பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகள் காப்பகம்

குழந்தைகள் காப்பகம் அமைத்தல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் காப்பகம் அமைத்தல்

குழந்தைகளுக்கு முதல் ஆறு ஆண்டுகளில் வழங்கும் போதிய கவனிப்பும் பயிற்சியுமே அவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பது உலகளாவிய உண்மை. ஆசிரியர்களின் மேற்பார்வையில் பணியாளர்களும் இணைந்து குழந்தைக்கு என உருவாக்கும் ஒரு பாதுகாப்பான இன்ப உலகமே குழந்தைகள் காப்பகம் ஆகும். ஒருங்கிணைந்த பகல் நேர கவனிப்பு திட்டமானது பிறந்தது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளின் கல்வி, சத்துணவு, ஆரோக்கியம், பொழுதுபோக்கு மற்றும் மனத் தேவைகளைக் கவனித்து பூர்த்தி செய்யும் திட்டமாகும்.

குழந்தை காப்பகங்கள், ஏழை எளிய மக்களின் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளிகளாக மாற்றாமலும், சமூகத்தில் இளங்குற்றவாளிகளாக மாற்றாமலும் இருப்பதற்காகப் போதுமான பாதுகாப்பை வழங்குமிடமாக உள்ளது.

குழந்தைகள் காப்பகத்தின் நோக்கங்கள்

 • முறையான பள்ளிக் கல்விக்கு குழந்தைகளை தயாராக்கி ஒருங்கிணைந்த வளர்ச்சியை அளிக்க உதவும் பகல் நேர மையம்.
 • அவர்களின் வளர்ப்பு சூழ்நிலை இயன்ற வரையில் ஆரோக்கியமானதாக இருக்க உதவுதல்.
 • அவரவரின் இயற்கையான சுபாவத்திற்கும், திறமைக்கேற்றவாறும் சில தொழிற்திறமைகளைக் கற்கவும் உதவுதல்.
 • பணிபுரியும் தாய்மார்கள் பிறந்தது முதல் 12வயது வரையுள்ள குழந்தைகளைப் பகல் நேரத்தில் பாதுகாப்பளித்துப் பராமரித்தல்.
 • கட்டாயப்படுத்தி ஒரு கடுமையான சூழலில் இல்லாமல் பாதுகாப்பான அன்பான இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.
 • பகல் நேரங்களில் நல்ல சத்தான உணவுகளை அளிக்கும் போது குழந்தைகள் தங்கள் பெற்றோர் போதுமான கவனிப்பைத் தரவில்லையெனிலும் மையங்களில் ஆரோக்கியமாக வளர சூழ்நிலை ஏற்படுத்தல்
 • பால்வாடி மற்றும் ஆரம்ப கல்வி நிலையில் முறை சாராக் கல்வி மூலம் அடிப்படை அறிவு வளர்ச்சிக்கு உதவுதல்.
 • குழந்தைகளுக்குப் போதுமான பொழுதுபோக்கு வசதிகளைச் செய்து கொடுத்தல்.
 • குழந்தைப் பருவத்து நோய்களைத் தவிர்க்கவும், தீர்க்கவும் ஆரோக்கியமாக வளரவும் உதவுதல்.
 • குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தை கவனிப்பு, வளர்ச்சி, ஆரோக்கியம், சமூக விளைவுகள் பற்றியும் கற்பித்தல்.

குழந்தை காப்பகங்களைத் திட்டமிடுதல்

குழந்தைகள் காப்பகங்களைத் திட்டமிடும் கட்டுப்பாடு, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஏனைய வசதிகள் தரத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதா என கவனித்தல் வேண்டும். குழந்தைகள் ஆசிரியர் விகிதம், இருக்குமிடம், மற்ற வசதிகள், தரை அமைப்பு, காற்றோட்டம், சுத்தம், உணவு, பாதுகாப்பு வசதிகள், ஒய்வு எடுக்கும் வசதி மற்றும் விளையாடுவதற்கேற்ற இடம், இன்சூரன்ஸ், மற்றும் மேலாண்மை வசதிகள் போன்றவற்றில் சட்ட விதிகளுக்கு உட்பட்டும் ஆரம்ப மற்றும் எதிர்கால செலவுகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.

குழந்தைகள் காப்பகம் தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 • அடிப்படை குழந்தை நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் கீழ்வருமாறு இருத்தல் வேண்டும்.
 • முதலுதவி பற்றிய துறையில் பயிற்சி பெற்றவராக இருத்தல்.
 • காப்பகத்தினுள் கண்டிப்பாக தொலைபேசி வசதியிருத்தல்.
 • அவசர ஆபத்திற்கு உதவக்கூடிய அளவில் யாரேனும் இருத்தல்.
 • குழந்தை நலனைப் பற்றியும் பயிற்சி பெற்றவராக இருத்தல்.
 • குழந்தை காப்பகம் நடத்துவோர் குழந்தைகளின் ஆயுள் காப்பீடு பற்றியறிந்தவராக இருத்தல்.
 • குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முந்தைய பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெற்ற நல்ல கருத்துக்களைப் பரிந்துரை செய்ய கூடியவராக இருத்தல் வேண்டும்.
 • குழந்தை நலன் குழு, குழந்தை நலனைப் பற்றிய பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடக்கும்போது அறிவுரையைக் கூறக்கூடியவராகவும், குழந்தை நலனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பணம் வழங்குபவராகவும் இருத்தல் வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

Filed under:
2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top