில புதிய திட்டங்கள்

 1. ஒவ்வொரு பள்ளியின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக Minimum Needs Programme ஒன்று மைய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
 2. படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுபவர்களுக்கு 6 முதல் 14 வயது வரையில் முறைசாராக் கல்வி தொடங்கப்பட்டது.
 3. பள்ளி வகுப்புகளில் கழிவும், தேக்கமும் (Wastage and stagnation) நிகழாதிருக்க 1 முதல் 5 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்னும் முறை பின்பற்றப்பட்டது.
 4. பள்ளி மேலாண்மையைச் சீராக்க நிர்வாகம் நன்கு செயல்பட உதவுவதற்குக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய கல்வி கொள்கையின் முயற்சிகள்

 1. அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் தேசிய புதிய கல்விக்கொள்கை (1986)இல் சில திட்டங்களைத் தீட்டியுள்ளது.
 2. கரும்பலகை இயக்கம் (Operation Blackboard)
 3. கிராமப்புற மாணவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல் பள்ளி நாள்களையும் விடுமுறை நாள்களையும் மாற்றி அமைத்தல்.
 4. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்காக நாடெங்கும் மாவட்ட ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவனங்கள் (DIETS) திறக்கப்பட்டுள்ளன.
 5. தேசிய கல்வறிவு இயக்கம் (National Literacy Mission) தொடங்கப்பட்டு 5000 மக்கள் தொகை உள்ள கிராமப்புறங்களில் மக்கள் கல்வி மையம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு முறைசாராக் கல்வியின் வழியிலும் அனைவருக்கம் கல்வி தரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள்

 1. நாடெங்கும் புதிய தொடக்கப்பள்ளிகள் பல திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 300 பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 2. பள்ளிகளில் கல்வி கற்கக் கட்டணம் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10 வகுப்பு முடிய இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
 3. 10-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு தமிழ் போதனா மொழி வழிப்படிப்பவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
 4. ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. நண்பகலில் பள்ளியில் மாணவர்களுக்குச் சத்துணவு அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது.
 5. ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசத் தங்கும் விடுதிகளில் தங்கிப் படிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.
 6. நலிந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் பள்ளியின் இறுதி வகுப்பு வரை வேறுபாடு இன்றிப் படித்துப் பயன்பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
 7. ஆதிதிராவிட கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் அரிமாசங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், மக்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியன பல்வேறு வழியில் பணம், கட்டடம், தளவாடம், விளையாட்டு இடம், சத்துணவுக்கான பல்வகை பொருட்கள் இலவசமாக வழங்க ஊக்குவித்து வருகின்றன.
 8. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி அந்தந்த ஊர்மக்களே பள்ளித் தேவைகளை பூர்த்தி செய்வதில் உடல் உழைப்பு, பண உதவி, பண்டங்கள், பாத்திரங்கள் வழங்க அரசு ஊக்குவித்து வருகிறது.
 9. பள்ளிச்சிறுவர்களின் உடல் நலத்தை இலவசமாக தக்க மருத்துவர்கள் மூலம் சோதித்து குறைகளைக்களைய இலவச மருத்தவ வசதிகள் செய்யப்படுகின்றன.
 10. பாடங்கள் கவர்ச்சிகரமாகவும், சுவையோடும், பொருத்தமான அணுகுமுறைகளில் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் அரசே வழங்கி வணிகர்கள் கொள்ளை லாபம் பெறுவதை தடுத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
 11. பாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடநூல்களைத் தர உயர்வு செய்துள்ளது. தேச ஒருமைப் பாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
 12. விளையாட்டு, கைவேலை, கலைவேலை, ஈடுபாடுகள், அறிவியல் துணைப் பொருட்கள் ஆகியவற்றில் அரசு அக்கறை காட்டி ஆண்டு தோறும் போதுமான பண ஒதுக்கீடு செய்து வருகிறது. கண்காட்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
 13. ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை உயர்த்தி, ஆசிரியர்கள் கவலையின்றிதம் கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுகின்ற வகையில் சில சலுகைகளையும், அரசு வழங்கி வருகிறது.
 14. பிள்ளைகளின் சேர்க்கை, படிப்பை முடிக்கச் செய்தல், தேக்கம், இடைநிறுத்தமின்மை போன்றவற்றில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 15. ஆண்டு தோறும் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கியும், இறுதித் தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூபாய். ஆயிரம் பரிசுத்தொகை அளித்தும் ஊக்குவிக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்

3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top