பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி திட்டம்

கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வட்ட அளவிலான, சிறப்பான 6000 மாதிரி பள்ளிகள் அமைப்பதற்கான திட்டம்

2007 சுதந்திர தின உரையில் நமது பிரதமர் கூறியதாவது:

மாநில அரசாங்கம், கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வளமான, முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு, கல்வியே அடித்தளமாக அமைகிறது. மாநிலங்களில் அதிகரித்து வரும் வருவாயால் நிதி நிலைமை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இப்பொழுது மாநிலங்கள் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த நோக்கில், நமது அரசு, நல்ல தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தரம் வாய்ந்த 6,000 கல்வி நிலையங்களை, நாட்டிலுள்ள, வட்டத்திற்கு ஒன்றாக நிறுவப்படும். அப்படிப்பட்ட கல்வி நிலையம், அப்பகுதியில் உள்ள ஏனைய பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

பின்னனி

10வது திட்ட காலத்தில், உயர்நிலை கல்விக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஒரு சில திட்டங்கள், உயர்நிலை கல்வியை உயர்த்துவதாகும், எளிதில் கிடைக்கப்பெறுவதாக  இருந்தாலும் வெகுவாக உயர்நிலை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. MHRD போன்ற தன் ஆளுகைக்கு உட்பட்ட நிறுவனங்களால் நடத்தப்பெற்ற பள்ளி திட்டங்கள், ஊனமுற்றோர், தங்கும் விடுதி வசதியுடன்கூடிய பெண்கள் கல்வி, வேலைசார்ந்த மேல்நிலை கல்வி, மேலும் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி போன்றவைகளை ஒருங்கிணைப்பது போன்ற திட்டங்கள் செயல்பட்டு வந்தன.  தொடக்க நிலை கல்வியை பொதுவாக ஆக்க வேண்டியது அரசியல் சாசனத்தின் கட்டளை ஆவதால், இந்த பொது தன்மையை உயர்நிலை கல்விக்கும் எடுத்து செல்ல வேண்டும். இந்த உயர்நிலை கல்வியில் பொது தன்மையானது, வளர்ந்த மற்றும் சில வளர்கின்ற நாடுகளில் ஏற்கனவே சாதிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை கல்வியில் குறிப்பாக அறிவியல், வணிகவியல் மற்றும் வேலை சார்ந்த கல்வி ஆகியவற்றில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் கற்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேந்திர வித்யாலயா போன்ற தரம், நெறி அமைப்பு, கட்டிடங்கள் உள்ள பொது கல்வி நிலையங்கள் நிறுவுவதற்கு மாநில அரசானது முதலீடு செய்ய வேண்டும்.

மாதிரிபள்ளியின் நோக்கம்

அடிப்படையில் மாதிரிபள்ளிகள் கேந்திர வித்யாலயா போன்ற உள்அமைப்பு மற்றும் அந்நிலையங்களின் தர அளவிற்கான வசதிகளை கொண்டு இருக்கும். முக்கியமாக மாணவர் அசிரியர் விகித நிபந்தனை, ICT உபயோகம், புனிதமான கல்வி சூழ்நிலை தேவையான பாடத்திட்டம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மாதிரி பள்ளிகளின் முக்கிய அம்சங்களாவன:

