பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிளாக்ஸ் அல்லது அடுக்குகட்டைகள்

சிறுகுழந்தைகளின் தசை மற்றும் மன வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பிளாக்ஸ் அல்லது அடுக்குகட்டைகள் பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

அடுக்குக்கட்டைகள்

பிளாக்ஸ் அல்லது அடுக்குகட்டைகள் சிறுகுழந்தைகளின் தசை மற்றும் மன வளர்ச்சியை அதிகரிக்கும் ஒரு முக்கிய கற்றல் கருவியாகும். கற்றலுக்கு மிகவும் பொருத்தமானவையாக அவை உள்ளன. முன்பள்ளியில் அடுக்குக்கட்டைகளின் மூலம் விளையாடுவதால் பல கருத்துக்களையும் திறமைகளையும் கற்க எளிதாக உதவுவதால் இவை சிறுவர்களின் பாடத்திட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

பொருளுரை

அடுக்குக்கட்டைகள் பலவித வடிவங்களில், நிறங்களில் தன்மையில் இருப்பதால் முன்பள்ளிக் குழந்தைகள் தங்கள் புலன்களின் மூலம் கற்க இவற்றைப் பயன்படுத்தலாம். முன்பள்ளிச் செயல்களில் ஆக்கபூர்வமாகவும், கணக்கில் விடைகாணும் வழிகளையும் அடுக்குக்கட்டைகள் மூலம் செய்யலாம்.

அடுக்குக்கட்டைகளின் மூலம் விளையாடும் போது அவர்கள் வடிவங்களைப் பற்றியும், கட்டைகளை எவ்வாறு வடிவமைப்பது (மேல், கீழ், அருகில்) என்பது பற்றியும் அவற்றை எவ்வாறு சமன்படுத்துவது மற்றும் எண்ணுவது என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.

முன் கணித அடுக்குக் கட்டைகள்

கணிதத் திறமையை பல வழிகளில் அடுக்குக் கட்டைகள் மூலம் கற்கலாம். அவை புதிதாக ஆராயவும் கணித உலகத்தின் பல வினோதங்களைக் கண்டுபிடிக்கவும் உதவுகிறது.

 • கட்டைகளின் வடிவம், உருவம், நீளம், அகலம் மற்றும் உயரங்களுக்கு ஏற்றாற் போல் பிரித்தறிதல்.
 • பலவிதங்களில் அடுக்கும் போது அதன் வரிசைகிரமத்தை அறிந்துக் கொள்கின்றனர் (முதல், இரண்டாவது, இறுதி போன்றவை).
 • அடுக்குக் கட்டைகள் அளக்க உதவும் ஓர் அலகாகவும் இருக்கிறது.

