பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டமானது இந்தியக் கல்வி முறையில் திட்டமிடல் மற்றும் பல்வேறு தேசிய திட்டங்கள், மாவட்ட அளவிலான நிகழ்வுகள், வெளியிலிருந்து பெறப்பட்ட நிதியுதவி திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலின்போது பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கருத்தாழமிக்க செயல்பாட்டு நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1994 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உலகின் கல்வித் திட்டங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். இத்திட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற இலக்கை அடைவதாகும்.

இத்திட்டம் மாவட்டத்தின் தேவைக்கான திட்டமிடல், பரவலாக்கப்பட்ட மேலாண்மை, பங்கேற்பு செயல்முறைகள், அதிகாரம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை அனைத்து நிலைகளிலும் அளிப்பதை முக்கியத்துவமாக கொண்டுள்ளது. இத்திட்டம் தொடக்கக் கல்வி முறையை மேம்படுத்தி உயர் தொடக்கக் கல்வியின் நோக்கத்தை அடையும் பெரும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. DPEP (நிலை 1) திட்டமானது ஒரு மைய அரசு திட்டம் ஆகும். இத்திட்டம் முதலில் உலக வங்கி உதவியுடன் 5 மாநிலங்களில் தொடங்கப்பட்டு பின்னர் பிற மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் 5 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டமாகவும் பெண் கல்வியில் தேசிய விகிதத்தை விட மாநில விகிதம் குறைவானதாகவும் குறிப்பு இருத்தல் வேண்டும். இவற்றில் கற்பித்தல் கற்றல் மையங்கள் (TLC) சிறப்பாக செயல்பட்டு தொடக்கக் கல்வியின் தேவையை மேம்படுத்துவதாக செயல்பட்டன.

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டத்தின் நோக்கங்கள்

மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் தன் அறிக்கையில் குறிப்பிட்ட நோக்கங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய நோக்கங்கள் தொகுத்து பின்வருமாறு அளிக்கப்பட்டுள்ளன.

 • முறை மற்றும் முறைசாரா கல்வி மூலம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கல்வியைப் பெறுதல். 100% சேர்க்கை மற்றும் தக்கவைத்தல்.
 • தரமான கல்வியின் மூலம் குழந்தைகள் குறைந்தபட்ச கற்றல் இலக்கை அடைதல். பள்ளிகளில் தேக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் இடைநிற்றலை குறைத்தல்.
 • ஆசிரியர்களுக்கும், சமூகத்தினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், அதிகபட்ச பரவலாக்குதல், சமுதாய பங்கேற்பு, சமூகத்தின் ஒவ்வொரு அலகிலிருந்தும் பள்ளி வயது மாணவர்களை பள்ளியில் சேர்த்து சேர்க்கையை அதிகரித்தல்.

மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் முக்கியக் கூறுகள்

DPEP-யின் நான்கு முக்கிய கூறுகள் பின்வருமாறு

கட்டுமான பணிகள்

கட்டுமான பணிகளின் கீழ் புதிய பள்ளிகள் கட்டுதல் (இரண்டு வகுப்பறை மற்றும் வராண்டா அமைப்புடன்) 5ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்ட பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிப்பறை கட்டுதல், ஆழ்துளைக் கிணறு அமைத்தல், பள்ளி பராமரிப்பு மேற்கொள்ளல், குழு உண்டு உறைவிடப் பள்ளிகள், ஆசிரியர் குடியிருப்பு மற்றும் பெண்கள் விடுதி போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டன.

நிகழ்வு

முறையான கல்வி முறையில் கொண்டுவர இயலாத பள்ளி வசதிகளுக்கான சில மாற்றுமுறை அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தும் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் - இந்நிகழ்வின் அவசியமான கூறுகளுள் ஒன்றாக உள்ளன.

மேலாண்மை

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டமானது தெளிவான மேலாண்மை அமைப்புடன் இந்நிகழ்வை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துதலை வழிநடத்தும் வகையில் அமைக்கப்பட்டது. இதில் மேலாண்மை தகவல் அமைப்பை உருவாக்கி செயல்பாடுகள் நுணுக்கமாக மேற்பார்வை செய்யப்பட்டதுடன் நிதிகள் சரியாகவும் வேகமாகவும் பயன்படுத்தப்பட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இந்த அமைப்பு தேசிய, மாநில, மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டது. இந்த புதிய அமைப்புகள் மாவட்டத் திட்டத்திற்கு உதவியாக இருந்ததுடன் நடைமுறையில் உள்ள நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து செயல்திட்ட காலம் முடியும் வரை செயல்படுவதாக அமைக்கப்பட்டன.

