பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / பிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்

பிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டத் தொடக்கம்

மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் மூலம் செயல்படுத்த ஏதுவாக பள்ளித் தோட்டத்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தொடக்கி வைத்தார்.  இந்தியாவில், இத்திட்டம் முதலாம் ஆண்டு தொடக்கத்தில் ஆயிரம் பள்ளிகளிலும் மூன்றாம் ஆண்டு முடிவில் நாடெங்கிலும் உள்ள மற்ற அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

நோக்கம்

  • உலகின் மாசுபடும்விகிதம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை தடுப்பதற்கான முதல்வழி காடுவளர்ப்பதுதான். எனவே, மாணவர்களை இயற்கைக்கு நெருக்கமானவர்களாக உணரச்செய்வது முக்கியமென உணர்ந்து மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், பள்ளியானது தனது வளாகத்துக்குள் தோட்டத்தை ஏற்படுத்தும். அத்தோட்டத்தில் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மரக்கன்றுகளை வளர்க்கவேண்டும். சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் நாட்டை வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

செயல்படுத்தும் முறை

  • பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தை சூழலுக்கு இணக்கமானதாக மாற்றும் இத்திட்டத்தில் பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களும் ஊக்கத்துடன் பங்கேற்று அந்தப் பள்ளியில் இத்துறை சார்ந்த ஆர்வமிக்க ஆசிரியரின் கண்காணிப்பில் தரமான விதைகளைக் கொண்டு மரக் கன்றுகளை உருவாக்கி, பள்ளியைச் சுற்றியிலுள்ள பகுதிகளிலும் அந்தக் கன்றுகளைக் நட்டு மரம்வளர்ப்பார்கள்.
  • பள்ளி மாணவர்களை மரம் வளர்ப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் தேவைக்கும் அதிகமான மரங்கள் வளர்க்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பிரச்சனையும் ஓரளவு தீர்க்கப்படுகிறது. உயிரியல் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது பாடமாகவும் திகழும். இதன்மூலம் மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகத்திலிருந்து மட்டும் கற்காமல், செயல்மூலம் கற்கவும் தங்களது சுற்றுப் புறங்களின் மீதான பொறுப்புணர்வு அதிகரிக்கவும் இடமுண்டமாகும்.
  • எனவே, இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பள்ளியும் தங்களது வளாகத்தில் தோட்டத்துக்கென ஒரு சிறு பகுதியை ஒதுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்றையாவது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வளர்த்து, தங்களது ஆண்டறிக்கை தேர்வு அட்டையோடு, தாங்கள் வளர்த்த மரத்தையும் பெற்றோரிடம் காட்டி மகிழவேண்டும்
  • நெல்லி, வேம்பு, ஏலக்காய், மா உள்ளிட்ட மரங்களை வளர்க்க இத்திட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : இந்திய அரசு

2.95945945946
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top