பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / கல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்

கல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலகமயமாதல் என்பது தொகுதி, தரம், அறிவின் பரவல் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான தொடர்பை உயர்த்தி நேர்மறையான செயல்பாடுகளை பெற்றதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க படுகிறது.

கல்வியில் உலகமயமாதலின் கருத்து

உலகமயமாதல் என்பது தகவல், கருத்து, தொழில்நுட்பம், பொருட்கள், சேவைகள், நிதி, கடைசியாக மக்கள், இவற்றிற்கான உலக பொருளாதாரத்தில் நாடு கடந்த இலவச ஓட்டத்தின் தொடர்பும், மனித வாழ்வின் அதிக பகுதிகளை முக்கியமாக கல்வியை பாதிப்பதே உலகமயமாதலின் செயல்முறை ஆகும். இது என்னவென்றால் கல்வி அமைப்பை பல்வேறு பொருளாதாரத்தில் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர ஒரே சீரான கற்பித்தல் பாடத்திட்டமுறைகளையும், வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய தேவைப்படும் அறிவின் அமைப்பையும் மேம்படுத்த வேண்டும். மேற்கத்திய நிறுவனங்களில் நுழைய 20-ஆம் நூற்றாண்டில், அதிக வளரும் நாடுகள் கல்வி வளர்ச்சியால் வளர்ச்சியை கண்டுள்ளன.

கல்வியில் உலகமயமாதலின் தாக்கம்

மக்களின் திறன்களை வளர்க்க, உலகமயமாதலின் மூலம் கல்வி அறிவை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற வளர்ந்து வரும் நாடுகள் மாற்றத்தை விரும்புகின்றன.

பல்வேறு வேலைகளுக்கு தேவையான திறன்களை தொழிற்சாலைகளிலும், பெறுநிறுவன உலகங்களிலும், உயர்கல்விகளுக்கு இடையேயான உறவிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டன. உலகமயமாதலின் செயல்முறை என்பது உலக வர்த்தகம், தொடர்பு, கல்வி செயல்பாடு, பொருளாதார உறவு இவை அனைத்திலும், 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, மனித தலைமையை உருவாக்குவதில் கல்வி ஒரு முக்கிய முதலீடாக இருந்து, தொழில்நுட்ப புதுமைகளிலும், பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டுவர உந்து சக்தியாக இருந்தது. இது, சமூகத்தில் கல்வியின் அந்தஸ்தை பரப்புவதன் மூலம் மக்களுக்கு பன்முகத்தன்மை வளர்ச்சியை உறுதி செய்கிறது. சமூகம் தொழில்மயமான பின் உலகில், மேம்பட்ட தேசங்கள், தங்களது தேசத்தின் வரவை விவசாயத்திலிருந்தோ அல்லது தொழிற்சாலைகளிலிருந்தோ பெறாமல் சேவை துறை மூலம் பெற்றன. இதுவரை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், திறன்களையும், பயிற்சிகளையும், அளிக்க கல்வித்துறை அதிகமாக முயன்று வருகிறது.

கல்விதுறை லாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்கி, பெரிய அளவில் வளர்ச்சியுற்றது. முன்னனி வளங்களின் ஒதுக்கீட்டிற்கு இடையேயான வட்டகூறு முன்னுரிமையில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான கருத்து வேறுபாடு எழுந்தது, இந்த தவறான கோட்பாட்டால் உயர் கல்வியில் ஆட்குறைப்பு எழுந்தது. இந்த அமைப்பை ஒரு வணிக நிறுவனமாக உறுவாக்குவது ஆபத்து என்பதை உணராமலேயே தனியார்மயமாக்கலுக்காக வாதிட்டது.

தாராளமயம்

தாராளமயமாதல், வாழ்க்கை சார்ந்த ஆராய்ச்சியை எளிதாக்க நிதியை அளித்து எதிர்கால இந்திய ஆசிரியர், மாணவர்களின் சாத்தியமான விருப்பத்தை உருவாக்கும். இது கல்வி நிறுவனங்களுக்கிடையே போட்டி, பற்றாக்குறை இருப்பின் அதை பூர்த்தி செய்து கல்விக்கான அதிகப்படியான மதிப்பை வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்யும். கல்வி வழங்கலை அதிகரித்தால் அது தானாகவே கல்விக்கான செலவாக மாறிவிடும்.