விளையாட்டின் மூலம் கணிதத்தைக் கற்பிக்க சில எளிய கேள்விகள்

 • அடுக்குக் கட்டைகளை எண்ணி பின் அதனைக் குறித்தல்.
 • அதன் அளவினை அளப்பதற்கு (நீள, அகலம்) குழந்தைகளுக்கு உதவி செய்தல்.
 • நீளமான கட்டையை அளந்து அறிதல். குட்டையானதைக் கண்டுபிடித்தல். 3D புதிர் அடுக்குக் கட்டைகள் மூலம் அவற்றின் தோற்றம், மற்றும் கணக்கில் விடை கண்டுபிடித்தல் போன்றவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
 • கிரேயான் பென்சில் கொண்டு அடுக்குக் கட்டைகளின் ஒரத்தில் வரைந்து அதன் வடிவத்தை அச்சில் வரையலாம். வரைந்த பின் அடுக்குக் கட்டைகளை எடுத்துவிட்டு குழந்தைகளிடம் சரியான இடத்தில் அதனைப் பொருத்துமாறு கூறலாம்.
 • அடுக்குக் கட்டைகள் மூலம் நாடக விளையாட்டு விளையாடுதல் நாடக விளையாட்டையும் ஆக்கபூர்வமான செயல்களையும் ஒன்றொடு ஒன்று இணைந்து அடுக்குக் கட்டைகளைக் கொண்டு கற்கலாம். எடுத்துக்காட்டாக தரையின் மீது கட்டைகளைக் குவித்து ஒரு நகரை உருவாக்குமாறு கூறலாம். இதில் சரியானது தவறானது என்று ஒன்றுமில்லை. நகரத்தை அமைத்து அதில் பொம்மைகள் வடிவத்தில் மனிதர்கள், கார், மரங்கள் போன்றவற்றை வைக்கும் போது உண்மையானது போலத் தோன்றும். இந்நகரத்தைப் பற்றிக் கதைகள் கூறுவதன் மூலம் விளையாட்டில் அதிக உற்சாகத்தை ஏற்படுத்த முடியும். இக்காட்சியை உருவாக்கும் போது குழந்தைகளிடம் அதிகமான கேள்விகள் கேட்கும் போது அவர்களின் திறனை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது. அடுக்குக் கட்டைகள் மூலம் எழுத்துக்களைக் கண்டறிதல் இதற்கு எழுத்துக்கள் நிறைந்த அடுக்குக் கட்டைகள் தேவைப்படுகிறது.
 • முன்பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெயரின்பால் பெருமிதம் உடையவர்கள். எனவே, எழுத்துக்கள் உள்ள அடுக்குக் கட்டைகளை பெயருக்கேற்றவாறு அடுக்கும் போது எழுத்துக்களை கற்பதோடு தங்கள் பெயரையும் கற்கிறார்கள். குழந்தைகளின் பெயரைப் பெரிய எழுத்துக்களில் தாளில் எழுதி அதனைப் பென்சிலால் தங்களின் விரல்களைப் பயன்படுத்தி அச்சுக்களை எடுக்கச் சொல்லலாம். அடுக்குக் கட்டைகள் மூலம் பாடலினைக் கற்றல் ஒவ்வொரு குழந்தையிடத்தும் ஒவ்வொரு கட்டையினைக் கொடுத்து அதனை வைத்து எவ்வாறு ஒலி ஏற்படுகிறது என்று கற்றுத் தர வேண்டும்.
 • கட்டைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குத் தட்டும் போது எவ்வாறு ஒரே விதமாக இணையான ஒலி ஏற்படுத்துகிறது என்பதைக் கவனிக்குமாறு கூறுதல் வேண்டும். கட்டைகளை உப்புக் காதிதத்தால் தேய்க்கும் போது பலவிதமான ஒலி ஏற்படுவதைக் காண்பிக்கலாம்.
 • அடுக்குக் கட்டைகளை வைத்து முன்பள்ளியில் பல எண்ணிலடங்காச் செயல்களை கற்கலாம். அவை வகுப்பறையில் ஆக்கபூர்வமான வழியில் உருவாக்கவும், பயன்படுத்தவும் உதவுகிறது. இக்கட்டைகள் சிறிய மற்றும் பெரிய தசைகளின் வளர்ச்சிக்கு உதவுதலில் முக்கிய பங்கேற்கிறது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுக்கும் போது எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் கவனித்தல் வேண்டும். இவ்வாறாக மரக்கட்டைகள் முன்பள்ளிக் குழந்தைகளுக்கு உடல், உள்ளம், மற்றும் அறிவு வளர்ச்சிக்கு பலவகையிலும் பயனளிக்கக் கூடியதாக உள்ளது. பாட்டு குழந்தைகளின் மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். பாட்டின் மூலம் அவர்கள் மனதில் உள்ள விஷயங்களை நன்முறையில் வெளிப்படுத்தலாம். உலகம் முழுவதும் சப்தம் நிறைந்துள்ளது.
 • பாடல்களைப் பாட கற்பதும் ரசிப்பதும் நம்முடைய வாழ்நாள் முழுவதற்கும் ஒரு சொத்தாக இருக்கிறது.

பாட்டுப்பாடுவதின் முக்கியத்துவம்

 • பாட்டு குழந்தைகளின் மனநிலையை மாற்றியமைத்து பக்குவப்படுத்தவும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
 • அன்னம் எப்படி நடக்கிறது, கடிகாரத்தின் சத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கூர்ந்து நோக்கி பார்க்கும் போது அவர்கள் தாங்கள் கற்ற பாடலை வாழ்க்கையில் பின்பற்ற உதவுகிறது.
 • குழந்தைகள் தங்கள் குரலில் சுருதியை கூட்டவும், ராகத்தோடு பாடவும் கற்றுக் கொள்கிறார்கள்.
 • விழிப்புணர்வையும் ரசிகத் திறனையும் அதிகப்படுத்துவதன் மூலம் எந்த செயலையும் நன்றாகக் கவனிக்க கற்றுக் கொள்கிறார்கள்.
 • கூச்சசுபாவமுள்ள குழந்தைகள் கூட மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடும் சந்தர்ப்பம் கிடைத்த பின் அவர்களைக் கண்காணித்துப் பார்த்தால் அக்குழந்தைகள் எவ்வித பயமின்றி செளகரியமாக இருப்பதைக் காண முடியும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top