பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி பற்றிய சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

நம் நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை உருவாக்கவும், வலுப்படுத்தவும் தேவைப்படும் அனைத்து வகையான அரசு சார்ந்த முன்னோடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஏஜென்சியாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை பணியாற்றுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்துவதும் அந்தந்த துறைகளில் பணி சிறக்கத் தேவைப்படும் மனிதவள மற்றும் நிறுவன மூலவளங்களை விரைவாக வளர்த் தெடுப்பதும்தான் குறிப்பிட்ட கட்டாய பணி ஆணைகளாகும். அதற்கேற்பவே அறிவியல் தொழில்நுட்பத்துறை (D.S.T.) கொள்கைகளை உருவாக்குகின்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயப் பலன்களை வழங்கக்கூடிய திட்டங்களை நடை முறைப்படுத்துகின்றது. இவை மேலே கூறிய முக்கியமான பணி ஆணைகளுக்கு ஏற்பச் செயல்படுவதாக உள்ளது. வளர்ச்சி மாதிரிகள், பங்குதாரர்களின் பங்கேற்பு திட்டங்களுக்குள் உள்முகமான இணைப்பு, நமது நாட்டுக்குள் உள்ள பலவகையான துறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு, அதிலும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் உருமாறல் மாற்றங்கள் சாத்தியப்படுத்தப்படுகின்றன.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடி நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் செயல் பணித்திட்டங்கள் உத்வேகம் அளிப்பவையாக இருந்தன. இந்தியாவில் தயாரியுங்கள், ஸ்டார்ட்அப் இந்தியா, தூய்மை இந்தியா, ஆரோக்கிய இந்தியா மற்றும் டிஜிட்டில் இந்தியா போன்ற திட்டங்கள் குறிப்பாக இவற்றில் அடங்கும்.

இலக்குகளை அடைவதற்கான முக்கியமான சில முன்னோடி நடவடிக்கைகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் நமது நாடு முழுவதும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தி அதிகாரம் அளிப்பதற்காகப் பங்குதாரராகச் சேர்ந்துள்ளது. 70க்கும் அதிகமான அதிவேகச் செயல்பாட்டு கணிப்பொறி அமைப்புகளுடன் ஒரு விரிவான சூப்பர் கம்ப்யூட்டிங் விநியோக அமைப்புச் சட்டகத்தை நிறுவுவதன் மூலம் இதைச் செயல்படுத்த உள்ளது. இந்த இடையீட்டுச் செயல்பாடு தேசிய சூப்பர் கம்யூட்டிங் பணித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும். இந்த இயந்திரத்தின் நோக்கமானது இந்தியாவை கம்யூட்டிங் மற்றும் பெரும்தரவு பகுப்பாய்வில் முன்னணி இடத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்வதே ஆகும். இந்தப் பணித்திட்டம் ரூ.4,500 கோடி செலவில் மார்ச் 2015ல் அனுமதிக்கப்பட்டது. இம்ப்பாக்டிவ் ஆய்வு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் (இம்ப்ரிண்ட்) திட்டத்துடன் சேர்ந்த செயலானது அறிவியல் தொழில் நுட்பத்துறையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒன்றிணைய வைத்துள்ளது. உடல்நலப் பராமரிப்பு, தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம், எரிசக்தி, நிலைத்த குடியிருப்பு, நானோ தொழில்நுட்பம், நீர் ஆதாரங்கள் மற்றும் நதி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட பொருட்கள், அபாயத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுதல் தொடர்பான பாதிப்பு குறைப்பு, தகவமைப்பு போன்ற மிக முக்கியமான சமூகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த தேவைகளை எதிர்கொள்ள இந்த ஒன்றிணைப்பு உதவும்.