பள்ளி வரைபடம் மற்றும் நுண்திட்டமிடல்

நுண் திட்டமிடல், தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கையில் உள்ள இடர்ப்பாடுகளை கண்டறியவும், சமுதாயப் பங்கேற்பையும் நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்முறை ஆகும். மேலும் இது இடர்ப்பாடுகளைக் களைந்து தீர்வு பெற சமுதாயத்தின் ஆதரவைப் பெறுகிறது. கிராமக் கல்வி குழுவின் தெளிவான பங்கையும், பொறுப்புகளையும் நிர்ணயிப்பதில் நுண் திட்டமிடல் உதவுகிறது. இந்த கிராமக் கல்விக் குழுக்கள் கிராம கல்வி அமைப்பை மேற்பார்வை செய்து சேர்க்கை மற்றும் தக்கவைத்தலில் முன்னேற்றம் அடைவதில் சிறப்பான பங்கை அளிக்கின்றன.

மாவட்டத் தொடக்க கல்வித் திட்டத்தின் செயல் திட்டம்

தேசிய அளவிலான நிறுவனங்கள் மாநில, மாவட்ட அளவில் தொழில் சார்ந்த உதவியை அளித்து பரவலாக்கப்பட்ட திட்டமிடல் சிறப்பாக செயல்படுத்தப்பட முயற்சியை மேற்கொண்டன. மாவட்டத் தொடக்க கல்வித் திட்டம் பரவலாக்கப்பட்ட கருத்துகளை நடைமுறைப்படுத்தப் பல்வேறு படிநிலைகள் மூலம் மிகுந்த சிரத்தையை மேற்கொண்டது.

இத்திட்டம் பரவலாக்கப்பட்ட கல்வித் திட்டமிடலை தோற்றுவிக்க மாவட்டத்தை ஒரு அலகாக கண்டறிந்தது. மேலும் இத்திட்டம் மாநில அளவிலிருந்து உள்ளூர் அளவிற்கு வளங்களை மாற்றுவது குறித்த முயற்சிகளை மேற்கொண்டது. திட்டமிடல் செயல் முறையை வலுப்படுத்தும் வகையில் ஆலோசனை, பங்கேற்பு, வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதில், DPEP முயற்சியை மேற்கொண்டது. இத்திட்டம் கல்விசார் செயல்பாடுகளுக்கான தொழில் வளங்கள் சார்ந்த உதவியை அளிப்பதற்கான முயற்சியை புதிய நிர்வாக அமைப்புகளான வட்டார வள மையம் மற்றும் குறுவள மையம் வாயிலாக மேற்கொண்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் உத்தேச செலவினத் தொகை மானியமாக ரூ.2000/-மும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.500/-ம் ஆண்டுதோறும் வழங்க முனைப்பை மேற்கொண்டது. திட்டமிடல் செயல்முறைகள் மூலம் மாவட்ட மற்றும் உபமாவட்ட அளவில் போதுமான உள்ளூர் வளங்களை தோற்றுவிப்பதில் முயற்சி மேற்கொண்டது.

உத்திகள் மற்றும் செயல்பாடுகள்

எளிதில் அணுக வாய்ப்பு மலைவாழ்ப் பகுதிகளில் புதிய முன்பருவப் பள்ளிகள் (L.P. Schools), திறத்தல், எளிதில் சென்றடைய இயலாத மலைப்பகுதிகளில் பல்வகுப்பு கற்றல் மையங்களையும், எளிதில் சென்றடைய இயலாத மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மாற்றுப் பள்ளிகளையும் திறத்தல் (மலைவாழ்/கடலோரப் பகுதி) மலைவாழ் மற்றும் கடலோர பகுதி மக்களுக்கான கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஊராட்சியின் உதவியுடன் மலைவாழ் குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை பிரச்சாரம், விலையில்லா பாடப்புத்தகங்கள், வழங்குதல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளல்.

