பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண் குழந்தைகளின் நலம்

பெண் குழந்தைகளின் நலம் தொடர்பான திட்டங்கள் மற்றும் பிற குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பல திட்டங்களை வழங்கி வருகிறது.

கிஷோரி சக்தி யோஜனா எனும் திட்டம் 6118 ஒருங்கிணைந்த சிறார் (குழந்தைகள் / இளையோர்) மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பதினொன்று முதல் பதினெட்டு (11 – 18) வயதுடைய இளம் பெண்களுக்கு சுய முன்னேற்றம், ஊட்டச்சத்து, உடல் நலம், இலக்கியம், தொழிற்சார்ந்த மற்றும் பிற திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

இளம் பெண்களுக்கான (11 முதல் 18 வயது வரையுள்ள) ஊட்டச்சத்துத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டம் நாட்டின் 51 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. சரியான உணவூட்டமில்லாத 11 – 19 வயது வரையுள்ள இளம் பெண்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு 6 கிலோ என்ற அளவில் உணவு தானியம் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தகவல் மூலம்:PIB

பெண்களும் கல்வியும்

அனைவருக்கும் கல்வி என்பதில் இந்திய அரசாங்கம் தனது வலுவான உறுதிமொழியை தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆசியாவில், பெண்கல்வி விகிதத்தில், இந்தியா, இன்னும் கீழான நிலையிலேயே இருக்கிறது. 1991இல் 7 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட 33 கோடி பெண்களில், 40 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். இதன் அர்த்தம், இன்னும் 20 கோடிக்கு அதிகமான பெண்கள் கல்வியறிவு பெறாதவராக இருக்கிறார்கள் என்பதே.

பெண்களிடையே காணப்படும் குறைந்த கல்வியறிவு, அவர்கள் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களது குடும்ப வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. கல்வியறிவு இல்லாத பெண்களிடையே, அதிக அளவு பிரசவத்தின் போது தாய்மார்கள் மரணம், தேவையான சத்துக்களின் பற்றாக்குறை, குறைந்த அளவே சம்பாதிக்கும் திறன், வீட்டிற்குள் கொடுக்கப்படும் குறைவான உரிமை என பல்வேறு வகையான குறைபாடுகளை, ஆய்வுகள் பல சுட்டிக் காட்டுகின்றன.

பெண்களின் கல்வியறிவு போதாமை, அவர்களுடைய குழந்தைகளின் சுகாதாரத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதமும் அவற்றின் தாய்மார்களின் கல்வியறிவு விகிதமும் ஒரு ஆய்வின் படி எதிரிடையாக சம்மந்தப்பட்டுள்ளது. கூடுதலாக, நாட்டில் கல்வியறிவு பெற்ற மக்களின் பற்றாக்குறை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாய் இருக்கிறது

கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBVs) திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிகள்

கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தை இந்திய அரசு 2004 -ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் தொடங்கியது. கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டவை.

1.இந்தத் திட்டத்தின் உள்ளடக்கங்களாக அமைய உள்ள விஷயங்கள் பின்வருமாறு

2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ள / கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா கல்வி நிலையங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட நிதித் தொடர்பான விதிமுறைகள் பொருந்தும். 2007 மார்ச் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள தற்போதைய 2180 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா கல்வி நிலையங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொடர் மானியம் மட்டுமே பொருந்தும். இது, 2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

2. திட்டத்தால் பயனடைவோர் விவரம்

2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கிராமப்புறப் பெண்களின் கல்வியறிவு தேசியச் சராசரியை விடக் குறைவாகவும் கல்வியறிவின் பாலின வேறுபாடு தேசியச் சராசரியை விட அதிகமாகவும் இருக்கும். கல்வியில்  மிகவும் பின்தங்கியுள்ள மண்டலங்களில் (ஈ.பி.பி.) மட்டுமே இத்திடம் செயல்படுத்தப்படும்,

3. குறிக்கோள்

சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகள் தங்கிப் படிக்க ஏதுவான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இணைந்த ஆரம்பப் பள்ளிக்கூடங்களை அமைத்து அக்குழந்தைகளுக்குத் தரமான கல்வி எளிதில்  கிடைக்குமாறு செய்வதுதான் கே.ஜி.பி.வி.-யின் நோக்கமாகும்.

4. செயல்படுத்தும் முறைகள்

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் பள்ளி ஒன்றுக்கு நடப்புச் செலவாக ரூ.19.05 லட்சம் மற்றும் மூலதனச் செலவாக  ரூ.26.05 லட்சம் ஒதுக்கி, 500 முதல் 750 வரை தங்கிப் படிக்கும் வசதியுடைய பள்ளிகள் திறக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

5 .கே ஜி பி வி திட்டத்தின் கீழ் நிதி விதிமுறைகள்

2007 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சர்வ சிக்ஷா அபிக்ஞான் திட்டத்தின் ஓர் அங்கமாக கே ஜி பி வி திட்டம் செயல்படுத்தப்படுவதால், சர்வ சிக்ஷா அபிக்ஞான் போலவே மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் நிதி உதவி கே ஜி பி வி திட்டத்திற்கு வழங்கப்படும்.

ஆதாரம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

2.90291262136
செந்தில் குமார் Jan 26, 2017 05:19 PM

தேவை இல்லாத விளம்பரம்கள் நிறைய
தொலைகாட்சியில அடிக்கடி காட்டுறீங்க மக்களுக்கு தேவையான திட்டத்தை அடிக்கடி ஔிபரப்பளாமே

TASNA Mar 22, 2016 11:43 AM

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் பெறுவர்.

சத்யா Mar 21, 2016 11:16 PM

நடுத்தர வர்க்கத்தை சார்ந்த நான் என் மகளுக்கு அரசு திட்டத்தின் கீழ் படிக்க வைக்க விரும்புகிறேன்.என் மகள் 7ஆம் வகுப்பு படிக்கிறாள்.என்ன செய்யலாம்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top