 • மாதிரி பள்ளி கல்வியானது தூய்மையானதாகவும், மற்றும் கல்வியுடன் சேர்ந்து உடல்வளம், மனவளம், மற்றும் மகிழ்ச்சியை, முன்னேற்றகூடிய ஒருங்கிணைந்த கல்வியாக இருக்க வேண்டும்.
 • புதிய கல்வி நிலையங்களோ அல்லது இருக்கும் கல்வி நிலையங்களையோ மாதிரி பள்ளியாக மாற்றி அமைக்கலாம்.
 • படிப்பிப்பதற்கு மட்டுமல்லாமல்லாமல், விளையாட்டு மற்றும் ஏனைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் உள் அமைப்பு வசதிகளுடன் மாதிரி பள்ளி விளங்கும். விளையாட்டு கேளிக்கை, மற்றும் வெளி அரங்கு செயல்களுக்கும் போதுமான ஊக்கம் அளிக்கப்படும். விளையாட்டு திடல், தோட்டம் மற்றும் அரங்கம் ஆகிய வசதிகளை கொண்டதாக மாதிரி பள்ளிகள் இருக்கும்.
 • பாடத்திட்டமானது, வட்டார பண்பாடு மற்றும் சூழ்நிலைகளை வளர்ப்பதாக அமையும். மேலும் செயல்முறை சார்ந்து கற்பதாக அமையும்.
 • இப்பள்ளிகள் போதுமான ICT உள்அமைப்புகளையும் வளைதல இணைப்புகளையும் மற்றும் முழுநேர கணினி ஆசிரியர்களை கொண்டதாக இருக்கும்.
 • ஆசிரியர் மாணவர் விகிதமானது 1:25 ஆகவும், 30 மாணவர்களுக்கு போதுமான இடத்தை உடையதாகவும் இருக்கும். எனினும் ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்களுக்கு மேல் இருக்காது.
 • இப்பள்ளிகளில், பாட ஆசிரியர்கள் அல்லாமல் கலை மற்றும் இசை ஆசிரியர்களும் இருப்பார்கள். மேலும் இக்கல்வியானது இந்திய பண்பாடு மற்றும் கலை, கைத்தொழில் ஆகியவற்றை போதிப்பதற்கான வசதிகளை கொண்டதாக இருக்கும்.
 • அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தேவையென்றால் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிதிட்டம் அளிக்கப்படும்.
 • கல்வியின், பாட திட்டமானது தலைமை வகிக்கும் பண்புகளை கற்பிப்பதாகவும், குழுபற்று, பங்களிக்கும் திறன், மென்திறன் மேம்பாடு மற்றும் சமுதாய இன்னல்களை எதிர்கொள்ளும் திறம் ஆகியவைகளை வளர்ப்பதாகவும் இருக்கும்.
 • உடல் நல கல்வி மற்றும் உடல் நிலை சோதனைகளை இப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
 • புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் கொண்ட நூலகம், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இப்பள்ளியில் வழங்கப்படும்.
 • கல பயணம்  மற்றும்  கல்விச்சுற்றுலா பாடத்திட்டத்தில் ஒருகிணைந்த ஒன்றாக இருக்கும்.
 • இப்பள்ளிகளில் மாநில அரசு, பயிற்று மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.  எனினும் ஆங்கிலம் பயிற்றுவிப்பது மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 • இந்தப் பள்ளிக்கான அங்கீகாரத்தை மாநில அரசானது குறிப்பிட்ட தேர்வு மையத்திற்கு ஒப்படைக்கலாம்.
 • தனிப்பட்ட தேர்வு முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 • மாநில அரசின் ஆலோசனையின்பேரில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 • மாதிரி பள்ளியானது தகுந்த வரையறுக்கப்பட்ட செயல்முறைகளை கொண்டு அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிகளுக்கு உதவ வேண்டும்.
நிறுவுதல்:

6000 மாதிரி பள்ளிகளில், 2500 மாதிரி பள்ளிகள் கல்வியால் பின்தங்கிய வட்டங்களில் நிறுவப்படும். மேலும் 2500 பள்ளிகள் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு முறையில் நிறுவப்படும். மீதமுள்ள 1000 பள்ளிக்கான நிறுவு முறையை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மாநில அரசால்,கேந்திர வித்யாலயா அமைப்பில், நிறுவப்படவுள்ள2500மாதிரிபள்ளிகள்
இடம்: இப்பள்ளிகள், கல்வியால் பின்தங்கப்பட்ட வட்டங்களில் அமைக்கப்படும்.
நிலம்:பள்ளிகளுக்கான நிலத்தை, மாநில அரசு கண்டுபிடித்து இலவசமாக வழங்கும்.
பள்ளிகளின் தேர்வு:இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது மாநிலவாரியான மாதிரி பள்ளியின் எண்ணிக்கையை வழங்கும். இதன் பின்னர், மாநில அரசானது புத்தம் புது பள்ளியையோ அல்லது நடைமுறையில் இருக்கும் பள்ளியையோ மாற்றி, மாதிரிபள்ளியை நிறுவலாம்.
பயிற்று மொழி:இப்பள்ளிகளில் மாநில அரசு, பயிற்று மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.  எனினும் ஆங்கிலம் பயிற்றுவிப்பது மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வகுப்புகள்:இப்பள்ளிகள் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பின் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உடையதாகவும், ஒரு வகுப்பில் இரண்டு பிரிவுகளை உடையதாகவும் இருக்கும். இப்பள்ளியில் பயிற்று மொழி மண்டல மொழியாக இருப்பின், 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உடையதாக இருக்கும்.
மேலாண்மை: இப்பள்ளிகள் கேந்திர வித்யாலயா குழுமத்தை (KVS) போன்று மாநில அரசின் குழுமத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும்.
கட்டுமானம் :

 • பள்ளி கட்டிடங்களை மாநில குழுமங்கள் கட்டும்.
 • கட்டுவதற்கான விதிமுறைகளை KVS / மாநில பொதுப்பணித்துறை வழங்கும்.
 • பள்ளி கட்டிடங்களை தனியார் பங்குதாரர் மூலமும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசானது கட்டலாம்.

