பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமான ராஷ்ட்ரீய உச்சதர் சிக்க்ஷா அபியான் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மாநிலங்களின் வகைக்கு ஏற்ப பொதுப்பிரிவு மாநிலங்களுக்கு 60 சதவீதமும், சிறப்புப்பிரிவு மாநிலங்களுக்கு 90 சதவீதமும் மத்திய அரசின் நிதி உயர் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்படுகிறது. மாநிலங்களின் உயர் கல்விக் கவுன்சில்களின் மூலமாக மத்திய அரசின் அமைச்சகங்கள் வழங்கும் நிதிவுதவி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உயர்க்கல்வித் துறையில் சிறப்பான சாதனைகளை எட்டுவது, பலருக்கும் கல்வி வாய்ப்புகள் அளிப்பது, சமத்துவ நெறியை வளர்த்தெடுப்பது போன்ற மாநிலங்களின் வளர்ச்சி உத்திகளைப் பிரதிபலிக்கின்ற அவற்றின் உயர்கல்விக் கவுன்சில்களின் திட்டங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நிதிவுதவி அளிக்கப்படும்.

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியானின் நோக்கம்

  • கல்வி நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள நெறிகளை தவறாமல் பின்பற்றி தரச்சான்று பெறுவதற்கு கட்டாயமாக்கிக் கொள்கின்ற வகையில் சுயநிர்ணயம் செய்து கொள்கின்ற அளவிற்கு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துதல்.
  • மாநிலப் பல்கலை கழகங்களின் சுயாட்சியை மேம்படுத்துவதுடன் கல்வி நிறுவனங்களின் ஆளுகையை மேம்படுத்துதல். இதற்கென மாநில அளவில் திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு அமைப்பினை உருவாக்கி, சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தூண்டுவிப்பதாக இருத்தல்
  • கல்லூரிகளுக்கு இணைவுதருதல், பாடத்திட்டம் வரையறுத்தல், தேர்வு முறைகள் ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொணர்தல்.
  • எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலும், தரமான பேராசிரியர் போதிய அளவில் இருப்பதை உறுதிசெய்தல்
  • கல்லூரி – பல்கலைக்கழகப் பேராசியர்கள் புதுமை முயற்சிகளிலும் உயர் ஆய்வுகளிலும் ஈடுபடுவதற்கான உகந்த சூழலை உருவாக்குதல்
  • தற்போதுள்ள கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது, புதிய கல்லூரிகள் – பல்கலைக்கழகங்களைத் கொடங்குவது என்று கல்வித்தளத்தை விரிவாக்கி. உயர்க்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற இலக்கை எட்டுவதற்கு உதவுதல்.
  • உயர்க்கல்வித் துறையில் நிலவும் வட்டார சமச்சீரற்ற சேர்க்கை களைதல். அதாவது இதுவரை உயர்க்கல்வி நிலையங்கள் இல்லாத பகுதிகளிலும், உயர்க்கல்வி நிலையங்கள் போதிய அளவில் இல்லாத பகுதிகளிலும் புதிய கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துதல்
  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், மாற்றித்திறனாளர்கள் உள்ளிட்டோருக்கு போதிய உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் சமத்துவ நெறிமேம்பட உதவுதல்.

கூறுகள்

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷாஅபியான் என்ற இத்திட்டத்தின் படி தற்போதுள்ள தன்னாட்சி கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டுப் பல்கலைக் கழகங்களாக்கப்படும். அதேபோல ஒரு பகுதியில் உள்ள கல்லூரிகள் ஒரு தொகுப்பாக்கியும் பல்கலைக்கழகங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும். புதிய முன்மாதிரி பட்டப்படிப்புக் கல்லூரிகளும் புதிய தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கட்டமைப்பு வசதிகள் புதிதாக உருவாக்கித் தரப்படும். பேராசியர் பணி ஆளெடுப்புக்கு உதவி, பேராசியர்களின் நிர்வாகங்களுக்குத் தலைமைப்பண்பு மேம்படுத்தல், ஆகியவையும் ராஷ்ட்ரீய உச்சதர் சிக்‌ஷா அபியான் கீழ் மேற்கொள்ளப்படும். திறன் மேம்பாட்டுக்காக தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுவிட்டது. தொழில் பாடக்கல்வியை கல்லூரி பல்கலைக்ககழகக் கல்வியுடன் இணைப்பதும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களிலும் மறுசீரமைப்பு சேர்க்கையிட அதிகரிப்புப் போன்றவற்றுக்கும் ராஷ்ட்ரீய உச்சதர் சிக்க்ஷா அபியான் நிதிஉதவி செய்கிறது.

ஆதாரம் : மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

2.89795918367
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top