பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / அனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

அனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டுவதில் புதியன படைத்தல், சேமித்தல், நிர்வகித்தல், வழங்குதல் மற்றும் தகவல்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. பள்ளி வலையமைப்பில் பயன்படுத்துவோரின் தகவல் தொடர்பு திறன், ஒருங்கிணைப்பு மற்றும் இணையவழி தகவல் பரிமாற்றம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது கணினிகள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள

 • கணிப்பொறிகளின் தொகுதி,
 • இணையம்,
 • தொலைபேசி,
 • தொலைக்காட்சி,
 • வானொலி மற்றும் ஒலி,
 • ஒளிக்கருவிகள்,

கணினி வலையமைப்பில் அதிகமாக பயன்படும் பிற கருவிகள் அல்லது இணையத்தை எளிதில் அடைய உதவும் கருவிகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகளை எளிதில் சென்று பயன்படுத்த வசதி வாய்ப்பு உள்ளவர்கள் குறைவான வாய்ப்பு உள்ளவர்களை விட முழுமையாக பயன்படுத்துகின்றனர்.

இதில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் கருவிகள் போதுமான அளவு உள்ளது என ஊகித்தல் வேண்டும். இவ்வாறு பல்வேறு வகையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அடையும் நிகழ்வை 'மின்னணு தகவல் பகிர்வு' என குறிக்கப்படுகிறது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பயன்படும் மூன்று இயக்கிகள்: மொழி (இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் மொழிகளை பயன்படுத்தும் திறமை) எழுத்தறிவு (குறிப்பாக வாசித்தல்) மற்றும் கற்றல் (கற்றல் அடைவு நிலை) அறிவார்ந்த வளமான சமூகத்தையும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் கல்வி ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. கல்வி என்பது சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் தனிநபரை திறம் மிக்க பங்கேற்பாளர்களாக மாற்றுவது மட்டுமல்ல; மாறாக தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுப்படுத்தும் முதன்மை இயக்கியாகவும் உள்ளது. தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குதல்; தகவல் பரிமாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் புதிய அறிவை உருவாக்குதலே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி மற்றும் பரவலாக்கப்பட்ட கல்வி அமைப்பை உள்ளடக்கிய நிலைமாற்றக் கருத்தில் கல்வி அமைப்பு சார்ந்த பிரச்சினைகளையும், குறைபாடுகளையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. குறைவான வளமுடைய சில குறிப்பிட்ட பகுதிகளில் (எ.டு. பாடப்புத்தகங்கள் (அ) ஆசிரியர்கள், பிற துணைபுரியும் கருவிகள் இன்மை) செயல் முனைப்பை மட்டுப்படுத்தவும் நிர்வாக மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தவும், சமத்துவ பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துதல் (அ) திறம் குறைந்த ஆசிரியர்களுக்கு புதிய கல்விச் சவால்களை எதிர்கொள்ள உதவுதல் போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

பள்ளி வலையமைப்பு

பள்ளி வலையமைப்பானது தொடக்கக் கல்விக்கான மேலாண்மை தகவல் அமைப்பை உருவாக்கி இணையம், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், நிர்வாக அமைப்புகள், பெற்றோர்கள், பொதுமக்களிடையே தகவல்களையும், வளங்களையும் பகிர்தல் போன்ற தொடர்புகளை உருவாக்குவதன் மூலம் பள்ளிகளின் இணைப்பை ஊக்குவிக்கிறது.

பள்ளி வலையமைப்பானது சிறந்த செயல்திற மிக்க கல்வி நிறுவனங்களின் மேலாண்மை வலையமைப்பை ஆதரிக்கிறது. கல்வி அதிகாரிகள், பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாயம் மற்றும் பரந்த கல்வி வளங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பே 'பள்ளி வலையமைப்பு ஆகும்.

பள்ளி வலையமைப்பு என்ற பதம் பன்னாட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுப் பெயராகும். இது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பள்ளி கல்வி நிர்வாக அமைப்பின் மின்னணு நிர்வகித்தலை குறிக்கிறது.

பள்ளி வலையமைப்பு பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது. இது அரசுத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது பள்ளியில் காணப்படும் ஒரு திட்டமாகும்.

உலகின் எந்தவொரு மூலையில் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி திட்டம் சார்ந்த தகவல்களை பெற வழிவகை செய்கிறது. இது பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வளர்த்து ஆதரிக்கும் தேசிய மாநில திட்டமாக உணரப்படுகிறது.