மாணவர்சேர்க்கை:

 • KV-ல் இருக்கும் நுழைவு தேர்வு போலவே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாநிலங்களில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறையில் மாணவர்களை சேர்க்கலாம்.
 • பள்ளி கட்டிடங்கள், பூகம்பத்தை எதிர்கொள்ள கூடியதாகவும், தீபாதுகாப்பு முறைகளை உடையதாகவும் இருக்கும்.
 • சூரிய சக்தி மற்றும் ஏனைய புதுபிக்க வல்ல சக்தியினை உபயோகப்படுத்துவதற்கு ஊக்கம் அளிப்பதாகவும், மேலும் இவைகளை உபயோகிக்க தகுந்தவாறு கட்டிடங்களை வடிவமைக்கலாம்.
KV யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 2500 மாதிரி பள்ளிகளை நிறுவுவதில் மாநில அரசின் பங்கு
 • மாநில அரசாங்க பள்ளிகளை மாற்றி அமைத்தோ அல்லது புதிய பள்ளிகளை நிறுவியோ, மாநில அரசானது மாதிரி பள்ளிகளை செயல்முறைபடுத்தும்.
 • மாநில / யூனியன் பிரதேச அரசுகள், KVS போன்ற குழுமங்களை அமைத்து பள்ளிகளை நிர்வாகம் செய்ய வேண்டும்.
 • மாநில / யூனியன் பிரதேச அரசுகள் எங்கு பள்ளிகள் தேவையோ, அதற்கான நிலத்தை வழங்க வேண்டும்.
 • ஒவ்வொரு மாநிலமும், இப்பள்ளிகளை குறிப்பிட்ட காலத்தில் நிறுவதற்கு, நிறுவும் வரை திட்டத்தை வழங்க வேண்டும்.
 • KVS விதிமுறைகளின்படி இப்பள்ளிக்கு குறைந்தபட்ச நிலமானது வகுக்கப்படும். எனினும் நில பற்றாக்குறை இருப்பின், விதிமுறைகள் தளர்த்தப்படும்.
 • இப்பள்ளிகளானது, கல்வியால் பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்படும் குறிப்பாக ஷெட்டியூல்ட் V பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • நடைமுறை பள்ளிகளை மாற்ற இருப்பின் ஆசிரம பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • மாநில குழுமங்கள் இப்பள்ளிகளை நிறுவி நிர்வாகத்தை நடத்த இருப்பதால் இக்குழுமங்களுக்கு மாநிலத்தின் முதலீட்டு பங்கினை அளிக்க வேண்டும்.
 • பொது மற்றும் தனியார் பங்குதாரர் அமைப்பில் பள்ளிகள் நிறுவப்படுமேயானால், வருடா வருடத்திற்கான தொகையினை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சமவிகிதத்தில் அளிக்கும்.
 • மாநில அரசானது, வட்டம் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்களை அமைக்கும். மாநில அளவிலான கண்காணிப்பு அளவிலான, கண்காணிப்பு குழுவில் மத்திய அரசாங்கத்திலிருந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அரசாங்கமானது நிரந்தரமற்ற  நிலங்களை தேர்வு செய்து குழுமங்கள் அவ்விடங்களில் பள்ளிகளை நடைமுறைபடுத்தலாம்.
நிதி உதவி முறை

முதலீட்டில் 75% மத்திய அரசும், 25% மாநில அரசும் ஏற்று கொள்ளும். 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நடைமுறைக்கான தொகையை மத்திய அரசு மற்றும் மாநில அரசு, 75:25% விகிதத்தில் ஏற்றுக்கொள்ளும். 12வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் செயல்முறைக்காகும் தொகையை, 50:50 விகிதத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுகொள்ளும். சிறப்பு மாநிலங்களுக்கு விகிதம் 90:10 ஆக இருக்கம்.
KVS ஆனது KV அமைப்பில் VI - XII (ஓவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள்) வரை கொண்ட பள்ளியை நிறுவுவதற்க ரூ.3.02 கோடி ஆகும் என திட்டமிட்டுள்ளது. மேலும் வருடத்திற்கு ரூ.0.75 கோடி நடைமுறை செலவு ஆகும் என்று திட்டமிட்டுள்ளது.
இந்த கணிப்பானது இப்போதுள்ள செயல்முறை மற்றும் கட்டமைப்புக்கான செலவை பொறுத்ததாகும்.
KV, JNV மற்றும் மாநில பள்ளிகள் அமைப்பதற்கான செலவு CPWD அட்டவணையை பொறுத்ததாகும்.

சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி

உடல் ஊனமுற்றோர் விஷயத்தில் சமூகத்தின் கண்ணோட்டம் சமீபத்திய சில ஆண்டுகளில் மாறியிருக்கிறது. குறைகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கல்வி, தொழில் கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவை இவர்களுக்குக் கிடைக்கச் செய்தால் இவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டுவருகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, வாழ்வின் எல்லா கட்டங்களிலும் சராசாி குடிமக்களின் சம உரிமையுடன் இவர்களையும் இணைத்துக்கொள்ளுதல் அவசியமாகும்.

பயனுள்ள இனையதளங்கள்

http://www.ncpedp.org/

http://mhrd.gov.in/

http://nlm.nic.in/

http://www.ccdisabilities.nic.in/

http://nimhindia.gov.in/

http://socialjustice.nic.in/

http://www.ayjnihh.nic.in/

Filed under:
2.91208791209
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top