தாராளமயமாதலின் கருத்து

 • இந்தியாவில் உள்ள கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் தளர்த்துவதை குறிப்பதே தாரளமயமாகும். வழக்கமாக சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளில் முன்னிருந்த அரசு கட்டுபாடுகளை தளர்த்துவதே இச் சீர்திருத்தமாகும். வழக்கமாக இச்செயல் பொருளாதார தாராளமயமாதலை பயன்படுத்துவதை குறிக்கும், என்றாலும் இந்தியா கல்வி அமைப்பில் தாராளமயமாய் இல்லாமல் பொருளாதாரத்தில் தாராளமயமாய் உள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு, அதில் ஒன்று தேசிய கல்வி தொழில் என்பது போட்டி மனப்பான்மையோடு இருப்பதும், அரசு தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுத்ததும் ஆகும். இந்தியா தனது உயர்கல்வி அமைப்பில் தன்னாட்சி இல்லாததாலும், இணைப்பு சுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நெகிழ்வுத்தன்மை இல்லாமல் அதிக கடினத்துடனும் வகுக்கப்படுகிறது. உயர்கல்வியின் உண்மையான பலவீனம் அதன் அமைப்பிலே உள்ளது.
 • எனவே சுயபரிசோதனையும், பிரதிபலிப்பும் தேவைப்படுகிறது. மேலும், குறுக்கு வழி, எளிதாக செல்லும் பொது தொகுப்பாய் உள்ளது. நமது கல்விநிலை கொள்கை தரமான கல்வியை நோக்காமல், அதிக விரிவாக்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே உள்ளது.

கல்வியில் தாராளமயமாதலின் தாக்கம்

 • நேர்மறையான தாக்கம் இந்திய பொருளாதாரம் அதிகமாக சேவை தொழிலில் உயர்வை பெற்றுள்ளது. இதனோடு கல்வி துறையும் நமது பொருளாதாரத்துக்கு பெரிய தூண்களாக உள்ளது.
 • நூற்றுக்கும், ஆயிரத்திற்கும் அதிகமான நமது இந்திய மாணவர்கள், வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய ஒரு பில்லியன் அளவு மதிப்புள்ள பணத்தை செலவிடுகின்றனர்.
 • இது நமது நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க இங்கிருந்து வெளியேறுவதை உறுதி செய்கிறது. பெருநிறுவனங்களை அனுமதிப்பது சிறந்த தொழில் சார்ந்த, குறிப்பிட்ட திறன் கொண்ட பட்டதாரிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும். இது சமுதாயத்தை தொழில்மயமாதலிலிருந்து தகவல் சார்ந்த சமூகமாக மாறுவதை குறிக்கிறது.
 • தாரளமயமாதல் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே படிப்பதோடு உலகளாவிய மதிப்போடு பட்டத்தை பெரும் நன்மைகளை ஏற்படுத்துகிறது. தேசத்தின் நஷ்டமான மூலை வடிகாலையும் தடுக்கிறது.

எதிர்மறையான தாக்கம்

வளர்ந்து வரும் நாடுகளில் மாணவர்களும், உள்ளூர் நிறுவனங்களும், முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. வளர்ந்துவரும் நாடுகளில் தகவல் இல்லாத, சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள குறைந்த தரமுடைய கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுடன் கூட்டு உருவாக்கி கொள்கின்றனர். வாய்ப்பு எழும்போதெல்லாம் தங்கள் பைகளை திணித்துக்கொள்ள அபாயமான போலி நிறுவனங்கள் பார்க்கின்றன.

இந்தியாவில் ஊழல் பெருத்துள்ளது. இது போன்ற கொள்கைகளின் வெளிப்பாடு என்பது லஞ்சம், பொய்யான படங்கள், ஒரு சார்புடையாரை குறித்தல் போன்றவற்றை தவிர்ப்பது கற்பனையே. இது வெளிச்சத்திற்கு வரும்போது எதிர்பாராத விளைவுகள் உண்டாகும்.

வரையறுக்கப்பட்ட மூலதனமுள்ள உள்ளூர் நிறுவனங்கள் வேலையற்றோருக்கு வாழ்வை தரமுடியாது. புகழ்பெற்ற நிறுவனங்களே தங்களது தேசிய சான்றிதழ்களை உலக அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களோடு ஒப்பிடும் போது மதிப்பு குறைந்து போட்டிகளை மேற்கொள்ள இயலாமல் போய்விடுகிறார்கள்.

