பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / புதிய மகளிர் விடுதி திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதிய மகளிர் விடுதி திட்டம்

புதிய மகளிர் விடுதி திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கென விடுதிகளைக் கட்டுவது மற்றும் நடத்துவது தொடர்பான புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் விடுதிகள் பலப்படுத்தும் திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலில் இருந்த மாணவியர் விடுதித்திட்டத்தின் வாயிலாக விடுதிகளை நடத்துவதற்கான நிதியுதவியை மத்திய அரசு செய்துவந்தது. ஆனால் இப்புதிய திட்டத்தின் வாயிலாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கட்டடம் கட்டுவதற்கும் சேர்த்து நிதியுதவி வழங்கப்படும். கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பல்வேறு மாநிலங்களின் பல பகுதிகளிலும் இப்புதிய திட்டம் செயல்பட உள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் 100 பேர் வரை தங்கக்கூடிய 3500 விடுதிகள் புதிதாக கட்டப்பட உள்ளது. இது தவிர இங்கு தங்கிப் படிக்கும் மாணவியரின் பல்வேறு தேவைகளுக்கான நிதியுதவிகளையும் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயம் தரவேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் தீட்டப்பட்டுள்ள இத்திட்டத்தின் வாயிலாக மாணவியர் உயர்நிலைப்பள்ளி வரை படிப்பது சுலபமாக்கப்படும். குறிப்பாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த மாணவியர் நலம் கருதியே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இப்பிரிவுகளைச் சார்ந்த மாணவியர் தகுந்த சான்றிதழ் மூலமாக இந்த மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு எளிதாக அனுமதி பெற வழி செய்யப்பட்டுள்ளது. இவ்விடுதிகளில் தங்கும் மாணவியரில் குறைந்தது 50 சதவீதத்தினர் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் உள்ளது.

இடவசதிகளைப் பொறுத்து இந்த மாணவியர் விடுதிகள் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயங்களில் அமையும். ஒருவேளை இங்கு இடமில்லாவிட்டாலோ, தேர்வுசெய்யப்படும் மையங்களில் கஸ்தூர்பா அமைப்பு இல்லாவிட்டாலோ, மாநில அரசு தேர்வு செய்யும் செகண்டரி அல்லது ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் இந்த மாணவியர் விடுதிகள் நிறுவப்பட உள்ளன. கஸ்தூர்பா வித்யாலயா ஸ்கூலில் படித்து வெளிவரும் மாணவியருக்கு இந்த ஹாஸ்டல்களில் முன்னுரிமை உண்டு.

இந்த மாணவியர் விடுதிக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.80 கோடி தொகையானது 200809 ஆண்டு பட்ஜெட்டில் நிதியாக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான செலவுகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையே 90க்கு 10 என்ற விகிதத்தில் பொறுப்பேற்கும். இந்த நிதியாண்டிலிருந்தே இந்த மாணவியர் விடுதித்திட்டம் செயல்படத் துவங்கவுள்ளது.

ஆதாரம்: தினமலர்

3.05128205128
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top