பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / இந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு

இந்தியாவில் தொடக்கல்வி நிலை குறித்த தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தொடக்கக் கல்வி நிலையானது இந்திய அரசின் முக்கிய கல்விசார் கொள்கை மற்றும் திட்டமிடலை உள்ளடக்கியது. கல்வி என்பது மாநில, மைய அரசுகளுடன் தொடர்புடையது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்தே மாநிலங்களே தம் மாநிலங்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றன. 1980களில் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வாயிலாக மைய அரசானது பல்வேறு நிதியுதவி திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக தொடக்கக்கல்வி நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி (UEE)

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி சென்றடைய மேற்கொள்ளும் செயல்பாடுகளின் போது ஏற்படும் பல்வேறு தடைகளை களைய கடினமாக உழைக்க வேண்டும். அப்பொழுது தான் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற நிலையை வெற்றிகரமாக அடைய முடியும். குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வருவதிலும், தொடர்ந்து நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2001ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் சாகர் சாலாஸ் (Sakhar Shalas) இதன் மூலம் கல்வியினை தொடர முடியாத குழந்தைகளுக்கு கல்வி கற்க வாய்ப்பளிக்கப்பட்டது. இத்திட்டம் ஆண்டு முழுவதும் நடைபெறுவதில்லை. கல்வி ஆண்டின் இரண்டாம் காலகட்டத்தில் மட்டுமே நடைபெறும் திட்டமாகும்.

அனைவருக்குமான அணுகலும் சேர்க்கையும் (Universal Access and Enrollment)

ஒவ்வொரு குழந்தையும் தொடக்க நிலை கல்வியினை பெறும் பொருட்டு ஒவ்வொரு, ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு தொடக்கப் பள்ளியினை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டது. பள்ளி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி வசிக்கும் (பள்ளி ஆளுகைக்குட்பட்ட) குடும்பங்களைப் பற்றிய கணக்கெடுப்பை ஆண்டின் துவக்கத்திலேயே பள்ளி மேற்கொள்கிறது. பள்ளி வயதுக் குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை பட்டியலிட்டு, அவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியாக இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப் படுகிறது. பள்ளிகள் திறந்தவுடன், பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் 100% சேர்க்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் மாணவர் சேர்க்கை வாரம் அனுசரிக்கப்படுகிறது.

வருகைப் பதிவும், தக்கவைத்தலும்

ஒரு குழந்தையினை பள்ளியில் சேர்ப்பதை காட்டிலும், அக்குழந்தைகளை குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் நிலைநிறுத்துவது கடினமானது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். இருப்பினும், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் நிலைநிறுத்துவது அவசியம். எனவே, வருகை பதிவிற்கான படி, இலவச பயணச்சீட்டு, இலவச மதிய உணவு திட்டம் போன்ற திட்டங்களாலும் புதிய கற்பித்தல் உத்திகளாலும் மாணவர்களின் வருகையினை மேம்படுத்த பல்வேறு வசதி வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

தரமான கல்வி

தரமான கல்வி என்பது குறித்து சிந்திக்கையில் ஒவ்வொரு குழந்தையும் அடைய வேண்டிய குறைந்தபட்ச கற்றல் அடைவை (MLL) அடைய ஒவ்வொருவரின் திறன்கள், அதனை அடைய உறுதுணையாக அமையும் பள்ளிச்சூழல், கட்டமைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆசிரியர் பயிற்சிகள், ஆசிரிய மாணவர் விகிதம் ஆகியவற்றை மேம்படுத்துவது அவசியம்.

வெவ்வேறு மாநிலங்களில் அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான செயல்திட்டங்கள்

21ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னரே இந்திய அரசானது தேசிய கல்விக் கொள்கை 1986 மற்றும் செயல் வரைவு 1992 ஆகியவற்றின் வாயிலாக 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியைப் பெற உறுதி செய்துள்ளது. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு, தெளிவான வரையறுக்கப்பட்ட நோக்கங்கள், வரன்முறைகள், செயல்படுத்தும் காலநேரம், பயணிக்கும் மைல்கற்கள், மேலும் அளவிட வேண்டிய கற்றல் அடைவுகள், ஒவ்வொரு நிலையிலும் உதவுதல் போன்ற படிநிலைகளைக் கொண்ட செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

உத்திரபிரதேச ஆதாரக் கல்வி செயல்திட்டம் (UP Basic Education Project)

1993இல் உலக வங்கியின் துணையோடு உத்திரப்பிரதேச அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டமே அடிப்படை கல்வி செயல்திட்டம். இந்த திட்டத்தினை உத்திரப்பிரதேச அமைப்பான சபி கே லியா சிக்ஷாபரியோஜனா பரிஷத் (Sabhike liye Shiksha Pariyojana Parishad) (உத்திரப்பிரதேச அனைவருக்கும் கல்வி செயல் திட்டம்) செயல்படுத்துகிறது.

