பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விஞ்ஞான பரிசோதனை

குழந்தைகளின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் விஞ்ஞான பரிசோதனை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

விஞ்ஞான பரிசோதனை என்பது குழந்தையின் அடிப்படை வாழ்க்கையைக் கற்கும் ஆரம்ப காலத்திலேயே தொடங்குகிறது. உண்மையாகச் சொல்லுவோமேயானால் ஒரு குழந்தை ஆராய்ச்சி வடிவிலேயே கற்கிறது. கற்கப் பழகுகிறது. விஞ்ஞானம் என்பது நிருபிக்கக்கூடிய உண்மையாகும், பரிசோதனை என்பது உண்மையினை நிருபித்தலாகும். எனவே குழந்தைகளுக்கு கற்பிக்கும் அனைத்தையும் செயல்முறை பயிற்சியளித்து கற்கச் செய்யும் போது அவர்கள் நினைவில் நிலையாக நிறுத்திக் கொள்வதால் எளிதில் மறப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வெப்பமானது, குளிர்ச்சியானது என்ற கருத்தைக் கற்பிக்கும் போது பனிக்கட்டியைத் தொட்டு இது குளிர்ச்சியானது என்றும் வெந்நீரைத் தொட்டு இது வெப்பமானது என்றும் கூறாமல், குழந்தையையே குளிர்ச்சியான ஒன்றையும் வெப்பமான ஒன்றையும் தொட்டுணரச் செய்வதன் மூலம் இக்கருத்தை அவர்கள் எளிதாகக் கற்கிறார்கள்.

விஞ்ஞான பரிசோதனைகளால் ஏற்படும் பயன்கள்

  • குழந்தைகள் கற்க வேண்டிய கருத்தை எளிதாகக் கற்க உதவுகிறது.
  • குழந்தைகள் நிலையாக ஆழமாகக் கற்பதால் எதிர்காலத்தில் கற்பதற்கு அடிப்படையாக அவை உதவுகிறது.
  • புத்தகங்களில் படித்து கற்பதை விட செயல்முறை பயிற்சி வழியாகக் கற்கும் போது அவை மிக்க மதிப்புடையதாக உள்ளது என்பது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

விஞ்ஞான அனுபவங்கள்

தற்கால நாகரீக மனிதன் விஞ்ஞான செயல்களின் உலகிலேயே வாழ்கிறான். முன்பள்ளிக் குழந்தைகள் பல பாடங்களை (வேதியியல், இயற்பியல், தாவரவியல்) கூர்ந்து நோக்கி விஞ்ஞான ரீதியில் கற்பதால் அவர்களின் ஆர்வமும் தூண்டப்படுகிறது. அறிவியல் சார் கருத்துக்கள் எளிய முறையில் பலவகை விஞ்ஞான அனுபவங்கள் மூலம் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. விஞ்ஞான அனுபவத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பயன்கள் முதல் அனுபவங்களைப் பெறுவதற்கு உதவி செய்கிறது.

  • அடிப்படை அறிவை வளர்க்கத் தேவையான அடிப்படை கருத்துக்களை ஏற்படுத்த உதவுகிறது.
  • கூர்ந்து நோக்கும் திறனை அதிகரிக்கிறது.
  • பரிசோதனைக் கருவிகள் மற்றும் தேவையான சில பொருட்களைப் பற்றி அறியவும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது.
  • பிரச்சனை தீர்த்தலைக் கற்கவும் உதவுகிறது.
  • ஆராய்ச்சி செய்யும் எண்ணத்தையும் ஆர்வத்தையும் தூண்டுவதற்கு உதவி செய்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

Filed under:
2.8125
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top