பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விளையாட்டுக் கருவிகள்

குழந்தைகள் விளையாட்டு செயல்கள் மூலம் கற்பதற்கு ஊக்குவிப்பதால் விளையாட்டுக் கருவிகளின் முக்கியத்துவம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுக் கருவிகளின் முக்கியத்துவம்

முன்பள்ளிக் கல்வி என்பது விளையாட்டின் மூலம் கற்பதாகும். குழந்தைகள் விளையாட்டு செயல்கள் மூலம் கற்பதற்கு ஊக்குவிப்பதால் ஆர்வத்தோடு தங்கள் விருப்பம் போல் கற்கின்றனர். விளையாட்டு மூலமாக கற்பித்தல் நிகழ வேண்டுமானால் கண்டிப்பாக அங்கு அதிகமான விளையாட்டுக் கருவிகள் இருத்தல் அவசியம். பியாஜெட் என்ற உளவியல் அறிஞரின் கூற்றுப்படி குழந்தைகள் உண்மையான அனுபவத்தின் மூலம் அதிகம் கற்கின்றனர் என்கிறார். உண்மையான அனுபவமில்லாமல் எளிதில் உணராமல் கற்கும் போது குழந்தைகள் தாங்கள் கற்ற கருத்தினை எளிதாகப் புரிந்துக் கொள்ள இயலாது. இத்தகைய நிலையான அனுபவங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் கருவிகள் மூலமும் மற்ற காண்கேள் சாதனங்களான கதை கூறுதல், மாதிரிகள், வரைபடங்கள் போன்றவற்றின் மூலமும் ஏற்படுத்தப்படுகிறது. எனவே, முன்பள்ளிக் கல்வியில் விளையாட்டுக் கருவிகள் முக்கிய ஆதாரமான பங்கினை வகிக்கிறது.

விளையாட்டுக் கருவிகளைத் தேர்ந்தெடுத்தல்

முன்பள்ளிக்கு விளையாட்டுக் கருவிகளைத் தேர்ந்தேடுக்கும் போது கீழ்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்

 • குழந்தைகளின் அனைத்து வளர்ச்சிக்கும் உதவக்கூடியதாக விளையாட்டுப் பொருட்கள் இருத்தல் வேண்டும்.
 • பலவிதமான செயல்களில் ஈடுபடுத்த சந்தர்ப்பம் அளிக்கக்கூடிய வகையில் விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே, பலவிதமான விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் இருத்தல் வேண்டும்.
 • நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடியதாக இருத்தல் அவசியம்.
 • விளையாட்டுக் கருவிகளை வாங்குவதற்கு எவ்வளவு பணம் உள்ளது என்பது முக்கியமான ஒரு காரணமாகும்.
 • பழுதடைந்த விளையாட்டுக் கருவிகளை புதுப்பிப்பதற்குத் தேவையான வசதிகள் உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 • வெளிப்புற விளையாட்டுக் கருவிகள்: முன்பள்ளி, கிராமப்புறத்திலோ அல்லது நகர்ப்புறத்திலோ எங்கிருப்பினும் சில விளையாட்டுப் பொருட்கள் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

தேவையான விளையாட்டுப் பொருட்கள்

இன்றியமையாத பொருட்கள் விரும்பத்தகுந்த பொருட்கள்

 • ஜங்கிள் ஜிம் - 1
 • மிதிக்கும் கார் - 1
 • ஊஞ்சல் - 1
 • சிமெண்ட் (அ) டிரம் பைப்புகள் -2
 • மூன்று சக்கர சைக்கிள் - 2 (ஊர்ந்து செல்வதற்கு)
 • பெரிய பந்து - 2
 • மெர்ரி கோ-ரவுண்ட் -1
 • தண்ணிர் ஊற்றும் டின் - 2
 • சறுக்கல் பலகை - 1
 • மணல்தொட்டி (பலவித அச்சுக்கள்,வாளிகள், டம்ளர்கள்) - 1
 • செல்லப்பிராணிகளுக்கான கூடு -1
 • தாழ்ந்த மரக்கிளைகள் – 1
 • தோட்டக் கருவிகள் - 1
 • சக்கர பொம்மைகள் - 5
 • தள்ளும் பலகைகள் - 2
 • ஆடும் குதிரைகள் - 3

உட்புற விளையாட்டுக் கருவிகள்

குழந்தைகள் அறையின் உள்ளே விளையாடுவதற்குப் பல்வேறு தனி இடங்களை ஒதுக்குவது பல்வேறு விளையாட்டுக்கள் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். விளையாட்டுக் கருவிகளை தனித்தனி இடங்களில் பின்வருமாறு வைக்கலாம்.