செயல் திட்டத்தின் நோக்கங்கள்

இச்செயல் திட்டத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வியினை வழங்கும் வகையில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் மற்றும் முறைசாராக் கல்வி மூலம் தொடக்கக் கல்வியினை பங்கேற்று முடிக்கவும் செய்தல்.
 • குறைந்தபட்ச கற்றல் அடைவுகள் அனைவரும் பெறுவதற்கான நிகழ்ச்சிகள்.
 • இளைஞர்கள் கல்வி பெறவும், திறன் மேம்பாடு அடையும் வகையிலான நிகழ்ச்சிகள்.
 • பாலின பாகுபாடற்ற, பெண் கல்வி அளித்து, மகளிர் மேம்பாடு அடைதல்.
 • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் சமமான கல்வி பெற வாய்ப்பளித்தல்.
 • மாவட்ட மற்றும் மாநில அளவிலான திட்டமிடல், மேலாண்மை மற்றும் தொழில்சார் உதவி புரியும் மாநில அமைப்புகள் போன்றவற்றிற்கு இடையேயான உறுதியான கட்டமைப்பால் அடிப்படை கல்வி மேம்பாட்டு திட்டத்தினை நிறுவனங்களில் திட்டமிடல், மேலாண்மை மற்றும் மதிப்பிடல் மூலம் உறுதி செய்தல்.
 • முன் குழந்தைப் பருவ கல்வியின் கலைத்திட்டம் மற்றும் புத்தகம் மறுசீரமைப்பு, பணியிடை பயிற்சிகள், பெண்கல்வி, பள்ளி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கல்வித் தரத்தினை உயர்த்துதல்.
 • அடிப்படை கல்வி சென்றடையாத 10 மாவட்டப் பகுதிகளில் தொடக்க மற்றும் உயர்தொடக்க பள்ளிகளை உருவாக்குதல் மற்றும் பள்ளிக்கு வெளியேயுள்ள குழந்தைகளை முறைசாராக் கல்வி மூலம் பள்ளியில் சேர்க்க மறு வடிவமைப்பை மேற்கொள்ளல்.

பீகார் கல்வி செயல்திட்டம் (Bihar Education Project)

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதோடு, தரமான கல்வியினை மாநிலத்திற்கு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் உத்திரப்பிரதேச அடிப்படை கல்வி திட்ட அடைவை அடிப்படையாக கொண்டது.
 • இத்திட்டத்திற்கு உத்திரப்பிரதேச அடிப்படை சிக்ஷா பரிஷித்தே பொறுப்பாகும். இது யூனிசெப்யுடன், இந்திய அரசு மற்றும் பீகார் அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும்.
 • இத்திட்டமானது சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான ஆதிதிராவிட/பழங்குடியினர் மற்றும் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. இதுவே முதன்முதலில் “அனைவருக்கும் கல்வி” செயல் திட்டத்திற்காக வெளியிலிருந்து நிதியுதவி பெற்ற திட்டமாகும். இது முதலில் 1991-92களில் மேலும் நான்கு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

திட்டத்தின் நோக்கங்கள்

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கும் பொருட்டு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கல்வி கற்க பள்ளியில் சேர்க்கவும், குறைந்தபட்ச கற்றல் அடைவை பெறுவதற்குமான ஒருங்கிணைந்த நிகழ்ச்சியை நடத்துதல்.
 • பெண்களுக்கான கல்வியறிவை வழங்கி, சமத்துவம் ஏற்படுத்தும் வகையிலான நோக்கத்தை நிறைவு செய்யும் கல்வியமைப்பை நிறுவுதல்.
 • கீழ் இனத்தோர், சமூகத்தில் பின்தங்கியோர், இனமக்கள் ஏழைகள் ஆகியோரை உள்ளடக்கிய வயதுவந்தோர் மற்றும் குழந்தைகள் சமமான கல்வி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
 • பள்ளியின் சேர்க்கை விகிதத்தினை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் செய்தல் (குறிப்பாக பெண்கள் மற்றும் ஆதி திராவிட மாணவர்கள்). ஆர்வத்தை குவித்தல் போன்றவற்றிகான மேலாண்மை அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
 • வகுப்பறைகளை தேர்ந்தெடுத்தலில் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டும் கிராமப்புற அளவில் மாணவர் சேர்க்கை தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டும் நுண்திட்ட அளவில் முடிவு செய்தல்.

லோக் ஜீம்பிஷ் (Lok Jumbish)

லோக் ஜீம்பிஷ்: "அனைவருக்கும் கல்விக்கான மக்கள் இயக்கம்” 1992ஆம் ஆண்டு இராஜஸ்தான் அரசாங்கம் ஸ்வீடன் சர்வதேச முன்னேற்ற அமைப்புடன் (SIDA) இணைந்து துவக்கியது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வியில் திருப்திகரமான நிலையான எழுத்தறிவித்தல் நிலை வரை, முறை சார்ந்த மற்றும் முறைசாரா கல்வி வாயிலாக வழங்குவதாகும்.
 • இது முக்கியமாக பெண் கல்வி மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்துகிறது. மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமானது கல்வியறிவு மற்றும் தொடக்கக் கல்வி பெறுவதோடு மக்களின் ஒருங்கிணைந்த பங்கேற்பு செயல்களின் துவக்கமாகவும் அமைகிறது.

