பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்

பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் பற்றிய குறிப்புகள்.

ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்திடும் நோக்கத்தோடு “பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகள் 60,000 பேருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் ஆதிதிராவிட மாணவிகளைப் பொறுத்த வரையில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளைப் பொறுத்த வரையில் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

6 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவியர் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் 30,000 ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவியர்க்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100வீதம் 10 மாதங்களுக்கு சென்னையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆதாரம் : தினமலர் கல்விமலர்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top