தர மேம்பாடு

செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி வழங்குதல். குறிப்புகள் ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிப் பார்வை மேற்கொள்ளும் போதும் மாதாந்திர குறுவள மையக் கூட்டத்தின் பொழுதும் கள உதவி வழங்குதல். திறன் வாய்ந்த ஆதி திராவிடர்/ பழங்குடியின மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குதல், செயல்பாடுகள் வங்கி, ஆசிரியர் கையேடு போன்ற ஆசிரியருக்கு துணைபுரியும் பொருள்களை வழங்குதல், மாதாந்திர வகுப்புகள் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் சகவாசா முகாம் போன்றவற்றின் மூலம் ஆசிரியர்களுக்கு கள உதவி அளித்தல்.

சமூக பங்கேற்பு

கிராமக் கல்விக்குழு, ஊராட்சி மேற்பார்வை தனிப்பிரிவு போன்றவற்றை உருவாக்கல், ஊராட்சி மேற்பார்வை தனிப்பிரிவு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், பெற்றோர்களுக்கான அறிமுகப் பயிற்சி வழங்குதல் மூலம் சமூக பங்கேற்பை உறுதி செய்தல்.

ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு

செயல் ஆய்வு, வட்டார வள மையம் மற்றும் மாவட்ட அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

திட்டமிடல் மற்றும் மேலாண்மை

 • பள்ளி அடிப்படையிலான திட்டமிடல்,
 • பங்கேற்பு முறையிலான ஆண்டுத்திட்டம் தயாரித்தல்,
 • வட்டார ஆலோசனைக்குழு கூட்டங்கள், மாவட்ட ஆலோசனைக் குழு மற்றும் மாவட்ட செயலாக்கக் குழு போன்றவைகளுக்கான அறிமுகப் பயிற்சி வழங்குதல்.
 • இயலாக் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் கல்வி அளித்தல்
 • இயலாக் குழந்தைகளை கண்டறிதல்
 • அக்குழந்தைகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குதல்
 • ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
 • பெற்றோர்களுக்கான அறிமுகப் பயிற்சி
 • மக்கள் பிரதிநிதிகளை கண்டறிதல்

பெண் கல்வி

 • பெண் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்
 • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளல்
 • ஆசிரியர்களுக்கு உணர்திறன் பயிற்சி வழங்குதல்

தொலைதூரக் கல்வி

 • தொலைத்தொடர்பு கருத்தரங்கம் மற்றும் தொலைதூரக் கற்றலுக்கான கற்றல் பொருள்கள் வழங்குதல்.

ஊடகம்

 • மாவட்ட மற்றும் வட்டார அளவிலான செய்திமடல் வெளியிடல்
 • மாவட்ட மற்றும் ஊராட்சி அளவிலான கண்காட்சி நடத்துதல்

மேலாண்மை தகவல் அமைப்பு

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் செயல்படும் மாவட்டங்களுக்கும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கும் கணினிகளையும், தொலைத்தொடர்பு வலை இணைப்பையையும் வழங்குதல். கணினி ஆய்வாளர் மற்றும் தயாரிப்பாளர் தரவு. ஒவ்வொரு வருடமும் பள்ளி தகவல்களை புதுப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் மேலாண்மை தகவல் அமைப்பானது செலவின அறிக்கை சார்ந்த தரவுகளை உருவாக்கி தனது மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கிராமக் கல்விப் பதிவேடு மற்றும் தக்கவைத்தல் பதிவேடு

கிராமக் கல்வி பதிவேட்டில் கிராமத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையின் கல்வி நிலை குறிப்பிடப்பட்டிருக்கும். தக்கவைத்தல் பதிவேட்டில், ஒரு பள்ளி அல்லது வகுப்பின் தக்கவைத்தல் வீதம் கணக்கிடப்பட்டு குறிக்கப்பட்டிருக்கும். அதாவது, எத்தனை குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர் என்பதும் எத்தனை குழந்தைகள் பாதியிலேயே நின்று விட்டனர் (இடைநிற்றல்) என்பதையும் அறிய தக்கவைத்தல் பதிவேடு பயன்படும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டம்

குழந்தைகளின் இடம் மற்றும் சிறப்புத் தேவைகளின் அடிப்படையில் எல்லா இடங்களிலும் கல்வி தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படுவதே அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டம் என்பதாகும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்தின் தாக்கம்