ரெயில்வே அமைச்சகத்துடன் சேர்ந்து கூட்டாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கையானது எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துதல், மாசு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள், மாற்று எரிபொருட்கள், டீசல் இழுவைகளில் எரிபொருள் சிக்கனம் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

அறிவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து அவர்களைத் தக்கவைத்தல்

ஆரம்பக்கட்ட பணிவாய்ப்பு ஆராய்ச்சி விருது (இ.சி.ஆர்.ஏ) என்பது தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் முன்னணி பிரிவுகளில் ஆர்வமூட்டும் மற்றும் புத்தாக்க ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு அவர்களது தொடக்கநிலை பணிவாய்ப்பிலேயே ஆதரவை அளிப்பதற்காகவே இந்த விருது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது மூன்று ஆண்டு கால கட்டத்துக்கு ரூ.50லட்சம் ஆய்வு மானியம் கொண்டதாகும். தேசிய முனைவர் பட்டத்துக்குப் பிறகான ஆய்வுத் (என்பி.டி.எஃப்) திட்டம் இளம் விஞ்ஞானிகளை ஈர்த்தல் மற்றும் தக்கவைத்தலை நோக்கமாகக் கொண்டது. கல்வி/ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையங்களில் இருந்து திறமையானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கிறது.

அறிவியலில் பெண்களை ஈடுபடுத்துதல்.

2014ல் தொடங்கப்பட்ட கிரன் (வளர்த் தெடுத்தல் மூலமாக ஆராய்ச்சியை மேம்படுத்துதலில் அறிவின் ஈடுபாடு) என்ற தலைப்பிலான திட்டத்தின் மூலம் அறிவியலில் பெண்களை ஈடுபடுத்தும் இலக்கானது எட்டப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது அறிவியலில் பாலினச் சமத்துவ நிலையை எட்டுவதற்கு உதவுகின்றது. அதாவது பெண் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சி வேலைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. மேலும் இத்திட்டமானது குடும்பப் பொறுப்புகளின் காரணமாக தங்களது வேலைகளை இடையில் விட்டுவிட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றது மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கின்றது. அவர்கள் தொழில்முனைவோர்களாக மாற உதவுகிறது.

கிடைக்கும் சமூகப் பலன்கள்

எரிபொருள் பலன்கள், கழிவில் இருந்து செல்வம், சரியான அளவில் பிரித்தெடுத்தல், உயிர் மூலவளங்களை நிலைத்த முறையில் நிர்வகித்தல் முதலானவை உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்கும். கீழே இதற்கான மூன்று உதாரணங்கள் தரப்படுகின்றன

ஏழைகளின் வீடுகளுக்கு ஒளி தரும் சூரிய ஜோதி.

பகல் நேர சூரிய ஒளியைக் கிரகித்து அதனை இருளான வசிக்கும் வீடுகளுக்குள் திரும்பத் தரும் வகையில் குறைந்த செலவில் சூரியஜோதி என்ற பெயரில் ஒரு கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இது ஒரு மைக்ரோ சோலார் டோம் ஆகும். சூரிய ஒளியைப் கிரகித்துக் கொள்வதற்காக அக்ரிலிக் பொருளால் செய்யப்பட்ட உள்ளே இருப்பது வெளியில் தெரியும் வகையிலான அரைக்கோளக் கலசம் இந்தக் கருவியில் உள்ளது. பகல் நேரத்தில் சூரியஜோதி மூலமான பிரகாசம் 15வாட் எல்இடி விளக்குத் தரும் ஒளிக்குச் சமமான அளவுக்குக்கூட இருக்கும். இந்தக் கலசம் ஒரு ஃபோட்டோ வோல்டெயிக் (பிவி) பேனலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறைந்த பிறகும் 4 மணி நேரங்கள் வரை ஒளி தருவதற்காக இது இணைக்கப்பட்டுள்ளது.

ஊரகத் தொழில் மயமாவதற்கான உள்நாட்டு தொழில்நுட்பம்

நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, ஊரகப் பகுதிகளில் கிடைக்கும் உள்ளூர் மூலவளங்களைப் பயன்படுத்தி நிலைத்த தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அதற்கேற்ப அறிவியல் தொழில்நுட்பத் துறையானது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக ஊரக மக்களுக்கு உதவ பெருமுயற்சி எடுத்து வருகின்றது.

இனவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு மையம்

5 ஆண்டுகளுக்கு ரூ.8.92 கோடி எனப் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டு ஆதரவுடன் அறிவியல் தொழில்நுட்பத் துறை இனவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான மையத்தை 2015ல் நிறுவி உள்ளது. விசேஷமான மருத்துவ மற்றும் நறுமணக் குணாம்சங்கள் கொண்ட வடகிழக்கு பிராந்தியங்களில் கிடைக்கக் கூடிய காட்டு மூலிகைகளில் இனவியல் சார்ந்த ஒளிவேதிப் பொருள் ஆராய்ச்சிகளை இந்த மையம் மேற்கொள்ளும். பாரம்பரிய மூலிகைகள் மற்றும் அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துவப் பொருட்களை இந்த மையம் பரிசோதித்து அங்கீகரிக்கும். மேலும் உள்ளூர் சமுதாய மக்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்த உதவும். சிறப்பான வாழ்வாதாரம் மற்றும் பலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.

சி.இ.ஆர்.என் இணை உறுப்பினர் தகுதி

அனு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (சி.இ.ஆர்.என்) என்பது உலகின் மிகப்பெரிய அணு மற்றும் துகள் இயற்பியல் ஆய்வுக்கூடமாகும். இங்குதான் உலகம் முழுவதிலும் இருந்து விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பிரபஞ்சத்தின் அடிப்படை அமைப்பு குறித்து ஆய்வு செய்கின்றார்கள். இந்திய விஞ்ஞானிகள் சி.இ.ஆர்.என் அமைப்பில் அறிவியல், பொறியியல், கணக்கீடு ஆகிய எல்லா அம்சங்களிலும் தீவிரமாக பங்கேற்று ஒன்றிணைந்து ஆய்வு செய்கின்றனர். இதற்கான நிதியைக் கூட்டாக அணுசக்தி துறையும் (டி.ஏ.இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் பகிர்ந்து கொள்கின்றன.

சி.இ.ஆர்.என் செப்டம்பர் கவுன்சில் 2016ல் இந்தியாவை இணை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது.

தேவஸ்தல் ஒளி நுண்ணோக்கி

உலகின் அதிநவீன 3.6 மீட்டர் தேவஸ்தல் ஒளி நுண்ணோக்கியை அவரவர் இடத்தில் இருந்தே இந்திய நாட்டின் பிரதம மந்திரியும் பெல்ஜியம் நாட்டின் பிரதம மந்திரியும் மார்ச் 31, 2016ல் கூட்டாக இயக்கி வைத்தனர். நைனிடால் அருகில் உள்ள தேவஸ்தல் என்ற இடத்தில் இந்தத் தொலைநோக்கி நிர்மாணிக்கப் பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நகர்த்தக் கூடிய பிம்ப தொலைநோக்கி இதுவே ஆகும். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சியாகச் செயல்படும் நைனிடாலில் உள்ள ஆரியபட்டா கூர் நோக்கு அறிவியல்களுக்கான ஆராய்ச்சி நிலையத்துக்கும் பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகளுக்கும் இடையிலான அறிவியல் கூட்டிணைவின் விளைவாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வானியல் மற்றும் வான் இயற்பியலில் முதன்மை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான கூர்நோக்கு அம்சங்களை வழங்குவதாக இந்தத் தொலைநோக்கி இருக்கும்.

