பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / அனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்

அனைவருக்கும் கல்வி திட்டமும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் ஒத்திசைவும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமானது ஏப்ரல் 1, 2010ல் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தையின் 8 ஆண்டு கல்வியினை வயதுக்கேற்ற வகுப்பு மற்றும் அருகாமை பள்ளியில் முடிப்பதற்கு வழிவகை செய்யும் சட்டமாகும்.

நோக்கங்கள்

  • குழந்தைகளின்பால் பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களின் மனப்பான்மையை மதிப்பிடுதல்.
  • ஒருங்கிணைந்த கல்வி அமைப்பில் சிறப்புத் தேவை உடைய குழந்தைகளை கையாள்வதில் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பெற்றுள்ள/பெற வேண்டிய திறன்களை மதிப்பிடுதல்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளின் பால் இயல்பான குழந்தைகளின் மனப்பான்மையை மதிப்பிடுதல்.
  • சிறப்பு தேவையை உள்ளடக்கிய வகுப்பறை சூழலை கையாளும் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பெற வேண்டிய மற்றும் பெற்றிருக்கும் விழிப்புணர்வுக்கும் மனப் பான்மைக்கும் இடையேயான தொடர்பை கண்டறிதல்.
  • அறிவியல் மனப்பாங்கை வளர்த்தல், அறிவியல் மற்றும்) தொழில்நுட்ப திறனை அதிகரித்தல், படைப்பாற்றலைத் தூண்டுதல் மற்றும் அன்றாட சூழலில் எழும் பிரச்சினைக்கு தீர்வு காணல்.
  • குழந்தைகளின் கற்றல் இடர்பாடுகளை களையவும், கல்விசார் பணியில் சிறப்பாக செயல்படும் வகையிலான பயிற்சியினை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்குதல்.
  • தொடக்க நிலையில் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை நிற்பதற்கான சமூக பொருளாதார காரணங்களை பகுத்தராய்தல்.
  • தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் பயிலும் பெண் குழந்தைகளின் சேர்க்கை, இடைநிற்றல் தக்கவைத்தல் ஆகியவற்றை மதிப்பிடுதல்.
  • மாணவர் சேர்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் மக்கள்தொகை காரணிகளை மதிப்பிடுதல்.

அனைவருக்கும் கல்வி திட்டமானது மைய அரசின் முதன்மை திட்டமாகும். அத்திட்டமானது 2001 முதல் குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவருக்கும் தொடக்க கல்வியினை அளிக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசுடன் இணைந்து நாடு முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பல்வேறு அணுகுமுறைகளால் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிக்குள் கொண்டு வருவதும் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8 ஆண்டு பள்ளிப்படிப்பை முடிக்கவும் வழிவகை செய்வதாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம், 86வது சட்டத்திருத்தத்தில் கல்வியானது ஒரு அடிப்படை உரிமை என கூறப்பட்டுள்ளது. இத்தகைய வலியுறுத்தல்களினாலும் ஏப்ரல் 1, 2010இல் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009யை நடைமுறைப்படுத்தியதாலும், அனைத்து குழந்தைகளும் பள்ளியில் இருப்பது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

6 முதல் 14 வயதிற்குட்பட்ட பல குழந்தைகள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். டிசம்பர் 1996லிருந்து உத்திரப் பிரதேசத்திலுள்ள வாரணாசி, சண்டெளலி, ஜானுபூர், காசிபூர் போன்ற மாவட்டங்களிலுள்ள அபாயகரமான, அபாயகர மற்ற தொழிற்சாலைகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்திந்திய கல்விசார் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதுமுள்ள 3,878 நகர்ப்புற மையங்கள் அல்லது பகுதிகளில் வாழும் மக்கள்தொகை 190.5 மில்லியன் ஆகும். இவர்கள் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஆண்டுக் கல்வியை 74,656 பள்ளிகள் மூலம் பெறுகின்றனர். இது 2500 மக்கள் தொகைக்கு ஒரு தொடக்கப் பள்ளி என்பதை குறிக்கிறது. 12 லட்சத்திற்கும் மேற்பட்ட 5 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இன்றளவும் கட்டுமானப் பணிகள், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்ற மிகவும் ஆபத்தான தொழில்களை இந்தியா முழுவதிலும் மேற்கொண்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் விளைவானது, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நோக்கங்கள், உத்திகள் மற்றும் விதிமுறைகள் உடன் ஒத்திசைந்து செல்கிறது எனலாம்.

முடிவுரை

அனைவருக்கும் கல்வி திட்டம், தனியார் பொதுத்துறை பங்களிப்பு மற்றும் சிறப்பாக செயல்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பள்ளி மற்றும் பள்ளி சார்ந்த தேவைகள் வழங்குதல் குறித்தும் இதன் மூலம் சேர்க்கை அதிகரிப்பு சேர்ந்த குழந்தைகளை பள்ளியில் தக்கவைத்தல் மற்றும் 14 வயதிற்குட்பட்ட எந்த குழந்தையும் பள்ளிக்கு செல்லாமல் இல்லை என்பதை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கிறது. மதிய உணவு திட்டத்தின் தேவைகள் முக்கியத்துவங்கள் குறித்தும் இவ்வலகு விவாதிக்கிறது. இறுதியாக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ல் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் கல்வி திட்டத்தின் ஒத்திசைவையும் விவாதிக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.04166666667
SAKTHIBABU Mar 22, 2019 10:50 AM

இந்த தகவல் எனக்கு பயன் உள்ளதாக இருந்தது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top