இந்த அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டமானது செயல்பாட்டு நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் அடிப்படையில் ஒரு தேசிய மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தியதோடு மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் நடைமுறையில் உள்ள மாவட்டங்களில் எந்த அளவிற்கு தேசிய எழுத்தறிவு இயக்கம் சென்றடைந்துள்ளது என்பதையும் மதிப்பீடு செய்ய சூழ்நிலை ஆய்வினை மேற்கொண்டது.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தினை ஒப்பீடும் செய்தது. இந்த பகுப்பாய்வானது மாநிலக் கல்வி இயக்ககம் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டத்தின் கீழ் உருவான கல்வி மேலாண்மை தகவல் மையத்திலிருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலை ஆதாரத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி திட்டத்தின் மூன்று கூறுகள்

 • அனைவரும் எளிதில் அணுகல் மற்றும் சேர்க்கை
 • வருகைப்பதிவு மற்றும் தக்கவைத்தல்
 • தரமான கல்வி

மொத்த மாணவர் சேர்க்கை வீதம் என்பது ஒரு தொடர்புடைய கூறாகும். முதன்மை மொத்த மாணவர் சேர்க்கை என்பது எத்தனை மாணவர்கள் வயது வேறுபாடின்றி தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது பள்ளி வயதுக் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் தொடர்புடையது என்பதைக் குறிக்கிறது.

மொத்த மாணவர் சேர்க்கை வீதத்தின் மதிப்பானது 100 சதவீத்தத்தை தாண்டலாம். 100 சதவீதத்தைத் தாண்டி என்ற மதிப்பானது தொடக்கப் பள்ளியில் சில குழந்தைகள் தொடக்கப் பள்ளி வயதிற்கு மேலும் அல்லது கீழும் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. பொதுவாக மொத்த மாணவர் சேர்க்கை வீதம் என்பது பள்ளி வயதைவிட அதிக வயதுடைய மாணவர் சேர்க்கை ஆகும். எடுத்துக்காட்டாக தக்கவைத்தல் அல்லது தாமதமாக பள்ளியில் சேருதல் என்பதைக் குறிக்கிறது.

தொகுப்புரை

இந்தியக் கல்வி முறை தடுமாற்றங்களுடன் மிகப்பெரியதாக உள்ளது. இது 2011ல் 121 பில்லியன் மக்கள்தொகையில் 300 மில்லியன் மாணவர்கள் மற்றும் 6.5 மில்லியன் ஆசிரியர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய நாடாக உருவாகியது. மாணவர் சேர்க்கையானது 100 சதவீதத்தைத் தொட்டு 120 மில்லியனுக்கும் மேலான குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தால் பயனடைந்தனர். மேலும் எழுத்தறிவு சதவீதமானது 65%-லிருந்து 75% வரை உயர்ந்தது. கல்வி முன்னேற்றம் சிறந்த வாழ்வின் வாயிலாக உள்ளது.

உத்திரப்பிரதேச ஆதாரக் கல்வித் திட்டம், தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பீகார் கல்வித் திட்டம், பெண் கல்விக்கான லோக் ஜும்பிஷ் (Lok Jumbish) ஆசிரியர் வருகை புரியாமைக்கான சிக்ஷா காமி குறிப்புகள் (Shiksha Karmi) போன்ற பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் பல்வேறு உத்திகள் பயன்படுத்தி அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1990ஆம் ஆண்டின் இடையில் பெண் குழந்தைகளின் எழுத்தறிவு வீதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கக் கல்விக்கான பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் சமுதாயப் பங்களிப்பின் மூலம் பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கும் புதிய துவக்கமாக இத்திட்டம் அமைந்தது. மக்கள் பங்களிப்பின் மூலம் பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக கிராமப்புறம் வரை இத்திட்டம் சென்றடைந்தது. கிராமக் கல்வி குழுவானது பல்வேறு மாவட்டங்களில் நூறு சதவீத கிராமங்களை இத்திட்டத்தில் கொண்டு வந்தது. இத்தகைய நேர்மறையான மாற்றங்கள் மூலம் விரைவில் அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்ற இலக்கை இந்தியா எட்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.8064516129
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top