பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / பள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்

பள்ளி மேலாண்மையும், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி அனைவருக்கும் தொடக்கக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிக்கும் சில பொறுப்புகள் உள்ளன. குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன் நிறுவப்பட்ட பள்ளி, சொந்த அல்லது மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகள், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் படிவம் எண் 1இல் தங்களின் சுயசான்றினை தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலருக்கு தங்களின் புகாரினை குறிப்பிட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அளித்தல் வேண்டும்.

  • சமூக பதிவுச்சட்டம் 1860இன் கீழ் சமூகத்தால் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் பள்ளி அல்லது சட்டத்திற்குட்பட்டு பொது நிறுவனத்தினால் நடத்தப்படும் பள்ளி.
  • பள்ளியானது எந்த ஒரு தனி நபர், குழு அல்லது தனி நபர்களின் சங்கங்கள் அல்லது வேறு நபர்களின் இலாபத்திற்காகவோ இயங்கவில்லை
  • அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்ந்த மதிப்புகளை பள்ளி உறுதி செய்கிறது.
  • கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு தேவைக்காக மட்டுமே பள்ளி கட்டிடங்கள் அல்லது மைதானங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • மாநில அரசு/உள்ளாட்சி அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் இப்பள்ளி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
  • விதிமுறைகளுக்கு ஏற்ப பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு உள்ளது.
  • மாவட்டக் கல்வி அலுவலரால் அவ்வப்போது கேட்கப்படும் தகவல்கள் அடங்கிய அறிக்கையை தயாரித்து விதிகளுக்கு கீழ்படிந்து மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புக்கு சமர்ப்பித்தல் வேண்டும். இது அங்கீகாரம் பெறத் தேவையானவற்றை நிறைவு செய்யவும் அல்லது பள்ளியில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் துணை புரிந்து பள்ளியை தொடர்ந்து நடத்த வழிவகை செய்யும்.

அரசு, நிதி உதவி, சுயநிதி தனியார் பள்ளிகள், நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு பள்ளி சேர்க்கைக்கு அங்கீகாரம் பெறுவதன் தேவை அவசியமாகிறது. இதை சரி செய்ய தவறும்பட்சத்தில் எச்சரிக்கை தருதல் அல்லது அங்கீகாரத்தை திரும்ப பெறும் நிலை ஏற்படுகிறது. மேலும் அவ்வாறான குழந்தைகள் வகுப்பறையில் மற்ற வகுப்பு குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்படவோ அவர்களுக்கான வகுப்பு நேர, இட, வேறுபாடுகளே காண்பிக்கக்கூடாது. பிற குழந்தைகளைப் போலவே இவர்களும் புத்தகங்கள், சீருடைகள், நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இதர கல்வி செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போன்றவற்றை பெறுவதற்கான உரிமையுடையவர் களாகின்றனர்.

ஆசிரியர் நியமனம்

NCTE, NCERT மற்றும் SCERT-யினால் பரிந்துரைக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பள்ளி நியமனம் செய்கிறது. தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்வதில் தோல்வி ஏற்படின் பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும். ஒரு மாநிலத்தில் போதுமான அளவு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இல்லாத நிலையில் அல்லது குறைந்தபட்ச கற்றல் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தேவைக்கு ஏற்ப இல்லாத நிலையில் மாநில அரசானது குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆசிரியர் கல்வி தகுதிக்கு தளர்வு அளிக்கும்படி இந்திய அரசாங்கத்தை கோர வேண்டும்.

அதற்கு இந்திய அரசாங்கம் குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு தளர்வு அளிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில், தளர்வின் தன்மை மற்றும் மூன்று வருடங்களுக்கு மிகாமல் கால அவகாசம் அளித்து குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஐந்து வருடங்களுக்குள் தளர்வு விதிகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியை பெறுதல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியருக்கான கல்வித் தகுதி

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆறுமாத காலத்திற்குள் ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஒரு நபர் குறைந்தபட்சம் மேல்நிலை பள்ளிக்கல்வி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிராத ஆசிரியருக்கு அப்பள்ளி மேலாண்மை RTE அமுல்படுத்திய ஐந்து ஆண்டு காலத்திற்குள் குறைந்தபட்ச கற்றல் தகுதியை பெற்று தம்மை மேம்படுத்திக் கொள்ள வழிநடத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top