பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புத்தகங்கள்

முன்பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தகங்கள் எவ்வாறு உதவுகிறது என்பன பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

புத்தகங்களின் பயன்கள்

புத்தகங்கள் குழந்தைகளுக்கு புதிய உலகத்தைக் காட்டுகின்றன. அவர்கள் தங்கள் கருத்துக்களை, அக்கறையுடன் வெளிப்படுத்தவும், சுற்றுப்புறத்தை அறியவும், செயல்களைத் தொடங்கவும், சமூக உத்திகளை, நுட்பங்களை அறியவும் மற்றும் பெரியவர்களுடனும் தங்கள் வயதை ஒத்தவர்களுடனும் தொடர்பு கொள்ள புத்தகங்கள் உதவுகிறது. முன்பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தகங்கள் பின்வருவனவற்றிற்கு உதவுகிறது.

 • முதல் அனுபவங்களை வளப்படுத்துகிறது அல்லது கூடுதலாக்குகிறது. சரியான கருத்துக்களை உருவாக்க முடிகிறது.
 • புதிய (எண்ணங்களை) கருத்துக்களைத் தூண்டுகிறது.
 • சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.
 • இயற்கை அழகினைப் பாராட்ட முடிகிறது. மற்றவர்களுடன் உரையாடுவதன் மூலம் மொழி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 • படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.
 • உற்று (கூர்ந்து) நோக்கலை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.
 • கற்பனைத் திறன் மற்றும் ஆக்கத்திறனை வளர்ப்பதற்கும் புத்தகங்கள் உதவுகிறது.

கதைப்புத்தகங்கள்

ஆசிரியர்கள் புத்தகங்களை கவர்ச்சிகரமான முறையில் காட்சிக்கு வைக்கும்போது அவைகளில் சில குழந்தைகளின் ஆர்வத்தையும் தூண்டுகின்றது. கதை கூறுவதன் மூலம் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடிகிறது.

கதைப் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள்

கதைப்புத்தகமானது, உண்மையைக் கூறக்கூடியதாக இருக்கவேண்டும். ஏனெனில் உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு அறியாதவாறு முன்பள்ளிக் குழந்தைகள் இருப்பார்கள்.

 • குழந்தைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும்.
 • வண்ணமயமாகவும் கவர்ச்சிகரமாகவும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் இருக்க வேண்டும்.
 • சரியான தகவலை அளிப்பதாக இருத்தல் வேண்டும். சரியில்லாத தகவல் குழந்தையின் மனநிலையைப் பாதிக்கும்.
 • வார்த்தைகள் மற்றும் ஒலிகள் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
 • எளிய வார்த்தைகளில் விரிவானதாகவும் இருக்க வேண்டும், தேவையற்ற குறிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
 • சிறிய புத்தகமாக இருக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

Filed under:
3.05555555556
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top