தனியார்மயமாதல்

இது வரையிலும், தனியார்மயமாதலின் தாக்கம் அனைத்து துறைகளிலும், குறிப்பாக பொருளாதாரத்தில் ஊடுருவி வருகின்றது. இது கல்வி துறையின் எல்லையையும் பாதிப்படைய செய்கிறது. வளங்களின் போதாமையால் கல்வி அமைப்பு விரிவையும், ஜனநாயகத்தின் மீதான மக்களின் அவாவையும் சந்திப்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே கல்வியை தனியார் துறையில் இணைத்தால் கல்விக்கான நிதி சுமையை தனியார் துறை, மாநிலத்தோடு சேர்ந்து பங்கெடுத்துக்கொள்ளும் என உணர்கின்றனர்.

கல்வியில் தனியார்மயமாதலின் கருத்து

உலகம் முழுவதும் தனியார்மயமாதலின் வேகம் கடுமையாக உள்ளது. பொருளாதாரத்தில் அதிக பகுதிகள், குறிப்பாக உள்கட்டமைப்புள்ள பகுதிகளில் பொதுத்துறையின் உரிமையை உடைப்பதே இதன் நோக்கமாகும். பகிரங்கமாக தனியார் நிறுவனங்கள் பொது துறையை சொந்தமாக்கி கொள்வதிலேயே தனியார்னயமாதலின் சாராம்சம் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளை கூட்டு முயற்சியில் தனியாருக்கு சொந்தமாக்குவதில் இது ஒட்டு மொத்த தனியார்மயமாதலாய் உள்ளது. இந்த கருத்து குறுகிய எண்ணங்களை பயன்படுத்தினாலும், சிறிதளவு தனியரருக்கு சொந்தமாவதிலேயே இது பரந்த எண்ணம் கொண்டுள்ளது. தனியார்மயம் என்பது பொது நிறுவனங்களை கட்டுபடுத்தி தனியார் மேலாண்மையை அறிமுகப்படுத்துகிறது.

கல்வியில் தனியார்மயமாதலின் கூறுகள்

கல்வியில் தனியார்மயமாதலின் முக்கிய கூறுகள் வருமாறு

கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன்களை தனியார் துறையில் நிறுவுதல், அதாவது பள்ளிகள், கல்லூரிகள், பல்நுட்பங்கள், ஆராய்ச்சி கூடங்கள், விவசாயத்தின் தொழில் முறை கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், மேலாண்மை நிறுவன அதிகாரம், இவை அனைத்தும் தனியாளிடம் முழுத் தொகையை அறிமுகப்படுத்துவதால் மாணியங்கள் திரும்ப பெறப்படுகின்றன. ஒரு மேலாண்மைக்கு உரிமை அளிப்பதோ, ஒரு படிப்பை ஆரம்பிப்பதோ அல்லது நிறுத்துவதோ வர்த்தகத்தின் பொறுப்பில் உள்ளது. கல்வி நிறுவனங்களின் வெளியீட்டை பயன்படுத்துவோரின் சம்மதத்தோடு கல்விக்கான நிதி வழங்கப்படுகிறது

கல்வி அமைப்பில் தனியார்மயமாதலின் தாக்கம்

உயர்நிலை, மேனிலை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பொது துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிலையில் மாநில வளங்களின் போதாமையால் கல்வி அமைப்பு விரிவடைய மக்களின் மீதான ஜனநாயக அவாவை சந்திப்பது மிகவும் கடுமையாக உள்ளது, ஏனென்றால் கல்வி துறையில் உள்ள நிதி பற்றாக்குறை மற்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளின் பற்றாக்குறையோடு போட்டி போடுகிறது. எனவே, கல்வியை தனியார்துறையில் இணைத்தால் கல்விக்கான நிதி சுமையை மாநிலத்தோடு தனியார் துறையும் பங்கெடுத்துக்கொள்ளும் என்பதை உணர வேண்டும்.

இரண்டாவதாக, உலகம் முழுவதிலும் அறிவின் எல்லைகள் விரைவான வேகத்தில் விரிவடைகிறது, பொருளாதார வளர்ச்சியில்லாதவர்கள் அறிவின் பெருக்கத்தை வேகத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய அறிவின் பெருக்கம் இரண்டு வகையில் பிரிக்கப்படுகிறது ஒன்று, பொருளாதார அளவில் வசதி படைத்தவர்கள், வேகமாய் நகர்ந்து அறிவை திறம்பட பயன்படுத்தி கொள்கின்றனர், மற்றொன்று பொருளாதார வசதி இல்லாமல், நிதானமாய் நகர்வோரால் இது முடிவதில்லை என்பதை உலக வங்கி வலியுறுத்துகிறது. எனவே, வளர்ச்சியின் செயல்முறைகளில் கல்வி அல்லது அறிவின் தொழில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

இப்படி இருப்பதால், கல்வியை ஒரு சமூகசேவையாக இனி பார்க்க முடியாது, இது பொருளாதார உள்ளீட்டின் அவசியமாக கருதப்படுகறது. கல்வியில் முதலீடு செய்வது என்பது மனிதவள மேம்பாட்டுக்கு பங்களிக்கும் காரணியாக உள்ளது. எனவே, மனிதவள மேம்பாட்டின் சார்பாக இந்த முயற்சிகள், அறிவின் தொழிலில் தனியார் துறைகளை, பெரிய பயனாளிகளாக்க எதிர்பார்க்கின்றன.