 • பொம்மைகள் வைக்குமிடம், வீட்டு விளையாட்டுச் சாமான்கள், சிறிய சமையலறைப் பாத்திரங்கள், தொட்டில் மூன்று அல்லது நான்கு பொம்மைகள், தேநீர்ப்பாத்திரங்கள், ஒரு தனிப்பெட்டியில் ஆடை அலங்காரப் பொருட்கள், கைப்பைகள், மிதியடிகள், போன்றவை தேவையானவையாகும். பெரிய அறையில் திரைச் சீலைகளால் பொம்மைகள் வைக்குமிடத்தை பிரிக்கலாம்.
 • கட்டைகள் வைக்குமிடம் அடுக்குக் கட்டைகள் உட்புற விளையாட்டுப் பொருட்களில் மிகவும் முக்கியமானவையாகும். அவை பல்வேறு செயல்களைக் கற்க சந்தர்ப்பம் அளிக்கிறது. கட்டைகள், மரத்தினாலோ, மொத்தமான பலகையினாலோ ஆனதாக இருக்கலாம். மரத்தாலான கட்டைகள் மற்றவற்றை விட மிகவும் உறுதியாக இருக்கும். கட்டைகளை நல்ல ஆழமான வண்ணத்தால் வர்ணம் பூசலாம். கட்டைகள் செவ்வக வடிவிலோ அல்லது சிறிய செங்கல் மாதிரியோ, வளைவானதாகவோ, சதுரமாகவோ, முக்கோணமாகவோ இருக்கலாம். கட்டைகளோடு, மரத்தினால் ஆன இரயில்கள், தண்டவாளங்கள், இழுக்கும் பொம்மைகள் போன்றவற்றை அளிக்கலாம்.
 • ஆக்கபூர்வமான செயலுக்கான இடம். இவ்விடத்தில் மரவேலைகள் (கொலேஜ்) காகிதத் துண்டுகளை வெட்டி ஒட்டுதல், வண்ணம் தீட்டுதல், ஒட்டுதல், நூல் ஒவியம், இசைக் கருவிகளை இசைத்தல் போன்ற செயல்களுக்கு இடத்தை ஒதுக்கலாம். சுத்திகள், மென்மையான கட்டைகள், ஸ்க்ரூ டிரைவர், அளவுகோல்கள், வேலை செய்ய உதவும் பலகை போன்ற கருவிகள் தேவை. மேலும் பிளாஸ்டிக் களிமண், மழுங்கிய கத்திரிகள், வண்ண பூச்சுக்கள், புருசுகள், கொலாஜ் வேலைக்குத் தேவையானப் பொருட்களான சிறகுகள், இலை, விதைகள், மரத்தூள், எரிந்த தீக்குச்சிகள் போன்றவற்றை வைத்து ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யலாம். இசைக் கருவிகளாக ப்ளூட், சிறிய மற்றும் பெரிய டிரம்கள், கஞ்சிரா போன்றவை குழந்தைகளுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
 • அறிவியல் ஆய்விற்கான இடம்: பூதக்கண்ணாடி, காந்தம், தராசு பலவகையான எடையுடனும், ப்ரிசம்கள், காம்பஸ் போன்றவற்றை அறிவியல் ஆய்விற்கான இடத்தில் வைக்கலாம்.
 • புத்தகங்கள் வைப்பதற்கான இடம் : இந்த இடத்தில் கதைப் புத்தகங்கள் படப் புத்தகங்களை வரிசையாக அலமாரிகளில் அடுக்கலாம். அமருவதற்கு பாய் அல்லது தரை விரிப்புகளைப் பயன்படுத்தலாம். உபயோகமற்ற பொருட்களிலிருந்து விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்தல் பலவிதமான விளையாட்டுச் செயல்களை உபயோகமற்ற பொருட்களிலிருந்து உருவாக்கலாம். ஆசிரியர்கள் அவர்கள் திறமையினைப் பயன்படுத்தி விளையாட்டுப்பொருட்களை கீழ்கண்டவாறு செய்யலாம்.
 • குளங்களிலிருந்து அல்லது நதிக்கரையில் சேகரிக்கப்பட்ட களிமண்ணை குழந்தைகளுக்கு கொடுத்து பல ஆக்கபூர்வமான விளையாட்டுக்களை விளையாடச் செய்யலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

Filed under:
3.2
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top