பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / குழந்தைகள் தொடர்பான திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகள் தொடர்பான திட்டங்கள்

குழந்தை மேம்பாட்டுக்கான அரசியலமைப்பு சட்ட உத்திரவாதம் மற்றும் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை மேம்பாட்டுக்கான அரசியலமைப்பு சட்ட உத்திரவாதம்

அரசியலமைப்பு சட்டத்தின் அரசுக் கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள் 21ஏ, 24 மற்றும் 39 வது பிரிவுகள் குழந்தைகளின் மேம்பாடு குறித்து உறுதி செய்துள்ளன.

பிரிவு21ஏ
கல்வி உரிமை
6 வயதிலிருந்து 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வியை சட்டப்படி அரசு வழங்குதல் வேண்டும்
பிரிவு24
தொழிற்சாலைகள் முதலிய இடங்களில்குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழிலாளர்களை தடைவிதித்தல்
எந்த ஒரு தொழிற்சாலையிலோ, சுரங்கத்திலோ அல்லது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் வேலையிலோ 14 வயதுக்கு கீழே உள்ள எந்த குழந்தையையும் வேலையில் சேர்க்கப்படக்கூடாது.

பிரிவு39
அரசு,குறிப்பாக
கீழ்க்கண்டவற்றை
பாதுகாக்கும் வகையில்
தனது கொள்கைகளை
வகுக்கும்
தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள்
மற்றும் பிஞ்சுப் பருவ குழந்தைகளின்
ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும்
ஊறு ஏற்படக்கூடாது.  தங்கள் வயதுக்கும்
உடல் திறனுக்கும் பொருத்தமில்லாத
தொழிலில், பொருளாதார நிர்பந்தம் காரணமாக ஈடுபடும்படி இவர்கள் கட்டாயப் படுத்தப் படக்கூடாது

குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974

குழந்தைகளுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்ய குழந்தை மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியம் என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 உருவாக்கப்பட்டது.  குழந்தைகளின் வெவ்வேறு தேவைகள் தொடர்பான முன்னுரிமைகளை தீர்மானித்து, ஒருங்கிணைந்த முறையில் அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த வழிவகைகளும் இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன.  தேசிய கொள்கையின் குறிக்கோள்களைக் கருத்திற்கொண்டு குழந்தைகள் மேம்பாட்டுக்கான மற்ற கொள்கைகளும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

3.11111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top