திட்டத்தின் நோக்கங்கள்

 • மக்கள் பங்கேற்பு மற்றும் அவர்களின் பங்களிப்பு வாயிலாக அனைவருக்கும் கல்வி என்ற இலக்கினை அடைதல். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீது கவனம் செலுத்துவதன் மூலமாக பெண் குழந்தைகள் சேர்க்கையை அதிகப்படுத்துவதை உறுதி செய்தல். கல்வி என்ற கருவியை பயன்படுத்தி சமத்துவமான திறன்மிக்க பெண்களை உருவாக்குதல்.
 • 15 முதல் 35 வயதுக்குட்பட்ட அனைத்து பாலினத்தோரின் கற்றல் நிலையை 80% உயர்த்தவும், வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு எழுதுதல், பேசுதல், கணக்கிடுதல் போன்றவற்றை வாழ்வியல் சூழலில் பயன்படுத்தவும் உதவுதல்.
 • கற்றல் செயல்பாடுகளில் தரமான முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு தேவையான பயிற்சி அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளங்களை உருவாக்குதல். சேகரிக்கப்பட்ட தகவல்களையும் அதை பயன்படுத்தும் குறிப்புகள் மக்களையும் இணைக்கும் இந்நிகழ்வில் வெளிப்படைத் தன்மை உள்ளதை உறுதி செய்தல்.

முக்கியக் கூறுகள்

திட்டங்களை உருவாக்கி மேலாண்மை செய்யும் தன்னாட்சி அமைப்பையும் அதன் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய அதிகாரம் படைத்த குழுவையும் உருவாக்குதல். கிராம் அளவிலான லோக் ஜீம்பிஷ் முதன்மை பணியானது பள்ளி வரைபடம் மற்றும் நுண்திட்டங்களை வகுப்பதாகும்.

மேலும் ஒவ்வொரு குழந்தையின் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அமைப்பில் உள்ளோர் இணைந்து மதிப்பிட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணை பிரிரக் தால், பவன் நிர்மாண் குழு, கிராமக் கல்விக்குழு, குறுவள கல்வி மையம், வட்டார அளவிலான கல்வி மேலாண்மை (Khand Stariya Prabandhan Samiki) மற்றும் வட்டார அளவிலான வழி நடத்துதல் குழு போன்றவை குறிப்பிட்ட ஐந்து வட்டாரங்களில் சோதனையை நடைமுறைப்படுத்தி ஆதரவு நல்கவும், மேலாய்வு செய்வதற்குமான கீழ்நிலை அளவில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். ஆசிரியர் மன்றம் (Adhyapika Munch) பெண்களை பங்கேற்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். நிர்வாக அணி அமைப்பு (Matrix System of Management) கொண்டு அனைத்து நிலைகளிலும் உள்ளோர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவைத்தல். குறுவள மையம் மற்றும் வட்டார வளமைய அளவிலான திட்டமிடல் மீளாய்வு கூட்டமானது (Review Planning Meeting) அனைத்து நிலைகளிலும் மாதத்திற்கு ஒருமுறை செய்கின்ற வேலைகளையும், அடுத்த மாதத்திற்கான திட்டமிடலாகவும் அமைகிறது. இதேபோல் மாநில அளவிலும் 2 - 3 திட்டமிடல் மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பிரவேஷ் உத்சவ்

 • பள்ளி மற்றும் சமுதாய அளவில் குழந்தைகளிடையே கல்வியில் நேர்மறையான மற்றும் படைப்பாற்றல் சூழலை உருவாக்கும் நிகழ்வே பிரவேஷ் உத்சவ் ஆகும்.
 • எளிதில் சென்றடைய இயலா வாழிடங்களில் வசிக்கும் பழங்குடியின. குழந்தைகளுடன் பருவ காலங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கான இடப்பெயர்வு செய்யும் குழந்தைகளின் கல்வி விடுதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு அமைய வேண்டும்.

மகிள சிக்ஷன் விகார்

 • 15 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா பெண் குழந்தைகளுக்கு கிராமப்புற சூழ்நிலையிலேயே உண்டு, உறைவிட பயிற்சியாக தரமான கல்வி வழங்குகிறது.
 • பெண் கல்வி 9 வயதிற்கு மேற்பட்ட இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு முகாம் (Balia /6/8 மாதங்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி அளித்து Shikshan Shivir) ) முறைசார் கல்விக்கு அனுப்ப வழிவகை செய்தல்.
 • பாரான் கிஷ்ணன்கன்ச் வட்டாரத்தின் காண்டேலா குறுவள மைய பழங்குடியின குழந்தைகளுக்கான நிகழ்ச்சி. பாரக்பூர் காமன் ஒன்றியத்தில் உள்ள சிறுபான்மை குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்.
 • இயற்கையான கல்வி மையம் நிறுவுதல் (பணி செய்யும் குழந்தைகளுக்கான முறைசாராக் (Institutionalization| கல்வி வழங்கும் முறை of Sahaj Shiksha Kendra) பள்ளி சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை பள்ளி குழந்தை களிடம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி சுகாதார திட்டம் அங்கன்வாடி மையங்கள் 'விகான்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் முன்பருவக் கல்வியை மேம்படுத்தவும், அத்துடன் தொடக்கக் கல்வியை இணைக்கும் பாலமான கல்வியை வழங்குதல்.

