பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கரும்பலகை மற்றும் ப்ளானல் போர்ட்

முன்பள்ளிக் கல்வியில் கரும்பலகை மற்றும் ப்ளானல் போர்டின் பங்கினை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கரும்பலகை

கரும்பலகை சாதாரணமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாகும். இவை வண்ணப் பலகை என அழைக்கப்படுவது ஏனெனில் பலநிறங்களில் எழுதுவதற்கு இப்பலகை பயன்படுத்தப்படுகிறது. அதில் வெண்மை நிற சாக்குகட்டிகளை பயன்படுத்தி மெல்லிய அல்லது நீண்ட அழுத்தம் கொடுத்து எழுதலாம்.

கரும்பலகையின் நன்மைகள்

 • ஒரே ஒரு பிரதிதான் மாணவர்களுக்குக் கற்பிக்க இருக்கும்போது கரும்பலகை மிகவும் எளிதாகக் கிடைக்க கூடிய ஒரு சாதனம் ஆகும்.
 • கரும்பலகை ஆர்வத்தைத் தூண்டுகிறது.
 • பாடங்களின் நடுவில் கூட இதனைப் பயன்படுத்தலாம். கற்றவற்றை மீண்டும் பரீசிலிக்கவும், கற்கவும் சந்தர்ப்பம் அளிக்கிறது.
 • எடுத்துக்காட்டுக்களுடனும் கட்டுரைகளுடனும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகிறது.

கரும்பலகையின் தீமைகள்

 • இதன் மேல் எழுதுவதற்கு பயிற்சி இல்லையெனில் கடினமாக இருக்கும்.
 • ஒரு முறை பாடங்களை எழுதி அழித்த பிறகு மீண்டும் தேவை என்றால் எழுத வேண்டும்.
 • கரும்பலகையில் எழுதுபவை முறையாக செயல்படுத்தப்படவில்லை எனில் இவை கற்போருக்குக் குழப்பத்தை விளைவிக்கும்.

ப்ளானல் போர்டு

ப்ளானல் போர்டு கதை சொல்வதற்கும் கணிதம் போன்று மற்ற பாடங்களைக் கற்பதற்கும் உதவுகிறது. படங்கள் அல்லது வார்த்தைகள் உள்ள அட்டைகள் பின்புறத்தில் ஒட்டக்கூடிய விதத்தில் இருத்தல் வேண்டும். இல்லையெனில் போர்டிலிருந்து எளிதாகக் கீழே விழும்.

ப்ளானல் போர்டால் ஏற்படும் நன்மைகள்

 1. அட்டைகள் முன்கூட்டியே தயாரிக்கப்படுவதால் பாடம் கற்பிக்கும் நேரத்தை சேமிக்க முடிகிறது.
 2. படிப்படியாக கற்பிக்க உதவுகிறது.
 3. ஒருமுறை இதனைத் தயாரித்துவிட்டால் எதிர்காலத்திலும் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
 4. இம்முறையில் கற்கும்போது கற்பது நடிப்புடன் கூடியதாக இருப்பதால், ஆர்வத்தை ஏற்படுத்தும்.
 5. குழந்தைகளின் கவனத்தைத் தக்க வைக்க முடிகிறது.

ப்ளானல் போர்டின் தீமைகள்

 • ஒரு ப்ளானல் போர்டு மற்றும் அதற்குத் தேவையானவற்றை தயாரிப்பது அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
 • ப்ளானல் துணி எளிதாகக் கிடைப்பதில்லை. அவற்றின் விலையும் சற்று அதிகமாக உள்ளது.

ப்ளானல் போர்டின் பயன்கள்

 • ப்ளானல் போர்டுகள் படங்களைக் காண்பிக்கவும், பல பகுதிகளை இணைக்கவும், பல கருத்துக்களையும் பொருட்களையும் வேறுபடுத்தியறியவும் உதவுகிறது.
 • குழு விவாதத்தின் முடிவுகளையும் ப்ளானல் போர்டுகள் மூலம் அறியலாம்.
 • பலவிதமாகத் தயாரித்த கல்வி சாதனங்களை ப்ளானல் போர்டு மூலம் வெளிப்படுத்தலாம்.

ப்ளானல் போர்டைப் பயன்படுத்தும் முறைகள்

 • ப்ளானல் போர்டு வைப்பதற்கான இட அமைப்பை முதலிலேயே திட்டமிடுதல் வேண்டும். இதனால் விளம்பர அட்டைகள் பொருத்தமாக தயாரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
 • வகுப்பறையில் பயன்படுத்துவதற்கு முன் பரிசீலனை செய்ய வேண்டும். கற்பதற்கேற்றவாறு அதனை வரிசைக்கிரமமாகப் பிரித்து வைத்தல் வேண்டும். கற்போரின் கவனத்தைக் கவரவும் நிலை நிறுத்தவும் உணர்வுபூர்வமாகக் கற்பித்தல் வேண்டும்.

ப்ளானல் போர்டை அமைப்பதற்கான வழிகள்

 • ஒரு சதுர மீட்டர் அளவுள்ள பழைய சுத்தமான கம்பளி அல்லது கருப்புநிறத் துணியை எடுத்துக் கொள்ளவும்.
 • இதனை ஒரு தடினமான மரப்பலகையின் மேல் வைத்து சிறு ஆணி அல்லது பட்டன் கொண்டு பின் செய்யவும்.

பின் அதன் மேல் படங்கள் அல்லது பயன்படுத்த வேண்டிய சொற்கள் போன்றவற்றை அத்துணியின் மேல் வைத்து பின் செய்யவும். ப்ளாஷ் அட்டைகள் ப்ளாஷ் அட்டைகள் மிக எளிதாகவும் திருத்தமாகவும் ஒரு புதிய செய்தியை விரைவாக கற்க உதவுகிறது.

ப்ளாஷ் அட்டைகள் விளையாட்டு முறையில் புதியவற்றை கற்கவும், அதன் மூலம் தங்களின் பேச்சுத்திறனை வளர்க்கவும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தைக்கு சாதாரணமாகக் கிடைக்ககூடிய காய்கறிகளின் பெயர்களைப் பற்றிக் கற்பிக்கும் போது காய்கறியின் வடிவத்திலேயே ப்ளாஷ் அட்டைகளை பயன்படுத்தும் போது அதன் புறத்தோற்றம் காய்கறியின் வடிவத்தோடு தொடர்புடையதாக இருப்பதால் எளிதாகக் கற்க முடிகிறது. இத்தகைய அட்டைகள் காய்கறிகளின் பெயர்களையும் அதை கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கண்டறியவும் குழந்தைகளுக்கு உதவுகிறது. வாகனங்கள் சம்பந்தமான அட்டைகள், எடுத்துக்காட்டாக மிதிவண்டி, கப்பல், லாரி, கார், ஆகாய விமானம் போன்றவை, விலங்குகளின் சரணாலயத்திற்கு செல்லாதவர்கள் கூட மிருக காட்சி சாலையிலுள்ள பல விலங்குகள் பெயர்களைப் பற்றிய ப்ளாஷ் அட்டைகள் மூலம் அறியலாம். குழந்தைகளுக்கு ஒலியுடன் கூறும் போது ஒவ்வொரு விலங்கின் பெயரையும் சரியாகக் கற்கிறார்கள்

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top