பள்ளி வலையமைப்பானது பள்ளி நிர்வாக தகவல் அமைப்பின் மூலம் சிறந்த கல்வி சேவையை வழங்கவும் வெவ்வேறு கல்வி நிறுவனங்களை இணைப்பதும் ஆகும்.

பள்ளி வலையமைப்பின் பணிகள்

பள்ளி வலையமைப்பு சார்ந்த பணிகள், செயல்பாடுகள், சேவைகள் பின்வருமாறு:

தொழில்நுட்ப சேவைகள்

இணைப்பு சேவைகள் என்பது பள்ளி, அரசு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியவற்றை பிற அமைப்புகளோடு இணையவழி சேவையில் இணைப்பதாகும். பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் (அரசு நிதி, கொடையாளர் நிதி, கார்பரேட் நிறுவன நிதி, அன்பளிப்பு மூலமாக வாங்குதல்) - பள்ளிகளில் சிறந்த கல்வியினை வழங்குவதை மேற்பார்வை செய்யத் தேவையான மென்பொருளை உருவாக்கி வழங்குதல்.

பாடப்பொருள் சார்ந்த சேவைகள்

கல்விசார் நேரடி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் கற்போருக்கு தேவையான இணையவழி பாடப்பொருள்களை கொண்ட இணையதளங்கள். உள்ளூரிலேயே உருவாக்கப்பட்ட இணையவழி பாடப்பொருள்கள். தொழில்சார் திறனடையோர் (பாடப்பொருள் நிபுணர்கள்) அல்லது கற்பிப்பவரை (கற்பித்தலில் ஈடுபடுபவர்) கொண்டு இணையவழி பாடப்பொருள் தயாரித்தல்.

ஒருங்கிணைந்த செயல்திட்டம் (Collaborative Project)

இணையவழி செயல்திட்டத்தின் மூலமாக பல்வேறு வள மையங்களை ஒருங்கிணைக்கவும் முனைப்புடன் செயல்படவும் வழிகாட்டுதல். தேசிய அளவிலான ஒருங்கிணைந்த செயல் திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல், இது முதன்மை செயல் திட்டமாகவோ அல்லது உள்ளூர் தேவைக்கான பன்னாட்டு செயல் திட்டமாகவோ அமையலாம்.

தொழில் திறன் மேம்பாடு

ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியினை பணியிடைப் பயிற்சியாக அளித்தல் மற்றும் அதனை தங்களது கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தச் செய்திடல் (கலைத்திட்ட ஒருங்கிணைப்புடன்) பரிசோதித்தல், புதியன படைத்தல் மற்றும் ஆலோசித்தல் முறை

சுற்றுச்சூழல் மற்றும் சூழலின் வரம்புக்குட்பட்ட முன்னோட்ட செயல் திட்டங்களை மேற்கொள்ளுதல்.

 • குறிப்புகள் சிறந்த நடைமுறை வழிகாட்டுதலை மேம்படுத்துதல் மற்றும் பரவலாக்குதல்.
 • முன்னோட்ட செயல் திட்டங்கள் மற்றும் சிறந்த அனுபவ அறிவு போன்றவற்றால் பெற்ற வெவ்வேறு நிலை அனுபவங்களின் வாயிலாக கொள்கையில் மாற்றம் கொண்டு வருதல்.
 • கல்வி தொழில்நுட்ப பயன்பாட்டில் புதியன படைத்தலை ஊக்குவித்தல்.
 • பள்ளி மற்றும் வளங்களை நிர்வகித்தல்
 • முடிவெடுத்தலுக்கான தகவல் வழங்குவதில் உறுதுணை செய்தல். கொள்கைகளை அமைப்பதற்கான தகவல் வழங்குதல்.

பள்ளி வலையமைப்பு என்பது கல்விசார் நிர்வாக தகவல் அமைப்பு

தகவல் தொடர்பு தொழில்நுட்பமானது பள்ளிகள் சார்ந்த விவரங்களை விரைவாகவும் திறம்படி சேகரிக்கவும், நிர்வாக செயல்முறைகளின் சுமைகளை குறைப்பதற்கும் துணை செய்கிறது. நிர்வகித்தலில், புதிய உத்தியை கையாளுவதன் மூலம் நிர்வாக ரீதியாக பளுவினைக் குறைப்பதில் நேரடியாகவும் அல்லது தகவல்களை எளிதில் பெறவும்/அணுகவும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அமைப்புகள் உதவுகின்றன.