சிக்ஷா கர்மி திட்டம்

 • இராஜஸ்தான் அரசால் இராஜஸ்தான் சிக்ஷாகர்மி வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி திட்டமாகும். இது 1987 முதல் ஸ்வீடன் சர்வதேச முன்னேற்ற அமைப்பின் துணையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • இத்திட்டமானது அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்திற்கு இடையூறாக உள்ள ஆசிரியர் வருகையின்மையை கண்காணிப்பதாகும். இத்திட்டத்தின் மூலம் ஓராசிரியர் பள்ளிகளில் அவ்வாசிரியர் வருகை புரியாதபோது அருகாமையில் உள்ள ஆசிரியர்கள் அல்லது கல்விசார் பணியாளர்களை பிரதியாக செயல்பட வைப்பது ஆகும். இவர்கள் சிக்ஷா கர்மி என அழைக்கப்படுகிறார்கள்.
 • போதிய அளவு கல்வி பெறாத உள்ளூர் நபர்கள் சிக்ஷா கர்மியாக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் சிறந்த ஆசிரியர்களாக செயலாற்றும் வகையில் பயிற்சியையும், கல்விசார் உதவிகளையும் பெற வழிவகை செய்வதை உறுதி படுத்திக் கொள்ளல் வேண்டும்.

திட்டத்தின் நோக்கங்கள்

அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கும் நோக்கில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து அடைவை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். குறைந்த பட்ச கற்றலில் அடைவு பெறுதல். பெண்கள் கல்வியறிவு பெறவும், சமத்துவ நிலையை அடையும் வகையிலான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கல்வி அமைப்பை ஏற்படுத்துதல். பெண்கள் மேம்பாட்டிற்கு உதவுதல். கீழ்மட்ட இனத்தவர், இன சமூகத்தவர் மற்றும் சமூகத்தில் பின்தங்கியோர் ஆகியோரை உள்ளடக்கிய வயதுவந்தோர் மற்றும் குழந்தைகளுக்கான சமவாய்ப்பு கல்வியை அளிப் பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். குறைவான மாணவர் சேர்க்கை மற்றும் அதிக இடைநிற்றல் போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்த்தல்

ஸ்வீடன் சர்வதேச முன்னேற்ற அமைப்பானது கண்காணிக்கும் அமைப்பாக இயங்குவதோடு ஆண்டிற்கு இருமுறை சிக்ஷா கர்மி திட்டத்தை மீளாய்வு செய்தல். • கள ஆய்விலிருந்தும் உறுதியான முடிவெடுத்தல் அடிப்படையில் செயல்முறையை வகுத்தல். பரவலாக்கப்பட்ட மற்றும் அதிக சமூக பங்கேற்பு. • பாலின பாகுபாடின்றி சமூக உணர்வோடு அணுகுதல்.

செயல்படுத்தும் முறை

இராஜஸ்தான் அரசு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திட்ட இயக்குநரால் பயிற்சியினை திட்டமிட்டு ஒருங்கிணைத்து சிக்ஷா கர்மி பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு பயிற்சியை மேற்பார்வையிடவும் செய்கிறது.

பஞ்சாயத்து அமைப்பு, சிக்ஷா கர்மி சகயோகி மற்றும் பாடம் சார்ந்த தன்னார்வலர்கள், சிக்ஷா கர்மி மற்றும் சமுதாயத்தினர் ஆகியோரின் உதவியோடு கிராமப்புற வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வித் தேவையை இத்திட்டம் நிறைவேற்றுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு படம் (5.3)ல் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிக்ஷா கர்மிகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் பகல்நேர பள்ளிகள் என அழைக்கப்படுகின்றன.

பகல்நேர பள்ளிகள், பகல்நேர பள்ளிகளுக்கு செல்ல முடியாத குழந்தைகள் இரவு பள்ளிகளுக்கு வருகிறார்கள். இது பிரிகார் பாடசாலை என அழைக்கப்படுகிறது.

பிரிகார் பாடசாலை பண் இக்லா மகளா இக்கலை மகிளா பிரகாசன் கேந்திரா என்பது பெண் சிக்ஷா கர்மிகளை பணி நியமனம் செய்யவும், அவர்களுக்கு பயிற்சி வழங்க மகிளா சிக்ஷா கர்மி மகிளா பிரகாசன்) பயிற்சி மையங்களை ஏற்படுத்துவதாகும். இது உள்ளூர் பெண்களை கேந்திரா மகிளா சிக்ஷா கர்மியாக செயல்பட தயார்படுத்துகிறது.

