பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்பள்ளிக்கான பாடல்களைத் தேர்ந்தேடுத்தல்

முன்பள்ளிக்கான பாடல்களைத் தேர்ந்தேடுக்கும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மொழியிலும் குழந்தைகளுக்கென பல பாடல்கள் உள்ளன. எல்லோருக்கும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய கருத்துக்கள்

 • பொருள் (பொருளடக்கம்)
 • இயற்கையான இணைப்பு சொற்கள் (அ) வார்த்தைகள்
 • அளவு
 • சுருதி செயல்கள்
 • பாடல்களை ரசிக்கும் உணர்வினை குழந்தைகளிடம் ஏற்படுத்த பின்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்:
 • பாடல்களிலுள்ள வார்த்தைகள் தெரிந்தவையாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும்.
 • இயற்கையான சுருதிலயத்தோடு இருக்க வேண்டும்.
 • பாடலின் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
 • பாடலில் உள்ள கருத்துக்கள் குழந்தைகளுக்கேற்ற புரிந்து கொள்ள கூடிய நிலையிலும் வகுப்பிற்கேற்றதாகவும் இருக்க வேண்டும்.
 • தேசபக்தி பாடல்கள், வீரதீரப்பாடல்கள், பறவைகள், விலங்குகள், பொம்மைகள் பற்றிய பாடல்கள் போன்றவை நல்லது.
 • தனிநபர் பாட்டைவிட குழந்தைகள் குழுப்பாடல்களையே அதிகம் விரும்புகின்றனர்.
 • குழந்தைகளின் மாறும் மனநிலைக்கேற்பவும், ஆர்வத்திற்கேற்பவும், புதிய உத்திகளைக் கொண்ட பாடல்களையும் மற்றும் ஆழ்ந்த அறிவினை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

கதை கூறுவதன் முக்கியத்துவம்

 • கதைகள், குழந்தைகள் ஆசிரியர் இடையே நட்புறவை ஏற்படுத்தவும் அவர்களோடு ஒன்றிப் போகவும் கதை கூறுதல் ஒரு முக்கியமான செயலாக இருக்கிறது.
 • குழந்தைகள் மற்றவர்களின் உணர்வுகளை அடையாளம் காண உதவுகிறது.
 • பல பாடங்களில் அவர்களின் ஆர்வத்திற்கு அணை போட கதை சொல்லுதல் உதவுகிறது.
 • தங்களுடைய நாட்டின் பண்டைய மத கலாசாரங்களைப் பற்றியறிய உதவுகிறது.
 • நீதிக் கருத்துக்களைக் கதைகளின் மூலம் எளிதாகக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்.
 • கதை கூறுவதன் மூலம் குழந்தைகள் தங்கள் மனக்கண்ணில் பிம்பங்களை உருவாக்குவதோடு, பல புதிய சொற்களையும், மொழியைப் பற்றியும் அறிந்துக் கொள்ள முடிகிறது.
 • கதைகளை கேட்டு அதனை மீண்டும் தாங்களாகவே கூறும் போது புதிய முறையில் விளக்க முற்படுவதால் அவர்களின் கற்கும் திறனும் அதிகரிக்கிறது.
 • கதையின் ஆரம்பம், முடிவு, அதன் நடுவில் உள்ளது என பல பகுதியாகப் பிரித்து கதையின் கோர்வையை புரிந்து கொள்கிறார்கள். கதையில் உள்ள சம்பவங்கள், கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவு படுத்திக் கூறுவதால் அவர்களின் ஞாபகத்திறன் அதிகரிக்க உதவுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.07692307692
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top