பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)

தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)

10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ / மாணவியர்க்கு 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்காக (போஸ்ட்-மெட்ரிக்) சிறப்பு உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்படி விடுதியில் தங்காது 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு ரூ.65 முதல் ரூ.125 வரையில் பராமரிப்புப்படி மற்றும் கட்டாயக் கட்டணங்கள், படிப்புக்கு ஏற்றவாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

விடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் மாதம் ஒன்றிற்கு ரூ.115 முதல் ரூ.280வரையில் படிப்பிற்கு ஏற்றவாறு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், இவ்வுதவித் திட்டத்தின் கீழ், தொழிற் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் பெற 10ம் வகுப்பு தேர்ச்சி தேவையில்லாத இனங்களும் போஸ்ட் மெட்ரிக் படிப்பாகக் கருதப்பட்டு, அதற்குரிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய  அரசு மற்றும் தமிழக அரசின் இக்கல்வி உதவித் தொகைகள் அந்தந்த கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவ / மாணவியர்க்கு வழங்கப்படுகிறது.

2.92
தனகோபி.க Jul 13, 2020 01:43 AM

எப்படி அப்ளை செய்யவது

சினேகா Dec 27, 2017 06:12 PM

மதிப்பிற்குரிய அய்யா ,
நான் இளங்கலை வகுப்பு பயின்று வருகிறேன் .நான் உதவி தொகைக்கு பதிவு செய்தும் உதவி தொகை பெற வில்லை .நான் என்ன செய்யவேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top