காட்டூல் (பழங்குடியின பகுதி) மற்றும் பலோட்ரா (பாலைவனப்பகுதி) வாழும் 14 வயதுக்குட்பட்ட 6% குழந்தைகளிடம் உடல் சார்ந்த ஒருங்கிணைந்த குறைபாடுகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இம்மாணவர்கள் கல்வி அணுகுமுறை கற்கும் வகையில் சிக்ஷா கல்வி தொடக்கப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

மகாராஷ்டிரத்தின் பல்வேறு செயல்திட்டங்கள்

இந்திய மாநிலங்களில் அனைவருக்கும் தொடக்கக் கல்வியினை வழங்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல் திட்டங்களை தனியாள் ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டதை இங்கு காணலாம். இங்கு மகாராஷ்டிரா மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நீங்கள் உங்கள் மாநிலத்தோடு தொடர்புப்படுத்தி பார்க்கவும்.

மகாராஷ்டிராவில் பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்தியதால் தரமான அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்க உறுதுணையாக இருந்தது. மகாராஷ்டிரா அரசால் கண்டறியப்பட்ட தொடக்கக் கல்விக்கான செயல்திட்டங்கள் பின்வருமாறு:

சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கான திட்டம்

ஆதி திராவிடர், பழங்குடியினர், நாடோடிகள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோர் சமூகத்தில் மிகவும் பின் தங்கியோர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். பின்தங்கிய இன ஆண், பெண் குழந்தைகளின் நலனுக்காக மகாராஷ்டிரா அரசானது கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 • 10ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை
 • இலவச புத்தகம் மற்றும் சீருடை தொகுதி
 • தங்குமிடங்கள் அரசு மற்றும் தனியார் விடுதிகள்
 • இடைநிலைக் கல்வி முடித்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு NCERT-யால் உருவாக்கப்பட்ட தேசிய திறன் ஆராய்ச்சி வாரியம் மூலம் ஊக்கத்தொகை வழங்குதல்
 • வருகைக்கான ஊக்கத்தொகை (படி)
 • ஆசிரமப் பள்ளிகள்
 • புத்தக வங்கி திட்டம்

பெண்களுக்கான திட்டங்கள்

பெண்களுக்கு கல்வி அளிப்பது என்பது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவசியமானதாகும். எனவே மாநிலம் பெண் கல்விக்காக பல திட்டங்களை தீட்டுகின்றது.

வருகைக்கான ஊக்கத்தொகை

1 முதல் 4 வகுப்பு வரை பயிலும் பின் தங்கிய வகுப்பைச் சார்ந்த பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தவிர்க்க அவர்கள் பள்ளி வேலை நாள்களில் 75% வருகை புரிந்தால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.

ஹகிலாபாய் ஹோகர்ஸ் மூலம் பெண்களுக்கான இலவச பயணத்திட்டம்

கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படாமல் இருக்க 1997 முதல் இலவச பேருந்து வசதி அரசால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

பெண்கள் அறிவொளி திட்டம் (Matruprabodhan Project)

கிராமப்புறங்களில் அனைவருக்கும் தொடக்கக் கல்வியினை கொண்டு செல்லும் நோக்கில் குழந்தைகளின் தாய்க்கு, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் சுய வளர்ச்சி குறித்த அறிவினை வழங்கும் திட்டமாகும்.

இராணுவப் பள்ளிகள்

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மகாராஷ்டிரா அரசானது நாசிக்கிலுள்ள போர் என்ற இடத்தில் இராணுவப் பள்ளி தொடங்கியது. இதன் மூலம் பெண்கள் ஊக்கத்தொகை பெறுவதோடு, உடல் தகுதி பெற்றிருப்பின் மேலும் பல பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சமுக நிவாசி பள்ளிகள்:

பெண் குழந்தைகள் தொலைதூரம் சென்று பயிலாத நிலை ஏற்படா வண்ணம் தடுக்க சமூக நிவாசி பள்ளிகள் திறக்கப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கான திட்டங்கள்

சமூகத்தில் உள்ள மக்களில் ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு மதத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் உள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை. குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகள் பணிக்கு சென்று வருவாய் ஈட்டவும், பள்ளியை விட்டு விலகும் நிலையும் உள்ளது.

குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்

உதவித்தொகை

 • 1978ல் மகராஷ்டிர அரசாங்கம் இவ்வுதவித் தொகையை திறமை வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மேனிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.70ம் மாணவியருக்கு ரூ.80ம் வழங்கத் துவங்கியது. E.B.C.: 1956 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசாங்கம் இத்திட்டத்தை தொடங்கியது. 75% வருகை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி மற்றும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 15,000/-க்கும் மிகாமல் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஊட்டச் சத்துணவு

இத்திட்டம் 1995ல் கிராம முன்னேற்றக் குழுவினால் பள்ளிக்கு தொடர்ச்சியாக வருகை தரும் அனைத்து குழந்தைகளுக்கும் இடைவேளையின் போது ஊட்டச்சத்தான உணவினை அளிக்க துவங்கப்பட்டது.

