பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கற்பித்தல்

கற்பிக்க உதவும் சாதனங்கள், கற்பிக்கும் முறைகள் மற்றும் அதன் பண்பு நலன்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கற்பிக்க உதவும் சாதனங்கள்

 • புத்தகங்கள், ப்ளாஷ்கார்டு,
 • சாக்போர்டுகள்,
 • ப்ளானல் போர்டுகள்,
 • மாதிரிகள்,
 • நிஜப்பொருட்கள்,
 • அடுக்குக் கட்டைகள்

கற்பிக்கும் முறைகள்

 • பாடல்கள்,
 • கதைகள்,
 • நாடகம்,
 • நடனம்,
 • உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு

கற்பித்தல் என்பது ஒரு சமூகம் சிறுவயதினரை தேர்ந்தெடுக்கப்பட்ட சூழ்நிலையில் விரைவாகத் தாங்கள் வாழும் உலகத்தில் ஒத்துப் போவதற்கான வழிகளில் பயிற்சியளிக்கும் செயலாகும். முன்னேறிய நாகரீகமான நமது சமூகத்தில் ஒத்துப் போவதற்கு மட்டுமல்லாது எண்ணங்களில், செயல்களில் மற்றும் நடத்தையில் முன்னேற்றமடைய முயற்சித் தேவைப்படுகிறது. இது அவர்களுக்கு தங்கள் சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்பட உதவும்.

ஒர் ஆசிரியர் குழந்தைகளையும் பாடங்களையும் கற்பித்தலின் மூலம் ஒன்றாக இணைக்க முடிகிறது. கற்பவரும் கற்பிப்பவரும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். கற்பிப்பவர் கற்பித்தலிலும் கற்பவர் கற்றலிலும் முறையான கல்வி மற்றும் முறைசாராக் கல்வி இரண்டும் ஒன்றொடொன்று இணைந்து செயல்படும் போது நல்ல முடிவுகள் ஏற்பட சாதகமாக உள்ளது.

கற்பித்தலின் முக்கிய சிறப்பியல்புகள்

 • கற்பித்தல் என்பது செய்திகளைக்கொடுக்கக்கூடியது.
 • குழந்தை கற்றலுக்குக் காரணமாக இருப்பது கற்பித்தல்.
 • கற்பித்தல் ஒரு குழந்தை தன்னுடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான முறையில் இயங்க உதவுகிறது.
 • கற்பித்தல் ஒரு குழந்தை தன்னுடைய சூழ்நிலைக்கு ஒத்துப்போக உதவுகிறது.
 • குழந்தைகளின் இயற்கையான சக்தியை வளர்க்க கற்பித்தல் உதவுகிறது.
 • கற்பித்தல் என்பது குழந்தைகளுக்கு சரியான செயலை சரியான முறையில் சரியான நேரத்தில் கற்க உதவுதலாகும்.
 • கற்பித்தல் குழந்தைகளின் அறிவு, மனவளர்ச்சிக்கும், உடல், சமூக, மன எழுச்சி வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.

கற்பித்தலின் பொதுவான கொள்கைகள்

 1. குழந்தைகளைத் தானாகவே செயலாற்ற வைக்கும் கொள்கை.
 2. பள்ளியின் திட்டங்களை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தும் கொள்கை.
 3. குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் கொள்கை.
 4. கற்பித்தலுக்குத் தேவையான சரியான சாதனங்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கை.
 5. திரும்பச் செய்தல் அல்லது மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தலின் விதி.

கற்பித்தலின் பண்புகள்

 • குழந்தைகள் வேலை செய்தவற்கு உற்சாகமளிக்கக் கூடிய நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
 • பலவகையான செயல்முறைத் திட்டங்களுக்கும், ஏனைய செயல்களைச் செய்யப்பல சந்தர்ப்பங்களை அளிக்குமாறு இருக்க வேண்டும்.
 • தெளிவான (எண்ணங்களை) சிந்தித்தலுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும்.
 • பல்வேறு நிலையிலுள்ள திறமை மற்றும் அறிவுத் திறனுக்கேற்றவாறு அமைய வேண்டும். கற்பவர்களின் மனநிலைக்கேற்றவாறும் விருப்பத்திற்கேற்றவாறும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.11111111111
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top