பள்ளிச்சூழலில் பள்ளி வலையமைப்பு செயல்படுத்தப்பட்டால் பள்ளி சூழலானது முழுமையாக மாறிவிடும். அடிப்படை பயன்பாட்டு திறனான மின்னஞ்சல் அனுப்பும் திறன் முதல் இடத்தை கண்டறிதல், மதிப்பிடுதல், பகுத்தராய்தல் மற்றும் தொகுத்தல் போன்ற உயர்நிலை திறனை பல்வேறு சூழ்நிலையிலிருந்து பெறுதல் போன்ற திறன் வகைகளை தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறன் உள்ளடக்கி உள்ளது. இந்த உயர்நிலை திறனானது அனைத்து வகை நிர்வகித்தலிலும் பயன்படுத்தப்படுகிறது.

நிதி அமைப்பு

மைய அரசானது உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டு முன்னேற்ற நிதிகள் மூலம் அனைவருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. செயல் திட்டம், மேற்கொள்ளும் போது வெளிநாட்டு நிதி அளிக்கும் நிறுவனங்களின் ஒப்புதலோடு மட்டுமே சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். மேலும் நிதி ஒதுக்கீட்டில் வெளியிலிருந்து பெறப்படும் செயல் திட்டங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமான குறிப்புகள் விதிமுறைகளை பின்பற்றியே நிறைவேற்றப்படுகின்றன. இது குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, செலவின அறிக்கையானது பள்ளி, குடியிருப்பு, கிராமம், ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அடுத்த கட்ட நிதியானது உலக கொடையாளிகள் மூலம் விடுவிக்கப்படும்.

நிதி ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடு

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான நிதியானது மாநில அரசுகளுக்கிடையே நிதி பகிர்மான முறையை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. 9ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் மைய, மாநில அரசுகள் 85:15 என்ற விகிதத்திலும், 10ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 75:25 என்ற விகிதத்திலும் அதன் பிறகு 50:50 என்ற விகிதத்திலும் நிதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் தொடக்கக் கல்வி வழங்குவதற்கான நிதியினை மாநில அரசுகள் அதிகளவில் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகிர்மானம் சார்ந்த ஒப்பந்தம் மாநில அரசுகளிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக பெறப்படுகிறது.

மாநில திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பு (State Implementation Society)

மாநில அரசானது அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியினை, மாநில திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பினை நிறுவி அதன் கணக்கில் இருப்பு வைக்கப்படுகிறது. மைய அரசானது மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் நிதி வழங்குகிறது. மைய மற்றும் மாநில அரசுகளின் முன் தவணைகள் மாநிலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பிற்கு மாற்றிய பிறகே, மாநில அரசானது தவணையை விடுவிக்கிறது. (முதல் தவணையைத் தவிர) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியமானது, 9ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 85;15 என்ற விகிதத்திலும் 10ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 75:25 என்ற விகிதத்திலும் அதன் பிறகு 50:50 என்ற விகிதத்திலும் மைய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.

தொடக்க கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து திட்டமானது (மதிய உணவு திட்டம்) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இடம்பெறாது. உணவு தானியங்கள் மற்றும் அவற்றை கொண்டு சேர்க்கும் செல்வினை மைய அரசும், அவற்றை சமைத்து உணவாக அளிப்பதற்கான தொகையினை மாநில அரசும் ஏற்கிறது. தொடக்க கல்வி சார்ந்த மைய அரசின் அனைத்து திட்டங்களும் (தேசிய பால பவன் மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் குறிப்புகள் தவிர்த்து) 9ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் கல்வி திட்டத்தோடு இணைக்கப்படவில்லை.

மாவட்டக் கல்வி திட்டமானது பிரதம மந்திரி கிராம வளர்ச்சி திட்டம், ஜவஹர் சமிதி யோஜனா, பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா, சுனிஷ்ஜித் ரோஜ்கர் யோஜனா, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரின் வளர்ச்சி நிதி, மாநில திட்டம், வெளிநாட்டு நிதி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அளிக்கப்படும் நிதி போன்ற வெவ்வேறு திட்டங்கள் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதிகள் மற்றும் வளங்களைக் கொண்டது என தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு பெறப்படும் நிதியானது பள்ளிகளை தரம் உயர்த்தவும், பராமரிக்கவும், கட்டிடங்களை பராமரிக்கவும், கற்றல்-கற்பித்தல் உபகரணங்களை வாங்கவும், கிராமக் கல்வி குழு, பள்ளி மேலாண்மைக் குழு, கிராம பஞ்சாயத்து, தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயற்சி அளித்தல் வாயிலாக திட்டங்கள் பரவலாக்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு நிதிகளை சிறந்த முறையில் பயன்படுத்த கிராம்/பள்ளி அமைப்புகளோடு இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுத்தல் வேண்டும்.

ஆதாரம்  : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

2.975
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top