சாவித்ரிபாய் பூலே பெற்றோர் தத்தெடுப்பு திட்டம்

1993ல் இத்திட்டம் துவங்கப்பட்டது. பல பெண்கள் நிதி நிலை காரணமாக பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். இத்திட்டத்தின்படி, முதல்வர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் எந்த உறுப்பினரும் இவ்வகையிலான பெண்களை தத்தெடுக்கவும் அவர்களது ஏழாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 ரூபாய் உதவித்தொகை வழங்கவும் இத்திட்டம் வழி வகை செய்கிறது.

புத்தக வங்கிதிட்டம்

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் புத்தகங்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. வருட முடிவில் இப்புத்தகங்கள் திரும்ப பெறப்படுகின்றன. இத்திட்டம் கல்வியாண்டு ஆரம்பத்தில் மீண்டும் துவங்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய புத்தகம் வழங்கப்படுகின்றன. புத்தக வங்கியில் உள்ள உயர் வகுப்புகளுக்கான அனைத்து புத்தகங்களும் புதிய புத்தகங்களாக மாற்றப்படுகின்றன.

தொலைதூர குழந்தைகளுக்கான திட்டங்கள்

இது 1970 ஆம் வருடம் மகாராஷ்டிர அரசாங்கத்தினால் எளிதில் சென்றடைய இயலாப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

ஊட்ட சத்துணவு திட்டம்

0-6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்தின் தரத்தினை உயர்த்துவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். அங்கன்வாடி மற்றும் பால்வாடி குழந்தைகளுக்கு இவ்ஊட்டச்சத்து அளிக்கப்படுகிறது. இத்திட்டம் பழங்குடியின குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டமும் வழங்கப்படுகிறது.

ஆஸ்ரம் ஷாலா

பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கக்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆஸ்ரம் ஷாலா ஆகும். தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் வறுமை காரணமாக தங்கள் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது. இம்மாதிரியான ஏழை குழந்தைகள் ஆஸ்ரம் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வியறிவு, உறைவிடம் மற்றும் சீருடை போன்றவை இலவசமாக அளிக்கப்படுகிறது.

இப்பள்ளிகள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தை களுக்காக நடத்தப்படுகின்றன. இவை நிர்வாகத்தினரால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

ஆஸ்ரம ஷாலா இரண்டு வகைப்படும்.

 • அடிப்படை ஆஸ்ரம் ஷாலா (Basic Ashram Shala): 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை
 • வகுப்பு அடிப்படை ஆஸ்ரம் ஷாலா 5 வகுப்பு முதல் 10 ஆம்) வகுப்பு வரை

வித்யா நிகேதன்

திறன் வாய்ந்த பழங்குடியின மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கேலாபூரின் யவத்மால் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கு கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. பெண்களுக்காக சுதந்திர வித்யா நிகேதனும் தொடங்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 இடங்கள் ஆதிவாசி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

குரன் ஷாலா

இந்த நடமாடும் பள்ளிகள் (குரன் ஷாலா) மூலமாக முறைசாரா கல்வியினை கொண்டு செல்கின்றன. முதல் குரன் ஷாலாவினை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் ஸ்ரீமதி. தாராபாய் மோதக் மற்றும் அனுதாய் வாக் ஆவர். ஆசிரியர் மாணவர்களுடன் வனப்பகுதி களுக்கு பின்தொடர்ந்து சென்று முறைசாரா கல்வி மூலம் தூய்மை, மருத்துவம், நல்ல பழக்க வழக்கங்கள், மொழி ஆகியவற்றை பற்றியும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும்.

குழந்தை கல்வி திட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் இத்திட்டத்தினை 1982ல் UNICEF உதவியுடன் கொண்டு வந்தது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் முழுவதும் பல்வேறு விதமான படங்களுடன் மாணவர்களின் புத்தக மற்றும் பள்ளி செல்லும் ஆர்வத்தினை அதிகரிக்கும் வகையில் வழங்கப்பட்டன. குழந்தைகளின் முன்னேற்றத்தினை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் கூட்டமும் கூட்டப்பட்டன.

பழங்குடியின் மொழிகளுக்கான திட்டம்

பள்ளிகளின் மொழி மற்றும் பழங்குடி மக்களின் இருப்பிட மொழிக்கு இடையே வேறுபாடு காணப்படுகிறது. ஆகையால் பழங்குடி இனக்குழந்தைகள் தரமான மொழியினை புரிந்துகொள்தில் கடினம் ஏற்படுகிறது. இந்த வேறுபாட்டினை களைவதற்கு இரு மொழிகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆகையால் மாணவர்கள் தாய்மொழி மற்றும் மாகாண மொழியினை அறிந்திருக்க வேண்டும். எனவே MSCERT பழங்குடி மொழிகளில் குழந்தை களுக்கான பாடப்புத்தகங்களை தயார் செய்து அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கான கையேட்டையும் உருவாக்கி செய்து பயிற்சிகளை வழங்கியது.

பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள்

பல மாணவர்கள் வறுமை காரணமாக கல்வி பெற முடிவதில்லை. முறையான கல்வித் திட்டத்தில் அவர்களை மீண்டும் கொண்டுவர அரசாங்கத்தால் பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டன. இணைப்பு பள்ளி இத்திட்டம் தங்கள் படிப்பை விட்டு பள்ளிக்கும் வராமல் படிப்புகளை சில காலம் மறந்து விலகி இருக்கும் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டமாகும். மாணவர்கள் தாங்கள் விட்டுச்சென்ற கல்வியை நிறைவு செய்யும் வாய்ப்பு இதில் வழங்கப்படுகிறது.

சுமார் 45 நாட்கள் மாணவர்கள் இத்தகைய பள்ளியில் கல்வியை நிறைவு செய்த பின்னர் அவர்கள் வழக்கமான தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் சேர்க்கப்படுகிறார்கள். இப்பள்ளியில் 45 நாட்களுக்கான பாடப்பொருள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. படிப்பை இடையில் விட்ட மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப் பட்டு அவர்கள் விட்டுச் சென்ற வகுப்புகளுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வழக்கமான பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். இப்பள்ளியினை நடத்துபவர் மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கடினமான உழைப்பினையும் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் வழக்கமாக பள்ளிக்கு வருகை புரிவர். இப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடப்பொருள் மற்றும் புத்தகங்களை அரசாங்கமும் தயாரிக்கின்றது.

சிந்து குழந்தை தொழிலாளர் திட்டம் (Indus Child Labour Project)

பல குழந்தைகள் வெவ்வேறு வேலைகளில் குழந்தை தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது குழந்தை தொழிலாளர் முறையினை வேரோடு ஒழிப்பதும், மாணவர்களை மீண்டும் நடைமுறைக் கல்விக்கு கொண்டு வருவதுமேயாகும். இத்திட்டமானது மகாராஷ்டிராவின் ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அவை, கோண்டியா, அமராவதி, ஜலானா, ஒளரங்காபாத் மற்றும் மும்பை இத்திட்டம் சார்ந்த தன்னார்வலர்களுக்கு திட்டம் சார்ந்த பயிற்சியளிக்கும் பொறுப்புகளை MS CERT எடுத்துள்ளது. இந்த குழந்தைத் தொழிலாளர் திட்டமானது தேசிய அளவில் சமுதாயம் அறியும் வகையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டமாக (NCLP) செயல்படுத்தப்படுகிறது.

ஆபத்தான பகுதிகளான தொழிற்சாலைகள், நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவற்றில் உள்ள குழந்தை தொழிலாளர் குறித்து விசாரித்து 5 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் தன்னார்வலர்களின் பொறுப்பு ஆகும். 9 முதல் 13 வயதில் உள்ள மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி மையங்களில் அனுமதி வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து பள்ளிக்கு செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். 14 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு தொழில்முறை பயிற்சி அளித்து அவர்கள் கல்வியைத் தொடர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

50 மாணவர்கள் தங்குவதற்கேற்ற மையம் அவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட வேண்டும். இம்மையங்களில் பல்வேறு விதமான வயதுடைய மாணவர்கள் இருப்பர். அவர்களுக்கு ஏற்ற வகையில் குழு கற்பித்தல் முறையை பின்பற்றி மாணவருக்கு கற்றலை எளிமைப்படுத்த வேண்டும். மாணவர்கள் பணி முடித்து வருவதை கருத்தில்கொண்டு அவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை பல்வேறு கற்பித்தல் துணைக்கருவிகளை கொண்டு நிகழ்த்துதல் வேண்டும்.

சக்கார் ஷாலா

சக்கார் ஷாலா பள்ளிகள் கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி அளிப்பதற்காக கொண்டுவரப் பட்டதாகும். தொழிலகங்களுக்கு அருகாமையில் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அல்லது நீண்டகால அடிப்படையில் குடிபெயர் வதால் அவர்களின் குழந்தைகள் கல்வியைத் தொடர முடிவதில்லை. ஏனெனில் கல்வியைத் தொடரும் வகையில் சிறப்பு வாய்ப்புகள் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவ்விடத்தில் இல்லை. இக்கல்வி பிரச்சினைகளை தீர்க்க சக்கார் ஷாலா பள்ளிகளை திறந்து போதுமான கல்வி சேவைகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

சக்கார் சாலா பள்ளிகள் இரண்டாம் பருவ பள்ளிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பள்ளிகள் ஆண்டு முழுவதும் செயல் படுவதில்லை. இது இரண்டாவது கல்வி ஆண்டில் மட்டுமே செயல்படுகிறது.