ஜெர்மனியுடன் அயல்நாட்டு கூட்டுறவு

அடிப்படை அறிவியல் ஆய்வுக்குத் தேவை யான மிகப்பெரிய விசைப்பொறி வசதி யானது ஜெர்மனியில் அக்டோபர் 2010ல் டார்ஸ்டட் என்ற இடத்தில் உள்ள ஆண்ட்டி புரோட்டான் மற்றும் ஐயனிகள் ஆராய்ச்சி மையத்தில் (எஃப்.ஏ.ஐ.ஆர் ஜி.எம்.பி.ஹெச்) நிறுவப்பட்டுள்ளது. இதன் நிறுவன உறுப்பினராக இந்தியா உள்ளது. இது சர்வதேச மையமாகும். பல்வேறு உயிரினங்களில் இருந்து அதிக அடர்த்தி கொண்ட ஆன்ட்டி புரோட்டான் மற்றும் அயனி கற்றைகளை இந்த மையம் பயன் படுத்தும். இது அணு, அணுக்கரு, துகள் மற்றும் பிளாஸ்மா இயற்பியல் ஆய்வுகளுக்குப் பயன்படும். இந்தியாவில் இந்தத் திட்டமானது அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் அணுசக்தி துறையால் கூட்டாக செயல் படுத்தப்படுகின்றது. நாட்டில் அதிநவீன எஃப்.ஏ.ஐ.ஆர் விசைப்பொறி கருவிகளை நிறுவுவதில் இந்தியத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்திய விஞ்ஞானிகள் நாடு முழுவதிலும் உள்ள பல தரப்பட்ட நிலையங்களில் 40 வேறு வேறு குழுக்களில் பணிபுரிகின்றனர்.

இத்தகைய உயர்நிலை ஆய்வுகளின் வேகத்தைத் தக்கவைக்கவும் அனைத்து தரப்பினருக்கும் சேவைகள் கிடைக்கச் செய்யவும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை வகுத்துள்ளது. உடனடியான, நடுத்தரமான மற்றும் நீண்டகால குறிக்கோள்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. கீழ்வருவனவற்றை உள்ளடக்கியுள்ள தர்க்க வரைவுச் சட்டகத்தின் அங்கமாக இந்தக் குறிக்கோள்கள் உள்ளன:

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தரத்தையும் அளவையும் அதிகரித்தல்

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவுபடுத்துதல், செயலாற்றும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வெளிநாடுகளுக்குச் செல்வதில் இருந்து அறிவாளிகளை உள்நாட்டிலேயே தக்க வைத்து சமூக, தொழிலக அபிவிருத்தியை விரிவுபடுத்துவதற்கு ஆராய்ச்சியின் தரம் / விளைவு ஆகியவற்றை மேம்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பத்தில் பயிலவும் பணியாற்றவும் இளைஞர்களைக் கவர்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலம் விஞ்ஞான ஆராய்ச்சியில் உலக அளவில் முதல்நிலை வகிக்கும் ஐந்து நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதுதான் நோக்கமாகும். மேலும் அறிவியல் தொழில்நுட்பத் துறையானது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தொழிலக கல்வி நிலைய கூட்டுறவைத் தீவிரப்படுத்த முயற்சிக்க வேண்டும். எரிசக்தி, தண்ணீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை, சைபர் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தேசிய அளவிலான சவால்களை எதிர்கொண்டு தீர்வு காணவும் அறிவியல் தொழில்நுட்பத்துறை முயல வேண்டும். மிகச்சிறந்த சர்வதேச அறிவியல் தொழில்நுட்ப அறிவு மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக புதிய நடவடிக்கைகள் தூண்டி விடப்பட்டுள்ளன. சர்வதேச போட்டியை வென்றெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலும் வளர்ச்சி குறைவாக உள்ள நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பத் திறனை கட்டமைக்கவும் கூட்டுறவு முறையில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அறிவியல் தொழில்நுட்பம் மூலம் வலுவான புத்தாக்கங்களை உருவாக்குதல் மற்றும் சூழலியல் அமைப்புகளை உருவாக்குதல்:

ஆய்வு நிலையில் இருந்து ஆதரவு தரும் நிலை வரை வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் தொழில்களுக்கான முழுமையான புத்தாக்கச் சங்கிலித் தொடருக்கு உதவும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒரு தேசிய முன்னோடி நடவடிக்கையை (புத்தாக்கங்களை உருவாக்கி அவற்றின் பலன்களைப் பெறுவதற்கான தேசிய முன்னோடி நடவடிக்கை என்.ஐ.டி.எச்.ஐ) உருவாக்கி உள்ளது. இது புத்தாக்கப் பிரமிடு அமைப்பின் அடிப்பாகத்தை விரிவாக்கும். மாணவர்கள் மற்றும் ஊரக மக்களிடம் புத்தாக்கக் கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்தெடுப்பதன் மூலம் இது மேற்கொள்ளப்படும். அனைவரையும் உள்ளடக்குதல், பொருத்தம், சிக்கனம், அடிமட்ட அளவிலும் பயன்படுதல் ஆகியவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு இது மேற்கொள்ளப்படும். தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் அதைப் பயன்படுத்துதல் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளைப் பொறுத்து சுயசார்பையும் தலைமையையும் விசேஷமாகக் கவனத்தில் கொள்வதில் உள்ளது. சூப்பர்கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு, மிகப்பெரும் தரவுப் பகுப்பாய்வு, கம்ப்யூட்டேஷனல் அறிவியல்கள், மாதிரி மற்றும் நகலியம் முதலானவை இந்தப் பயன்பாட்டில் அடங்கும். இவை முடிவு எடுத்தலையும் ஆளுகை அமைப்பையும் மேம்படுத்தும்.

குடிமக்கள் ஈடுபாடானது அறிவியல் தொழில்நுட்பத்தில் முக்கிய உந்துவிசையாக உள்ளது. உருவாகி வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் தினசரி வாழ்வில் பரவலாகி உள்ள விஞ்ஞானம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அடிப்படையில் இது அமையும். நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட முன்னோடி நடவடிக்கையான அறிவியல் ரெயில் இதற்குச் சிறந்த உதாரணம் ஆகும்.

நம் நாட்டில் அறிவியல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு வழிகாட்டியாக உள்ள ஒருங்கிணைந்த அணுகுமுறைகளின் ஆழ அகலங்களைப் புரிந்துக் கொள்ள இந்த விவரிப்பு உதவியாக இருக்கும்.

ஆதாரம் : திட்டம் டிசம்பர் 2016

ஆக்கம் : Prof. அஷதோஷ் சர்மா, செயலாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தில்லி,

3.02380952381
R, சண்முக சுந்தரம் Nov 16, 2019 09:17 AM

வணக்கம் நான் கைத்தறி நெசவுத் தொழிலை மேலும் எளிதாக செய்ய நவீன கோர்வை எந்திரத்தை கடந்த 1-1/2 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறேன் எனக்கு அறிவியல் தொழில்நுட்ப துறையின் உதவி கிடைத்தால் மேலும் பல நவீன கைத்தறி எந்திரங்களை வடிவமைத்து தரவும் ஆர்வமாக உள்ளேன் நான் சென்ற ஆண்டு முதல் GST பதிவு செய்து கைத்தறிக்கு தேவையான ஜக்கார்டு லிப்டிங் மிஷின் மற்றும் மல்டிபல் புட்டா மிஷின் மற்றும் நவீன கோர்வை எந்திரம் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம் தற்சமயம்
எங்களின் SS ENTERPRISES என்ற நிறுவனம்
M மல்டிபல்
O ஆஃப்ரேட்டிங்
D டிராபாக்ஸ்
I இன்டியன் லூம்
என்ற மோடி லூம்
ஒன்றை தயார் செய்து வருகிறது
இந்த நவீன கைத்தறி கைத்தறி
நெசவுத் துறையில் ஒரு புரட்சியை
ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்
ஆகவே இந்த நவீன கைத்தறியை
மேலும் வடிவமைத்து முடிக்க
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் உதவி எனக்கு கிடைத்தால்
மிகவும் உதவியாக இருக்கும் எனது
தொலைபேசி எண் 09*****301
வாழ்க பாரதம் வளர்க்க தமிழகம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top