வாழ்நாள் முழுவதும் கற்றலின் காரணிகள்

வாழ்நாள் கற்றல் (பேச்சு வழக்கில்) என்பது நடந்துகொண்டிருக்கிற, தன்னார்வ, சுயஉந்துதல், சுயதொழில்துறையின் அறிவின் நோக்கமாய் உள்ளது. இது சமூக உள்ளடக்கம், நல்ல குடிமகனின் சுய வளர்ச்சியை மட்டும் அதிகரிக்காமல் சுய நிலைத்தன்மை, போட்டி மனப்பான்மை, வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. பரவலாக இந்த வார்த்தையின் விளக்கம் பல்வேறு சூழல்களில் அடிக்கடி தெளிவில்லாமல் பயன்படுத்தப் படுகிறது, வாழ்நாள் கற்றல் என்பது சுயஇயக்க கற்றலின் அனுகுமுறையை பயன்படுத்தி விளக்கபடுவது ஆகும்.

வாழ்நாள் கற்றலின் தேவையும் முக்கியத்துவமும்

 • வீட்டுக் கல்வி கற்பதற்காக கற்றல் அல்லது முறைசாரா கற்றல் வடிவங்களை வளர்க்க இது ஈடுபடுகிறது.
 • வால்டார்ப் கல்வி, தனக்கான கற்றலை நேசிக்க குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது.
 • வயது வந்தோர் கல்வி என்பது முறையான தகுதியை கையகப்படுத்துதல் அல்லது வாழ்க்கையின் பிற்காலத்திய ஓய்வுக்கான திறன்கள் ஆகும்.
 • தொடர்கல்வி அடிக்கடி நீடிப்பை விளக்கும் அல்லது உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் கடனில்லா பாடங்களை அளிக்கும். அறிவின் சேவை என்பது தொழில் சார்ந்த வளர்ச்சியையும், வேலையில் பயிற்ச்சியையும், உள்ளடக்கியதாகும்.
 • சுய கற்றலின் சூழல்கள் இணைய விண்ணப்பம் அடங்கிய கருவிகளை பயன்படுத்துகிறது.

இணையவழி கல்வியின் கருத்து

அதிகமாக, கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சுதந்திரமான தனியாள் கற்றலுக்கு தேவையான இணையவழிக் கல்வி கிடைக்கிறது. இந்தியாவில் கல்வித்துறை என்பது வெகுவாக வகுப்பறைகளோடு பிணைக்கப்படுவதில்லை. புதிய தொடக்கமான உயர் இணையம், கைப்பேசி ஊடுருவல், இணையவழி கற்றலுக்கான இடம். இவை அனைத்தும் இந்தியாவில் இணையவழி கற்றல், பள்ளிகளில் சமநிலை, கல்லூரி சார்ந்த பாடங்கள் அதனோடு மத்திய நிலை தொழில்முறை பாடங்களின் மேல் கவனம் செலுத்துகிறது.

இணையவழி கல்வியின் தேவையும், முக்கியத்துவமும்

இணையவழிக் கற்றல் என்பது மாணவர்களுக்கு சரியான பாடங்களிலும், உள்ளடக்கங்களிலும், கவனம் செலுத்த உதவும் நோக்கமாய் இருக்க வேண்டும். மாறாக பல்வேறு ஊடகங்களில் கடல் போல கிடக்கும் பாடப்பொருள்களில் கண்மூடித்தனமாய் நீந்துவதாக உள்ளது. இதனோடு, வசதி சார்ந்த பயிற்சியையும் இணையவழிக் கற்றல் நோக்குகிறது. ஏனென்றால், இணைய வழித்திறன்களில் மாணவர்கள் பாடங்களை எந்நேரமும், எவ்விடத்திலும் அணுகிக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்கால கல்வி இணையவழி பாடத்தையே சார்ந்திருக்கபோகிறது. பல நிறுவனங்களில் இணைய வழிப்பாடம் இலவசமாகவும் அளிக்கப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

2.88461538462
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top