கேப் திட்டம்

பள்ளிக்கு வெளியே உள்ள 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக 1981ஆம் ஆண்டு மகராஷ்டிரா அரசாங்கம் UNICEF உடன் இணைந்து அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற திட்டத்தினை தொடங்கியது.

கல்வியியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் சுயகல்வி மையங்களில் 25 முதல் 30 எண்ணிக்கையிலான பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கு சேர்க்கை அளிக்கப்பட்டது. இவர்கள் தத்தம் வசதிக்கேற்ப பகுதிநேர வகுப்புக்கு பள்ளிக்கு வருகை புரிவர். இங்கு கல்விக்கு உதவியாக கற்பதற்கு உதவும் வகையில் சுய கற்றல் உதவிகள் கிடைக்கப் பெற்றன.

குறைதீர் கற்பித்தல் வகுப்புகள்

கவனக் குறைவின் காரணமாக இணைப்பு பள்ளி மற்றும் பூலே ஹேமி யோஜ்னாவிலிருந்து வந்த மாணவர்களிடம் கற்றல் திறன் குறைந்து காணப்பட்டது. குறைதீர் கற்பித்தல் வகுப்புகள் இந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச கற்றலை அளிக்க உதவின.

வஸ்திசாலா

வஸ்தி பள்ளிகள் என்பவை பொதுவாக தொடக்கப் பள்ளிகள். இவை 1 கி.மீ தூரத்திற்குள் பள்ளியே இல்லாத மலைப்பாங்கான சென்றடைய இயலாத பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கான முறைசாரா கல்வியை 1 முதல் 4ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி அளிக்கின்றன. கிராம ஊராட்சியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வளாகத்துள் வஸ்தி பள்ளிகளை ஆரம்பிக்க 1 முதல் 4ம் வகுப்பு வரை பயிலக்கூடிய குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது சேர்க்கப்பட வேண்டும். கிராமக்கல்வி குழுவானது தரமான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை பணியமர்த்தும் முன் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 30 நாள்கள் பயிற்சி அளிக்கிறது. அருகாமையில் உள்ள தொடக்கப் பள்ளியின் முதல்வரால் இப்பள்ளி மேற்பார்வையிடப்படுகிறது.

சிறப்பு தேவையுடையோர்க்கான திட்டம்

ஊனமுற்றோர்/தேவதாசி குழந்தைகள் பிற) சிறப்பு தேவையுடையோர் குழுவில் பல்வேறு சமூக அடுக்கு, இனம், சாதி, மதம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் போன்றோரின் குழந்தைகள் அடங்குவர். இந்த குழந்தைகளால் தொடக்கக் கல்வியை முழுமையாக முடிக்க இயலுவதில்லை. எனவே சில திட்டங்கள் மூலமாக இவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது.

தேவதாசி குழந்தைகளுக்கான திட்டங்கள்

சமூகத்தில் காணப்பட்ட எதிர்மறையான பாரம்பரிய முறையே தேவதாசி முறை. கண்மூடித்தனமான நம்பிக்கையால் இன்றளவும் பல தேவதாசிகள் சமூக, பொருளாதார அளவில் பின்தங்கி காணப்படுவதால் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை அளிக்க முடிவதில்லை. எனவே தேவதாசி மற்றும் வரன்கானா (Varangana) குழந்தைகளுக்காக சில திட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

 • சத்துணவுத் திட்டம்
 • வருகைக்கான ஊக்கத்தொகை
 • புத்தக வங்கி திட்டம்
 • உண்டு உறைவிடப் பள்ளிகள் ஸ்நேகாலயா
 • பெண்களுக்கான அறிவொளித் திட்டம் (Women's Probodhan Pro-) gram)
 • இலவச பயணச்சலுகை திட்டம்
 • ஊனமுற்றோருக்கான கல்வி

இவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி வழங்கப்படுகிறது. இந்த திறந்த கற்றல் முறையானது முறைசாரா கல்வி, தொலைதூரக் கல்வி, நடமாடும் பள்ளிகள், குறைதீர்க் கல்வி, பகுதிநேரக் கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்றவைகள் வாயிலாக இணைத்து வழங்கப்படுகிறது.

இயலாக் குழந்தைகளுக்கான கல்வி

இயலாக் குழந்தைகளுக்காக மகாராஷ்டிரா அரசாங்கம் சிறப்பு பள்ளிகளை தோற்றுவித்தது. 1885 ஆம் ஆண்டு மும்பையில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்கான பள்ளி மும்பையில் தோற்றுவிக்கப்பட்டது. சாதாரண குழந்தைகளுக்கு அளிப்பது போலவே வாய்ப்புகள் இக்குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களின் தன்னம்பிக்கை மேம்பாடு அடைந்து பொதுவான பள்ளியில் சேர்ந்து படிக்க இயலும். இதையே ஒருங்கிணைந்த அணுகுமுறை என்கிறோம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

3.01785714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top